Published:Updated:

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

Published:Updated:
ஓம் நமசிவாய
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

ண்ணுக்குப் புலப்படும் உருவத் திரு மேனிக்கும் புலப்படாத அருவத் திரு மேனிக்கும் மூலமானவர் சிவபெருமான். அவரை வழிபட ஓர் அடையாளமாக விளங்குவது சிவலிங்கம். லிங்கம் என்றால் குறியீடு அல்லது சித்திரித்தல் எனப் பொருள். லிங்- லயம்; கம்- தோற்றம். அதாவது உலகு, தோன்றி ஒடுங்கும் இடம் என்பர். லிம் - உலக முடிவில் அண்ட சராசரங்களும் லயிப்பதற்கு உரிய இடம் என்றும், கம்- அவ்வாறு லயித்த பொருட்கள், அதிலிருந்து வெளிப்படுவது என்றும் கூறலாம். லிங்கம் என்பதற்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. படைத்தல் உட்பட ஐந்தொழில்களால் உலகைப் பிரகாசிக்கச் செய்வது என்பர். எனவே, லிங்க வடிவம் என்பது பரம்பொருளுக்கு உரிய அடையாளம்.

லிங்கத்துக்கு மூன்று பகுதிகள் உண்டு. அடிப்பகுதி- பிரம்ம பாகம். நடுப்பகுதி- ஆவுடை என்ற பீடத்துள் அமைந்துள்ள விஷ்ணு பாகம். மேற்பகுதியில் உள்ள பாணம்- ருத்ர பாகம். பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம், பூமிக்குள் மறைந்து நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுவின் பாகம் அபிஷேக நீரைத் தாங்கி நிற்கும். நெருப்புக்கு அதிபதியான சிவ பாகம், மேலோங்கி ஜோதி போல் ஒளியுடன் இருக்கும். எனவே, லிங்கம் என்பது மும்மூர்த்திகளின் வடிவாகும்.

லிங்கத்தில் பல வகை உண்டு. குருவின் அனுமதி மற்றும் உபதேசத்துடன் பெறுவது இஷ்ட லிங்கம் . இது ஆன்மார்த்த லிங்கம் என்றும் கூறப்படும். உலக உயிர்களுக்கு அருள் புரியும் பொருட்டு தேவர்கள், முனிவர்கள் மற்றும் மனிதர்களால் விதிப்படி ஸ்தாபிக்கப்பட்டவை பரார்த்த லிங்கம் . தானாக உண்டானதும், கரடுமுரடாக உள்ளதுவும், எந்த வித ரேகையும் அற்றதாகவும் விளங்குவது சுயம்பு லிங்கம் . மயிலாடுதுறை அருகிலுள்ள ஆக்கூர் தலத்து இறைவனின் திருநாமம் ‘தான்தோன்றியப்பர்’. இவர் சுயம்பு லிங்கமாகத் திகழ்பவர்.

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

அம்பிகையால் வழிபடப் பெற்றது தேவிக லிங்கம். காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மை மணலால் லிங்கம் அமைத்து ஏகாம்பரநாதரை வழிபட்டபோது, பெருமான் வெள்ளப் பெருக்கு ஏற்படுமாறு செய்தார். இதனால் மணல் லிங்கத்தைத் தழுவி மகிழ்ந்தாள் அம்பிகை. பட்டீச்வரம் அருகில் உள்ள திருச்சக்திமுற்றம் தலத்தில் அம்பிகை, சிவலிங்கத்தை அணைத்த வடிவம், ‘சக்தி தழுவிய உடையார்’ எனப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி- திருக்கோவிலூர் பாதையில் ரிஷிவந்தியம் என்ற தலத்தில் உள்ள அர்த்தநாரீச்வர லிங்கம், இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்டது. இங்குள்ள பெருமான் அர்த்தநாரீச்வர கோலத்தில் இந்திரனுக்குக் காட்சியளித்ததாகத் தல புராணம் கூறுகிறது. இந்த லிங்கத்துக்கு தேன் அபிஷேகம் செய்யும்போது, பாணப் பகுதியில் அம்பிகையின் நிழல் உருவம் தோன்றுகிறது. தேன் முற்றிலுமாக வழிந்த பிறகு, இந்த நிழல் மறைகிறது என்கிறார்கள். தினமும் இங்கு அர்த்த ஜாம பூஜையின்போது தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது இந்த அதிசயத்தைக் காணலாம்.

