ஸ்தல வழிபாடு-

வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம்...

பௌர்ணமி தினத்தில் திருவிழா!

கா  ங்கேயநல்லூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆலயத்துக்கு நேர் எதிரே பிரமாண்டமாக, ஜொலிப்புடன் அமைக்கப்பட்டுள்ளது ‘தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம்’. கடந்த 2.9.2000 அன்று இந்த ஞானத் திருவளாகம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளன்று பெருஞ்சாந்திப் பெருவிழா (கும்பாபிஷேகம்) நடைபெற்றது. இதை நிர்மாணித்ததிலும், திறப்பு விழாவிலும் பெரும் பங்கு எடுத்துக் கொண்டது ஓட்டல் சரவணபவன்.

பிரமாண்டமாக அமைந்திருக்கும் கூடத்தின் இறுதியில் வாரியார் சுவாமிகள் மகாசமாதியான இடம், அவரது திருவுருவச் சிலையுடன் காணப்படுகிறது. இங்கு எப்போதும் வடக்குத் திசை பார்த்து (கயிலைமலை இருக்கும் திசை நோக்கி) மோட்ச தீபம் ஒன்று இருபத்துநான்கு மணி நேரமும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

தாமரைப் பீடத்தின் மேல் அமர்ந்து, தன் வலக் கையை ஆசி வழங்குவது போல் உயர்த்திக் காண்பிக்கும் வாரியாரின் அனைவரும் ரசிக்கும் தோற்றம் இங்கே சிலையாகி உள்ளது. வாரியார் சுவாமிகளின் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த வேளையில், இங்கு நடைபெறும் ஒவ்வொரு வழிபாடுமே முறைப்படியும், தமிழ்நெறிப்படியும் நடந்து வருவது பாராட்டத் தக்கது (வாரியார் சுவாமிகளின் தந்தை மல்லையாதாஸ் பாகவதர், தாயார் கனகவல்லி அம்மையார், மனைவியார் அமிர்தலட்சுமி அம்மையார், தமையனார் மறைஞான சிவம் ஆகியோரது சமாதிகள் முறையே லிங்கம், நந்தி, மேரு, பிள்ளையார் ஆகிய இறைத் திருவுருவங்களுடன் அமையப் பெற்றுள்ளது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன).

இங்கு சரவணப் பொய்கையும், சண்முகர் சுதை வடிவமும், வாரியார் சுவாமிகளின் ஆளுயரச் சிலை ஒன்றும் அமைந்துள்ளது. சுற்றிலும் நந்தவனம் பசுமையாகக் காட்சி அளிக்கிறது.

வாரியார் சுவாமிகளின் ஜென்ம நட் சத்திரமான ஸ்வாதி தினத்தன்றும், அவர் ஸித்தி அடைந்த நட்சத்திரமான ஆயில்ய தினத்தன்றும், கிருத்திகை, வளர்பிறை சஷ்டி அன்றும் இந்த ஞானத் திருவளாகத்தில் வழிபாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இந்த ஞானத் திருவளாகத்தில் திருவிழாதான். அடியார்கள் கூடி அமரர் வாரியார் சுவாமிகளை பயபக்தியோடு வணங்கிச் செல்கிறார்கள். அன்று திரளும் ஆயிரக்கணக்கானவர்களுக்கும் அன்னதானம் வழங்குவது என்று களை கட்டுகிறது. பௌர்ணமித் திருநாள் நிகழ்ச்சி அன்று இங்கு தமிழ் முறைப்படி யாகம் நடக்கிறது. திருமுறை ஓதுகிறார்கள். அதன் பிறகு, வாரியார் சுவாமிகளின் திருவுருவத்துக்கு விசேஷ அபி ஷேகம், அலங்காரம் என்று பிர மாதப்படுகிறது.

காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும், மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் இந்த ஞானத் திருவளாகம் திறந்திருக்கும். ‘தெய்வத்திரு கிருபானந்த வாரி யார் சுவாமிகள் ஆராதனை பராமரிப்பு டிரஸ்ட்’ இதை நிர்வகித்து வருகிறது. இதன் சீஃப் எக்ஸிகியூட்டிவ் ஆக இருப்பவர் திருவடி என்பவர். இவர் நம் மிடம், ‘‘இந்த டிரஸ்ட்டின் மூலம் வாரியார் சுவாமிகளைத் தேடி வரும் பக்தர்களுக்குப் பல நல்ல காரியங்கள் செய்து வருகிறோம். இங்கு திருமணம் செய்து கொள்ள வரும் மணமக்கள் குடும் பத்தினர் தங்குவதற்கு வசதி செய்து தருகிறோம். வெளிநாடுகளில் வசிக்கும் வாரியார் சுவாமிகளின் அருள் பெற்ற அன்பர்களை ஒன்றிணைக்க விரும்புகிறோம். இன்னும் பல நல்ல திட்டங்கள் வைத்திருக்கிறோம். அதற்கான வேளை வரும்போது எல்லாமே வாரியார் சுவாமிகளின் அருளாசியால் நன்றாக நடக்கும்!’’ என்றார்.

பக்தர்கள் தொடர்புக்கு:

திருவடியின் மொபைல் எண்:   98423 11755

வாரியார் சுவாமிகளின் ஞானத் திருவளாக அலுவலகத்
தொலைபேசி எண்:    0416 2248922