Published:Updated:

சிவராத்திரி விழா:திருவண்ணாமலையில் லட்ச தீபம்!

சிவராத்திரி விழா:திருவண்ணாமலையில் லட்ச தீபம்!
சிவராத்திரி விழா:திருவண்ணாமலையில் லட்ச தீபம்!

சிவராத்திரி விழா:திருவண்ணாமலையில் லட்ச தீபம்!

சிவராத்திரி விழா:திருவண்ணாமலையில் லட்ச தீபம்!

நாளை நடைபெறும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை கோயிலில், இரவு லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாளை அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை லட்சார்ச்சனை, மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகமும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளன. இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடும், 9 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 11 மணிக்கு இரண்டாம் கால லிங்கோத்பவர் பூஜை, நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடைபெறுகின்றன. தொடர்ந்து, மறுநாள் காலை 4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற உள்ளன.

மாசி மாதம், சதுர்த்தசி நாளில், நாளை வரும் மகா சிவராத்திரி, தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவதால், நாளைய தினம் திருவண்ணாமலையில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரியன்று நள்ளிரவில், லிங்கோத்பவருக்கு நடைபெறும் பூஜை, அபிஷேகம் விசேஷமானது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே லிங்கோத்பவர் வழிபாட்டில் தாழம்பூ பயன்படுத்தப்படும். மகா சிவராத்திரியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயில் பிரகாரங்களில் நாளை இரவு லட்ச தீபம் ஏற்றப்பட இருக்கிறது.
 

படம்: ரா.வளன்

அடுத்த கட்டுரைக்கு