Published:Updated:

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? #PhotoStory #Astrology

கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? #PhotoStory #Astrology
கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன்? #PhotoStory #Astrology

தூங்கும்போது நம் மனம் காணும் கனவுகளைச் சொல்லில் அடக்கிவிட முடியாது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வண்ண ஜாலங்களாகக் கனவுகள் நம் வாழ்வில் இடம்பிடிக்கின்றன. நாம் காணும் கனவுகளும் அவற்றின் பலன்களும் எப்படி இருக்கும் என்று ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறிய பதில்களின் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்காக... 

கனவு காணுங்கள் என்றார் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம். கனவுகளே வாழ்க்கை இல்லை... கனவுகள் இல்லாமலும்

வாழ்க்கை இல்லை என்றார் கமல்ஹாசன். இந்தக் கனவை நாம் நினைத்த மாத்திரத்தில் கண்டுவிட முடியுமா? ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது நாமே அறியாத வேளையில் வருவதுதான் கனவு. 

எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அப்படிப்பட்ட கனவை நாம் காணும்போது, பெரும்பாலும் நமக்கு விழிப்பு ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட வேளைகளில் நாம் எழுந்து, படுக்கையில் அமர்ந்தபடியேகூட சுவாமியை சிறிது நேரம் வணங்கிவிட்டு, பிறகு உறங்கச் செல்லலாம். 

நாம் காணும் கனவில் வரும், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கேற்ப பலன்களும் மாறும். என்ன வகையான விலங்குகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பது பற்றிப் பார்ப்போம். 

 
* புலி,சிங்கம் போன்ற வனவிலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி பெறுவதுபோல கனவு வந்தால், நமக்கு வந்த எதிர்ப்புகளை முறியடித்து நாம் வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தம். 


* கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவதுபோல கனவு வந்தால், நாம் சொந்த ஊருக்குச் சென்று, நம் உறவினர்களைச் சந்திப்போம். இல்லாவிட்டால், அவர்கள் நம்மைப்பார்க்க வரப்போகிறார்கள் என்று பொருள்.   


* நரி கனவில் வந்தால், சொந்த ஊரை விட்டுச் சென்று வேறு ஊரில் பிழைப்பு நடத்தவேண்டி வரும்.


* குதிரை கனவில் வந்தால், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குதிரையின் மீது ஏறி சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். 


*பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போல கனவு வந்தால், புதிய சொத்துக்கள் வாங்குவோம். 


* காளை மாடு துரத்துவது போல கனவு வந்தால், வீண் பிரச்னைகள் வந்துபோகும். 

* ஆடுகள் நம் கனவுகளில் வந்தால், புதிதாக காரோ, பைக்கோ வாங்கப்போகிறோம் என்று நாம் அறியலாம். 


* பாம்பு கனவில் வந்தால், பெரிய அளவில் நமக்குத் தொல்லை தந்து வந்த கடன் பிரச்னைகள் நம்மை விட்டு விலகும். 


* நாய்கள் குரைப்பது போல கனவு வந்தால், வீண்பழி வந்து சேரும். 


* குரங்குகள் கனவில் வந்தால், வீட்டிலோ, நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் வரும். கடன் பிரச்னை அதிகரிக்கும். 

* யானை நமது கனவில் வந்தால், நமக்குப் பெரும் செல்வம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கப்போகிறதென்று பொருள். யானையின் மீது உட்கார்ந்துகொண்டு சவாரிசெய்வது போல கனவு வந்தால், நமக்கு பதவிஉயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கலாம். 

* மயில் அகவுவது போல கனவு வந்தால், கணவன் மனைவி இடையே அன்பு மிகுதியாகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.  


* வானத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்துசெல்வது போல கனவுகள் வந்தால், நெடுநாட்களாக நமக்கு இருந்து வந்த துன்பம் நம்மை விட்டு விலகும். புதிய பதவி தேடி வரும். புகழ் கூடும். 


* கிளிகள் பறந்து, மரத்துக்கு மரம் செல்வது போல கனவு கண்டால், பால்ய நண்பர்களைச் சந்தித்து உரையாடுவீர்கள். மனம் ரொம்பவே லேசாகிப்போகும். புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.


- தொகுப்பு: எஸ்.கதிரேசன்