Published:Updated:

தினம் தினம் திருநாளே!

தினம் தினம் திருநாளே!

தினம் தினம் திருநாளே!

தினம் தினம் திருநாளே!

Published:Updated:
அனந்த விரதம்
தினம் தினம் திருநாளே! - 2
தினம் தினம் திருநாளே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினம் தினம் திருநாளே!

கா ட்டில் எந்த விதமான ஆதரவும் இல்லாமல், பாண்டவர்கள் ஐந்து பேரும் தாயார் குந்தியுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். காலம் பொல்லாதது. அரசனையும் ஆண்டி ஆக்கும்; ஆண்டியையும் அரசன் ஆக்கும். பகவான் கிருஷ்ணன் உடன் இருக்கும்போதே, திரௌபதியின் குழந்தைகளை அஸ்வத்தாமா கொன்று குவித்தான். காலம் ஒருவனை பல சங்கடங்களில் சிக்க வைக்கும். அப்படிச் சிக்கித் தவிக்கும் காலத்தில், ‘ஐயோ! அம்மா... இப்படி ஆகிவிட்டதே!’ என்று விதியை நினைத்துக் கொண்டு, அழுதால், காலம் அவனைப் பழி வாங்கிவிடும். அந்தத் துன்பத்திலும் மறக்காமல் இறைவனை நினைத்து, உருகி அழைத்தால் அவன் காப்பாற்றப்படுவான்.

கஜேந்திரன் என்ற ராஜா யானை, தனது கூட்டத்தாருடன் நீரில் இறங்கியது. அப்போது, கஜேந்திரனின் காலை முதலை கவ்வியது. மற்ற யானைகள் அழுது, கதறி கஜேந்திரனை முதலையிடமிருந்து மீட்க முற்பட்டன. கஜேந்திரன் செய்வதறியாமல் திகைத்து நின்ற வேளையில் அதைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. காலம் கஜேந்திரனை கஷ்டத்தில் ஆழ்த்தியது. அப்போது, ‘ஐயோ’ என்று அலறியிருந்தால், அழிந்திருக்கும். இறைவனை அழைத்தது. யானை காப்பாற்றப்பட்டது. அது போல், பாண்டவர்கள் கௌர வர்களால் சூதாட்டத்தில் ஏமாற்றப்பட்டனர். கடைசி யில் சபையில் திரௌபதி அவமானப்படும் நிலை ஏற்பட்டது. அப்போதும் திரௌபதியை, ஒரு பெண் என்றும் பார்க்காமல் காலம் அவமானப்படுத்தியது. அந்த நிலையில் அவள், ‘ஐயோ’ என்று அலறியிருந்தால், அழிந்திருப்பாள்; கண்ணனை அழைத்ததால், காப்பாற்றப்பட்டாள்!

தினம் தினம் திருநாளே!

உத்தரையின் கருவில் இருந்த பாண்டவ வம்சத்தின் கடைசி வாரிசான பரீக்ஷித்தை, பிரம்மாஸ்திரம் ஏவி அழிக்கப் பார்த்தான் அஸ்வத்தாமா. பகவானை சரணாகதி அடைந்ததால், உத்தரை காப்பாற்றப்பட்டாள். காலம் ஒரு மனிதனுக்குக் கஷ்டத்தைக் கொண்டு வந்தாலும், அந்த நிலையிலும் மறக்காமல் கடவுளை உருகி அழைத்தோமானால், காப்பாற்றப்படுவோம்.

வனத்தில் வசித்த பாண்டவர்களை, பகவான் கிருஷ்ணன் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார். ஒரு முறை, பகவான் கிருஷ்ணரிடம், ‘‘எங்களுக்கு ஏன் இவ்வளவு துயரம்? நாங்கள் அப்படி என்ன பாவம் செய்தோம்? இவற்றிலிருந்து, எங்களுக்கு விமோசனம் இல்லையா? என்ன செய்தால், இவற்றிலிருந்து விடுபட்டு சந்தோஷத்தை அடைவோம்?’’ என்று தர்மபுத்திரர் மனம் தளர்ந்து பேசினார்.

கிருஷ்ணன் அவரை சமாதானப்படுத்தி, ‘‘அனந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், அனந்தமான பாவங்களும் போய், அனந்தமான நன்மைகள் ஏற்படும்!’’ என்றார். மேலும், அது சம்பந்தமாக ஒரு கதையையும் சொன்னார்: ‘‘சுமந்து, தீக்ஷ£ என்ற தம்பதி வெகு காலத்துக்கு முன்பு வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு சீலா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், தீக்ஷ£ காலத்தின் கொடுமையால் ஒரு நாள் திடீரென்று மரணமடைந்தாள். மனைவியை இழந்த சுமந்து மிகவும் வருந்தினார். எனினும், குழந்தையை வளர்ப்பதற்காக கர்கஸா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் எதற்காகக் கல்யாணம் செய்து கொண்டாரோ, அதற்கு விபரீதமாக நடந்தது. கர்கஸா, சீலாவைக் கொடுமைப்படுத்தினாள். எந்தவொரு சீர்வரிசையும் தராமல் சீலாவை கௌண்டின்யன் என்பவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்து, வீட்டை விட்டே அடித்துத் துரத்தினாள் கர்கஸா. அந்தச் சூழ்நிலையில் ஒரு நாள், சீலா சில பெண்கள் பூஜை செய்வதைப் பார்த்தாள்.

தினம் தினம் திருநாளே!

சீலா, ‘இது என்ன பூஜை? இதற்கு என்ன பலன்?’ என்று கேட்க, அவர்களோ, ‘இதன் பெயர் அனந்த விரதம். இதை மேற்கொண்டால் தெரிந்தோ, தெரியாமலோ பல பிறவிகளில் நாம் செய்த பாவங்களின் பலனாக நாம் அனுபவித்து வரும் துன்பங் கள் போய், அனந்தமான செல்வமும், நன்மை களும் ஏற்படும்!’ என்று கூறினர். உடனே சீலாவும் அவர்களுடன் சேர்ந்து, மிகவும் பக்தியுடன் அந்த விரதத்தை மேற்கொண்டு, விரதச் சரடை கையில் கட்டிக் கொண்டு, வீட்டுக்கு வந்தாள். கௌண்டின்யனோ, ‘‘பிறந்த வீட்டிலிருந்து எந்தச் சொத்தும் எடுத்து வரவில்லை. கையில் சரடு மட்டும் ஏன் கட்டி வந்தாய்?’’ என்று கோபத்துடன் கேட்டுவிட்டு அதை அறுத்து நெருப்பில் எறிந்தான். ஆனால், சீலா பாய்ந்து அதை எடுத்து பால்குடம் ஒன்றில் போட்டு வைத்தாள்.

அனந்த விரதத்தில் பூஜை செய்யப்பட்ட கயிற்றை அவமதித்ததால், அவன் வீட்டில் கடுமையான ஏழ்மை, நஷ்டம், வியாதி போன்ற பல வித கஷ்டங் களும் ஏற்பட்டன. அதனால், குடும்பத்தைத் துறந்த கௌண்டின்யன் காட்டுக்குச் சென்று தவம் செய் தான். அப்போது அந்த இடத்தில் பகவான், ஒரு வயோதிகர் போல் அவன் முன் தோன்றி, ‘நீ அனந்த விரதத்தில் பூஜை செய்யப்பட்ட கயிற்றை அலட்சியப்படுத்தியதால்தான் இவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிறாய். நீயும் உன் மனைவியும் சேர்ந்து, அனந்த விரதம் செய்யுங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும்!’ என்றார். அதன்படி, அவர்கள் அந்தப் பூஜையைச் செய்து எல்லையற்ற செல்வம், நன்மை, ஆரோக்கியம், ஆயுள் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை அடைந்தனர். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் விரதத்தைத் தொடர்ந்தனர்.’’

_ இதை பகவான் கிருஷ்ணனிடமிருந்து கேட்ட தருமபுத்திரரும், அனந்த விரதத்தைச் செய்து, எல்லா விதமான நன்மைகளையும் அடைந்தார். நாமும் இந்தப் பூஜையை, எல்லாப் பாவங்களுக்கும் பிராயச்சித்தமாகச் செய்து, வாழ்வை தினம் தினம் ஒரு திருநாளாக ஆக்கிக் கொள்வோம்.