Published:Updated:

குடலை இட்லி... கோரைக்கிழங்கு பிரசாதம்!

குடலை இட்லி... கோரைக்கிழங்கு பிரசாதம்!

குடலை இட்லி... கோரைக்கிழங்கு பிரசாதம்!

குடலை இட்லி... கோரைக்கிழங்கு பிரசாதம்!

Published:Updated:
குடலை இட்லி... கோரைக்கிழங்கு பிரசாதம்!
##~##
சி
தம்பரத்தில் சாயங்காலம் 2-ஆம் கால பூஜையின்போது இறைவனுக்கு சம்பா சாதத்துடன், கொத்சு நைவேத்தியம் செய்கிறார்கள். வேக வைத்த கத்தரிக்காயை இடித்து, உப்பு- புளி சேர்த்து சுண்டக் கொதிக்கவிட்டு, பசை பக்குவத்தில் காரமல்லிப் பொடி சேர்த்து நல்லெண்ணெயில் கொதிக்கவிட்டு, தாளித்த சூட்டோடு இறக்குவர்; கொத்சு நைவேத்தியம் தயார்!

- இப்படி, விசேஷ பிரசாதங்களால் புகழ்பெற்று திகழ்கின்றன சில திருத்தலங்கள்!

• கேரளாவில், கூடல்மாணிக்க க்ஷேத்திரம் என்ற ஊரிலும் கத்தரிக்காய் நைவேத்தியம் பிரபலம்.

• மார்கழி மாதம் ஸ்ரீகுருவாயூரப்பன் ஆலயத்தில் குசேல தினம் கொண்டாடப்படுகிறது. அன்று முழுவதும் குருவாயூரப்பனுக்கு அவல் சம்பந்தப்பட்ட நிவேதனமே சமர்ப்பிக்கப்படும்.

• மானசரோவரின் கரையில் பழைமையான புத்தர் கோயில் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு வேக வைத்த கிழங்குடன், பிஸ்கட்டையும் பிரசாதமாகத் தருகின்றனர்.

• ஸ்ரீரங்கம்- ரங்கநாதருக்கு, தேங்காயை உடைத்து நைவேத்தியம் செய்வதில்லை. தேங்காயைத் துருவி அந்தத் துருவலையே படைக்கிறார்கள். தேங்காயை உடைத்தால் அந்த சத்தம், பள்ளிகொண்டிருக்கும் இறைவனை எழுப்பிவிடும் என்பது ஐதீகமாம்.

• குற்றாலத்தில் ஸ்ரீகுற்றால நாதருக்கு, நாள்தோறும் சுக்கு, மிளகு போட்டு கஷாயம் வைத்து படைக்கிறார்கள்.

• ஸ்ரீமுஷ்ணம் பூவராக ஸ்வாமி திருக்கோயிலில், கோரைக் கிழங்கைப் பக்குவமாகச் சமைத்து பகவானுக்குப் படைத்து வழிபடுவர்.

• காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் குடலை இட்லி பிரசாதம், விசேஷம்!

• திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியம் மிகவும் வித்தியாசமானது.

காலை வேளைகளில் புழுங்கல் அரிசிச் சோறும் கீரையும் படைக்கப்படுகின்றன. இரவில் வேகவைத்த பாகற்காயுடன் அன்னம் படைக்கப்படுகிறது. இவற்றை ஈசனின் கருவறைக்கு முன் உள்ள கருங்கல் மேடையில் சமர்ப்பிக்கிறார்கள்.

• திருச்செந்தூர் ஸ்ரீஆறுமுகப் பெருமானுக்கு உதய மார்த்தாண்ட நைவேத்தியம் விசேஷம். அதாவது தோசையும், கஞ்சியும்!

- ஆர்.மகாதேவன், திருநெல்வேலி