தேவர்கள் அர்ச்சித்தது, திவ்ய லிங்கம் எனப்படும். உதாரணமாக வாயுதேவன் பூஜித்தது- வாயு லிங்கம், வருணன் பூஜித்தது- வருண லிங்கம், குபேரன் பூஜித்தது- குபேர லிங்கம்.

மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டது மானுட லிங்கம். இதற்கு உதாரணமாக மனிதனாக அவதரித்த ராமபிரான் ராமேஸ்வரத்தில் ஸ்தாபித்து, வழிபட்ட லிங்கத்தைச் சொல்லலாம்.

முனிவர்களால் பூஜிக்கப்பட்டது ஆர்ஷக லிங்கம்.

அசுரர்களால் பூஜிக்கப்பட்டது ராட்சச லிங்கம் . இதற்கு உதாரணம் பாண லிங்கம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, கோதாவரி ஆகிய நதிகளிலும், நேபாளம், கேதாரம் போன்ற இடங்களிலும் கிடைப்பவை பாண லிங்கங்கள். இவை, பாணாசுரனால் பூஜிக்கப்பட்டவை என்பர்.

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!
சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

மு க லிங்கம் என்பது ஒன்று முதல் ஐந்து முகங்கள் வரை கொண்டது. கிழக்கு முகம்- தத்புருஷம்- பொன் நிறம் உடையது. தெற்கு முகம்- அகோரம்- கறுப்பு நிறம். மேற்கு முகம்- சத்யோஜாதம்- வெண்மை நிறம். வடக்கு முகம்- வாமதேவம்- சிவப்பு நிறம். வடகிழக்கு- ஈசான முகம்- பளிங்கு நிறம். இந்த முக லிங்கங்களை வழிபட்டால், உலகில் வாழும் காலத்தில்- இம்மையில் எல்லா விதச் செல்வங்கள் மற்றும் சுக போகங்களும், மறுமையில் சிவ லோக பதவியும் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

ஒரு முகம் கொண்ட லிங்கம்- தத்புருஷ லிங்கம். கிழக்கு நோக்கியுள்ள இந்த முகம் பொன் நிறமானது. சாந்தமான இந்த ஒரு முக லிங்கத்தை வழிபடுவோர், சகல செல்வங் களுடன் யோகமான ராஜயோகம் அடைவர். கோயில்களில் ‘நிருதி’ என்னும் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இவற்றை ‘நிருதி லிங்கம்’ என்பர். மனிதனை வாகனமாகக் கொண்டவர் நிருதி எனும் தேவன். அவரால் வழிபடப்படும் இந்த லிங்கத்தை வணங்கு பவர்கள், ராஜயோகத்துடன், மனிதர்களை அடக்கி ஆளலாம் என்கிறார்கள்.

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்!

திருவண்ணாமலை அருணா சலேச்வரர் மூலஸ்தானம் அருகில் உள்ள நிருதி மூலையில் ஒரு முக லிங்கம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சபையிலும் ஒரு முக லிங்கம் இருக்கிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் லிங்கத்துக்கு முகம் இல்லா விட்டாலும், வெள்ளி, தங்கக் கவசங்களில் கண், மூக்கு, வாய் முதலியவற்றை அமைத்து அணிவிக்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் கவசத்துடனான முக லிங்கம் உள்ளது. காளஹஸ்தியில் முக லிங்கம் இருந்ததை கண்ணப்ப நாயனார் வரலாறு மூலம் அறிய முடிகிறது.

ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் பகுதியில் 2-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லிங்கம் ஒன்றில் சிவனின் முழு வடிவம் காணப் படுகிறது. இது மிகவும் முற்பட்ட வடிவம். ‘வேத சாரமான அக்னி, ருத்ரன் ஆகிய கூறுகளின் இணைப்பு வடிவம் இது!’ என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தற்போது, இந்த வடிவை ‘பரசுராமேச்வரர்’ என்கிறார்கள்.