Published:Updated:

கங்கை கொண்ட சோழ புரம் பிரகதீஸ்வரர் கும்பாபிஷேக விழா!

கங்கை கொண்ட சோழ புரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று கும்பாபிஷேகத்திற்காக கங்கை நதியிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகிலுள்ள திருலோக்கி கிராமத்திலிருந்து மதியம் 2 மணியளவில் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு  திருப்பனந்தாள் அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை விநாயகர் கோயிலுக்கு மாலை 3.00 மணிக்கு வந்தடைந்தது. மீண்டும் அங்கிருந்து யானை, குதிரை, தப்பாட்டம், என சிவ வாத்தியங்கள் இவற்றோடு பெண்கள் முளைப்பாரி தட்டுகள் ஏந்திவர ஊர்வலம் மலை 6 மணிக்கு கங்கை கொண்ட சோழ புரத்தை வந்தடைந்தது. ஒவ்வோர் நாளும் இரவு கர்நாடக இசை மற்றும் கிராமிய  நடன நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. முதல்நாளான இன்று ஜனார்தனன் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இதனிடையே, நாளை முதல் யாக சாலை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.       

அடுத்த கட்டுரைக்கு