Published:Updated:

ஜெகம் புகழும் ஸ்ரீமத் ராமாயணம்!

ராம்... ராம்... ராம்...

ஜெகம் புகழும் ஸ்ரீமத் ராமாயணம்!

ராம்... ராம்... ராம்...

Published:Updated:
ஜெகம் புகழும் ஸ்ரீமத் ராமாயணம்!
##~##
ஸ்ரீ
ராம அவதாரம் பூர்ண அவதாரம் என்று பெரியோர்களால் போற்றப்படுகிறது. 'கற்பார் ராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ’ என்கிறார் நம்மாழ்வார். ராமாயணத்தை தராசின் ஒரு தட்டிலும், நான்கு வேதங்களை மற்றொரு தட்டிலும் வைத்தால் ராமாயணத்தின் பக்கமே தாழ்ந்திருக்கும். காரணம், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தர்மசாஸ்திரங்களைக் காட்டிலும், ஸ்ரீராம காவியத்தில் அதிகமான நீதி நெறிகளைக் கூறியுள்ளார் வால்மீகி!

நாரதர் விவரித்தவாறு, ரகுவம்சக் கதையை வால்மீகி இயற்றிட, இதை முதலில் பாடியது... ஸ்ரீராமனின் மகன்களான லவனும் குசனும்!

சரயு நதிக்கரையில் அழகுற அமைந்த கோசல தேசத்தை ஆண்ட தசரதன், குழந்தைப் பேறு வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். யாகப் பலனாகக் கிடைத்த பாயசத்தை மனைவியரிடம் தந்தான். அவர்களும் ஆனந்தமாய் பருகினர்.

அன்றிலிருந்து 12-வது மாதம்- வளர்பிறை 9-ஆம் நாள், புனர்வசு நட்சத்திரத்தில், கர்க்கட லக்னத்தில் ஸ்ரீராமனை ஈன்றெடுத்தாள் கோசலை. அதேபோல் கைகேயிக்கு பூச நட்சத்திரத்தில் பரதனும், சுமித்ராவுக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் லட்சுமணனும், சத்ருக்னனும் பிறந்தனர்.

ஜெகம் புகழும் ஸ்ரீமத் ராமாயணம்!

சகோதரர்கள் நால்வரும் குரு வசிஷ்டரிடம் முறையே வித்தைகள் கற்றனர். நற்குணங்களுடன் வளர்ந்தனர். ஒருநாள்... அரண்மனைக்கு வந்த விஸ்வாமித்திரர், தன் யாகத்தைக் காக்க ராம-லட்சுமணரை தன்னுடன் அனுப்பும்படி தசரதரிடம் வற்புறுத்திக் கேட்டு அழைத்துச் சென்றார். அங்கே, யாகத்துக்குத் தொல்லை தந்த தாடகை முதலான அசுரக் கூட்டத்தை அழித்தான் ஸ்ரீராமன். தொடர்ந்து, விஸ்வாமித்தி ரரின் அறிவுரைப்படி, அவருடன் மிதிலைக்கு பயணித்தான். வழியில் அகலிகைக்கு விமோசனம் தந்தான்!

ஜெகம் புகழும் ஸ்ரீமத் ராமாயணம்!

ஜனகரின் அரண்மனையில் வில் ஒடித்து, சீதையை மணந்து அயோத்திக்குத் திரும்பினான். இனிமையாகக் கழிந்தது இல்லறம். இந்த நிலையில், ஸ்ரீராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத் தார் தசரதன். ஆனால், கூனியின் சதியாலும் கைகேகியின் பிடிவாதத் தாலும் ஸ்ரீராமன், சீதையுடனும் தம்பி லட்சுமணனுடனும் கானகம் செல்ல நேர்ந்தது.

கானக பயணத்தில் பல்வேறு முனிவர்களைச் சந்தித்த ஸ்ரீராமன், அகத்தியரின் அறிவுரைப்படி பஞ்சவடியை அடைந்தான். அங்கே அவர்கள் தங்கியிருந்தபோதுதான், சூர்ப்பணகை வந்தாள். அடாத செயலால் தண்டனைக்குள்ளானாள். இலங்கை சென்று அண்ணனிடம் அவள் முறையிட, ராவணன் சீதையைக் கவர்ந்து செல்ல திட்டமிட்டான். மாரீசனை பொன் மானாக உருமாற வைத்து, சூழ்ச்சி செய்து சீதையைக் கவர்ந்து சென்றான்.

மிகவும் கவலை கொண்ட ஸ்ரீராமன், தம்பியுடன் சீதையைத் தேடி அலைந்ததும், அவள் கடத்திச் செல்லப்பட்டாள் என்பதை ஜடாயுவின் மூலம் அறிந்ததும், பிறகு அவர்கள் சுக்ரீவனைச் சந்தித்ததும், வாலி வதம் நிகழ்ந்ததும் நாமறிந்ததே!

ஜெகம் புகழும் ஸ்ரீமத் ராமாயணம்!

சீதையைத் தேடி திக்கெட்டும் புறப்பட்டது வானரசேனை. அங்கதன் தலைமையில் சென்ற ஒரு குழு, சம்பாதியின் மூலம் சீதாதேவி இலங்கையில் இருப்பதை அறிந்தது. அனுமன் கடல் கடந்தான். அன்னையைக் கண்டான். இலங்கையைத் தீக்கிரையாக்கிவிட்டுத் திரும்பினான். கண்டேன் சீதையை எனும் தகவலை அண்ணலிடம் உறைத்தான்.

பிறகென்ன... சேதுபாலம் அமைத்து ஸ்ரீராமன் லங்காதீவுக்கு சென்று ராவண கூட்டத்தை அழித்து, விபீஷணனுக்கு பட்டம் சூட்டி, வெற்றித் திருமகனாக நாடு திரும்பினான். ஸ்ரீராம பட்டாபிஷேகம் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது!

ஜெகம் புகழும் ஸ்ரீமத் ராமாயணம்!