Published:Updated:

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்... அல்ல... வழிகள்!

மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்... அல்ல... வழிகள்!
மூடிய கதவுகள் திறக்க ஸ்ரீஅன்னை காட்டும் அற்புத மொழிகள்... அல்ல... வழிகள்!

ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா. ஆன்மிக, அறப்பணிகளின் காரணமாக அவரது பக்தர்களால் ‘அன்னை’ என்று போற்றப்பட்டவர். எளிய மக்களிடம் இவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் அறநெறி, ஒழுக்கம், மன அமைதி, சுயமுன்னேற்றம் என எண்ணற்ற தத்துவங்களை வலியுறுத்துபவை. சிறப்புமிக்க அவரது தத்துவ சிந்தனைகள், நம்மை செம்மையாக்கி, நல்வழிப்படுத்தக் கூடியது. அவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன்மொழிகள்  இதோ உங்கள் பார்வைக்காக...

பொன்மொழிகள்


* பொறாமை என்பது குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கும், மனதைரியம் இல்லாதவர்களுக்கும் வரும் உணர்வு. அவர்களைப் பார்த்துப் பரிதாபம்தான் படமுடியும். 

* மனம் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், அது அருளின் செயலுக்குத் தடையாக ஆகிவிடுகிறது. 

* பிராணனிலும் உடலிலும் உதவியைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது உனது மனம்தான். துள்ளல் போடும் இந்த மனதை உன்னால் முடிந்தமட்டும் அமைதிப்படுத்து, பலன் உண்டாவதை நீ காண்பாய். 

* தற்பெருமை பேசுவது, உங்கள் முன்னேற்றத்துக்கு முதல் தடையாகும். 

* சுயநலம், சுயபரிதாபம் இவை இரண்டும் கடவுளின் உதவி மற்றும் அன்பைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன. 

* உனது உண்மையான தேவைகள் அனைத்தும் உன்னைத் தேடி வரும். 

* உனது மனஅழுத்தத்துக்கு முக்கியத்துவம் தராதே . மனஅழுத்தம் தரக்கூடிய எந்த ஒரு விஷயமும் உனக்கு நடக்கவில்லை என்று நினைப்பதுதான், அதில் இருந்து வெளியே வருவதற்கான ஒரே வழி. 

* மனம் மிகவும் மந்தமாக இருப்பதால், சௌகரியமான விடைகள் வேண்டுமென்று கேட்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. ஒவ்வொன்றும் வேறுபடுகிறது. 

* உனது சந்தேகங்களுக்கு விடை கொடுத்துவிடு. அவை உனக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. 

* சில சமயங்களில் அமைதியாக இருப்பதைக்காட்டிலும், எது உண்மையோ அதை உள்ளபடியே கவனமாகப் பேசுவது நல்லது. 

* இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் மூலம் மூடிய அனைத்து கதவுகளையும் நீ திறக்கலாம். 

* தவறான பாதையில் செல்பவர்களுடன் சேர்ந்து நீயும் அதே பாதையில் பயணிக்காதே. ஒரு வேளை நீ அந்தப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தால் உடனே விலகி விடு. 

* உன் குழந்தையை நீ அடிக்காதே. அது உன் உணர்வை மறைப்பதோடு மட்டுமல்லாமல், அவன் குணத்தையும் பாழாக்கிவிடும். 

* உன் வேலையைப் பரிசுத்தமாக நீ செய்துவந்தால், அதுவே உன்னை என் அருகில் அழைத்து வரும். 

* அடுத்தவர்களைக் குறைகூறுவதாலும், மதிப்பீடு செய்வதாலும், உங்களோடு ஒப்பிடுவதாலும் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள். 

* என்னுடைய சாதனையை விரைவுப்படுத்த, நான் என்ன செய்ய வேண்டும்? திட்டவட்டமான குறிப்பு கிடைக்கும் வரை காத்திரு. மனம் தலையிடுவதும் முடிவுகள் செய்வதும் தன் முனைப்பானவை. தெளிவான குறிப்பு மனதின் மோன நிலையில் கிடைக்கும்.

* வேதனைப்படாதே, மனதை மிகவும் அமைதியாக வைத்திரு. உண்மையான ஞானம் மனதுக்கு அப்பாலிருந்து வருகின்றது. 

* எவன் ஒருவன் தன் கருத்தை மட்டும் முன்னிறுத்துகின்றானோ, அவனது மனதும், புத்தியும் குறுகியதாகிறது.

எனது ஆசீர்வாதமும், அன்பும் உனக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆனால், அதை நீ உணர வேண்டுமென்றால் ஒழுக்கத்துடனும், கவனத்துடனும், விழிப்புஉணர்வோடும் இருக்க வேண்டும்.


தொகுப்பு: கி.சிந்தூரி