Published:Updated:

ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!

ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!
ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!
ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜனவரி 11-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஜனவரி 11-ம் தேதி ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, ஜனவரி 11-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 5.15 மணிக்கு அருள்மிகு சபாபதி சன்னதியில் ஆருத்ரா சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறும்