Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்

பிட்ஸ்

Published:Updated:
துணுக்குகள்
பிட்ஸ்


திருட்டுப் பிள்ளையார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிட்ஸ்

ரு முறை ராம கவிராயர், உச்சிப் பிள்ளையாரை தரிசிப் பதற்காக திருச்சிக்கு வந்தார். எளிமையான உடை. தோளில் ஓர் அங்கவஸ்திரம். அதன் ஒரு முனையில் கையிலிருந்த காசை முடிந்து கொண்டு, மற்றொரு முனையில் பூஜைப் பொருட் களை முடிந்து கொண்டு, பூக் கடைகளிலிருந்து கிளம்பிய நறுமணத்தை நுகர்ந்தவாறே படியேறினார்.

தாயுமானவர் சந்நிதியில் சாயரட்சை பூஜையில் மனம் லயித்து, பக்தி மேலிட கைகூப்பித் தொழுதார். தீபாராதனை முடிந்து வெளியே வந்தவர், உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க மலை ஏறத் தொடங்கினார். அப்போதுதான் தனது அங்கவஸ்திர முடிச்சு அவிழ்ந்து, அதிலிருந்த காசு களவு போனதை உணர்ந்தார். இறைவன் சந்நிதியில் நெக்குருகி நின்றபோது, எவரோ திருடியிருக்க வேண்டும். கைக் காசு போனதும் அவருக்குக் கோபம் வந்தது. உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வந்ததால்தானே பணம் பறி போனது? ஆகவே, தனது காசைத் திருடியது பிள்ளையாரே என முடிவு செய்தார்.

அவ்வளவுதான்... கவிராயர் என்பதால் அவரது கோபம், ‘திருட்டு என்பது பிள்ளையாரின் பரம்பரை குணம்’ எனப் பொருள்படும் ஒரு வெண்பாவாக வெளிப்பட்டது:

தம்பியோ பெண் திருடி,
தாயாருடன் வந்த
வம்பனோ நெய் திருடி
மாயனாம் - அம்புவியில்
மூத்தப் பிள்ளை யாரே
முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தில் உள்ள குணம் .

‘தம்பி முருகன், வள்ளியைத் திருட்டுத்தனமாக மணந்தவன். மாமன் கண்ணனோ, கோகுலத்தில் வெண்ணெய் திருடுபவன். அந்தப் பரம்ப ரையில் வந்த பிள்ளையார் எனது முடிச்சை அவிழ்த்துக் கொண்டார்’ என்ற பொருள் கொண்ட வெண்பா அது.

_ ஆர். பிரகாஷ், பொன்மலை

நந்தி இல்லாத சிவாலயம்!

பிட்ஸ்

கே ரளத்தின் பம்பா நதிக் கரையில் மாணார் கிராமத்தில் திருக்குரட்டி பகுதியில் உள்ளது ஸ்ரீமகாதேவர் கோயில். உயர்ந்த மதில் மற்றும் கோபுரத்துடன் திகழும் இது, ஒரே இரவில் பூத கணங்களால் கட்டி முடிக்கப்பட்டது என்பது ஐதீகம்.

ஒரு முறை தட்ச யாகத்துக்குச் செல்ல, ஈசனிடம் அனுமதி வேண்டினார் பார்வதிதேவி. சிவபெருமான் மறுத்தார். பிறகு, பார்வதிதேவியின் வற்புறுத்தலுக்கிணங்க தட்ச யாகத்துக்குச் செல்ல அவரை அனுமதித்தார். தேவிக்குத் துணையாக நந்தி தேவரையும் உடன் அனுப்பினார். அதன் பிறகு, ரௌத்ரத்துடன் புறப்பட்ட சிவபெருமான், திருக்குரட்டியில் வந்து குடியேறினார். நந்தி, பார்வதி தேவிக்குத் துணையாகப் போனதால், இங்கு நந்தி கிடையாது. இந்தக் கோயிலில் சிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது 10 நாட் கள் சகஸ்ர கலச அபிஷேகம் நடைபெறுகிறது. நிறைவு நாளன்று பூசாரி, சிவனது தாண்டவக் கோலத்தில் கோயில் அக்னி மீது நடனமாடி வருவது மெய்சிலிர்க்க வைக்கும். இந்தக் கோயிலில் உள்ள பார்வதிதேவி சந்நிதி சிவராத்திரி நாளில் மட்டுமே திறக்கப்படும்.

இங்கு மகாவிஷ்ணுவுக்கும் ஒரு சந்நிதி உள்ளது. பண்டைக் காலத்தில் முஸ்லிம் வியாபாரி ஒருவரை கொள்ளையர்கள் துரத்தினர். இந்தக் கோயிலுக்குள் இருந்து வந்த ஒருவர், வியாபாரியைக் காப்பாற்றினாராம். அப்படி வந்தவர் மகா விஷ்ணுவே என்பது ஐதீகம். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இன்றும் கோயில் மதிலுக்கு வெளியே சந்தன ஊதுவத்தி ஏற்றி, முஸ்லிம்கள் வணங்கிச் செல்கிறார்கள்.

_ எஸ்.எஸ். மணி, திருவனந்தபுரம்-40

புண்ணியத்தால் முளைத்த இறக்கைகள்!

பிட்ஸ்

சீ தாதேவியை, ராவணன் இலங்கைக்குக் கடத்திச் சென்ற பின், உதவும் எண்ணத் துடன் அனுமன் தென்திசை நோக்கி வந்தான். அவனுடன் அங்கதன், ஜாம்பவான் போன்றோரும் வந்தனர். அவர்கள் ஒரு குகையில் அமர்ந்து ஓய்வெடுத்தனர். அப்போது, தங்களது இயலாமையையும், ராவணன் சீதையைக் கடத்தியபோது ஜடாயு அவனுடன் போரிட்டு உயிர் இழந்ததையும் வருத்தத்துடன் பேசிக் கொண்டனர்.

அதைக் கேட்டு இறக்கைகள் இல்லாத பெரிய கழுகு ஒன்று அழுதது. அனுமனும் மற்றவர்களும் கழுகின் அழுகைக்கான காரணம் கேட்டனர்.

‘‘என் பெயர் சம்பாதி. நான் ஜடாயுவின் அண்ணன். சிறு வயதில் எங்களுக்குள் ஒரு போட்டி, யார் அதிக உயரம் பறப்பது என்று. ஜடாயு மிக உயரத்தில் பறந்து சூரியனின் வெப்பம் தாங்காமல் தவித்தான்.

நான் ஜடாயுவின் மேலாகப் பறந்து என் இறக்கைகளை விரித்து ஜடாயுவுக்கு நிழல் உருவாக்கினேன். அப்போது சூரிய வெப்பத்தால் எனது இறக்கைகள் எரிந்து விட்டன. அதனால் இங்கு விழுந்து நகர முடியாமல் தங்கி விட்டேன். ராவணனால் தாக்கப்பட்டு என் தம்பி இறந்தான் என்ற செய்தியை உங்கள் மூலமாகக் கேட்டு அழுதேன்!’’ என்ற சம்பாதி, ‘‘ராவணன், சீதையைக் கடத்திச் சென்றதைப் பார்த்தேன்!’’ என்று கூறிவிட்டு, மலை உச்சிக்குச் சென்று இலங்காபுரியைத் தனது கூரிய கண்களால் ஊன்றிப் பார்த்தது.

பின்பு, ‘‘இலங்கைத் தீவில் ஒரு வனத்தில் சீதை இருக்கிறாள். அவளுக்குக் காவலாக நான்கு அரக்கிகள் இருக்கிறார்கள்!’’ என்றும் கூறியது சம்பாதி. உடனே, அதன் உடலில் புதிய இறக்கைகள் முளைத்தன. ராமனுக்கான பணியில் சிறிதளவு உதவிய புண்ணியத்தால் சம்பாதி புதிய இறக்கைகள் பெற்றது.

- டி.ஆர். பரிமளம், திருச்சி-21

ஆயிரம் காளியம்மன்!

கா ரைக்காலுக்கு அருகே அமைந்துள்ளது திருமலைராயன் பட்டினம். இங்குள்ள ‘ஆயிரம் காளியம்மன்’ கோயிலில் அம்மன் உருவத்தை ஐந்து வருடத்துக்கு ஒரு முறைதான் காண முடியும். மற்ற நாள்களில் அம்மன் அடங்கியுள்ள பேழைக்கு வழிபாடு நடைபெறுகிறது. இந்த அம்மனுக்கு எதையும் ஆயிரம் ஆயிரமாகத்தான் படைக்க வேண்டும்.

_ என்.மணிமேகலை, சிதம்பரம்-1

மாரீசனும் மொரீஷியஸும்!

பிட்ஸ்

ஸ்ரீ ராமனது அம்பினால் மண்ணில் சாய்ந்த மாரீசன், தான் இறந்ததும் தன் உடற் பாகங்களை கடலில் எறிந்து விட வேண்டும் என்றும், அவை தனது பெயர் சொல்லும் தீவாக மாற வேண்டும் என்றும் ஸ்ரீராமனிடம் வேண்டினான்.

ஸ்ரீராமன் அவனது விருப்பத்தை நிறை வேற்றினார். அவரால் கடலில் எறியப்பட்ட மாரீசனின் அவயவங்கள் ஓர் அழகிய தீவாக மாறியது. மாரீசன் பெயரைச் சொல்லும் வகையில், அந்தத் தீவு மொரீஷியஸ் தீவாகி விட்டது.

_ என். ஸ்ரீதர், சென்னை-61.