Published:Updated:

குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்தார் குடியரசுத்தலைவர்

குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்தார் குடியரசுத்தலைவர்
குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்தார் குடியரசுத்தலைவர்
குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்தார் குடியரசுத்தலைவர்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது குடும்பத்துடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

ஐதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்த பிரணாப் முகர்ஜி, முதலில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்குச் சென்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து திருமலை, வராக சுவாமி கோயிலில் தரிசனம் செய்தபின் பேட்டரி கார் மூலம் ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார்.

ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவருக்கு உயர் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், தேவஸ்தான அதிகாரிகள் அவரை அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர். குடியரத்தலைவர் வருகையையொட்டி ஏழுமலையான் கோயிலில் பகல் 1 மணி முதல் 3 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.