ஆலயம் தேடுவோம்!

கீழப் பழையாறை ஸ்ரீசோமநாதர்

க  லைகளில் சிறந்து விளங்கிய சோழ மன்னர்கள் காலத்தில்தான் தமிழகத்தில் ஆன்மிகம் மேலும் வளர்ந்தது என்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பக்தி மார்க்கம் தழைத்தது. சிற்பக் கலை போற்றப்பட்டது. தங்களது வெற்றியைக் கொண்டாடும் வகையில் பல ஊர்களில் கோயில் கட்டினார்கள். குடிமக்களும் குலமும் சிறக்க வேண்டும் என்பதற்காகப் பல ஊர்களில் கோயில் வடித்தார்கள். புராணக் கதைகளைப் புரியும்படி சொல்லும் சிற்பங்களோடு விண்ணை முட்டும் கோபுரங்கள்அமைத்து, விரிவான நிலப் பரப்பில் கோயில்களைக் கட்டினார்கள் சோழ மன்னர்கள்.

இறைவனின் ஒவ்வொரு விக்கிரகத் தையும் ஆகம சாஸ்திரப்படி சுத்தமாகக் கைதேர்ந்த சிற்பிகளைக் கொண்டு பாங்காக அமைத்தார்கள். ஆலயங்களில் பல விழாக்கள் நடந்தன. அக்கம் பக்கத்து ஊர்மக்கள் பெருந்திரளாக வந்து மன்னனை வாழ்த்தி, மகாதேவனிடம் ஆசி பெற்றுச் சென்றார்கள். இதெல்லாம், சரித்திரத்தைப் புரட்டும்போது தெரிய வருகிற சங்கதிகள்.

ஆனால், இன்று? பெருமைகள் வாய்ந்த அதே ஆலயங்கள் இருந்து வருகின்றனதான். என்ன ஒன்று... கம்பீரம் தொலைந்து, பொலிவு இழந்து, பூஜைகள் குறைந்து காணப்படுகின்றன. ஆன்மிக அருள் உள்ளங்களின் திருப்பணிகளால், சில ஆலயங்கள் அவ்வப்போது மராமத்துச் செய்யப்பட்டு, ஓரளவு தங்களைப் பலப்படுத்திக் கொண்டு, வந்தோரை வாழ்வித்து வருகின்றன. மக்களே வராமல், திருப்பணிகளும் நடைபெறாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆலயங்களின் நிலைமை சொல்வதற்கில்லை.

அப்படி மக்களே பெருமளவில் வராத ஓர் ஆலயம், கும்பகோணம் தாலூகாவில் பட்டீஸ்வரம் அருகே அமைந்துள்ளது. கீழப் பழையாறை என அழைக்கப்படும் அந்த கிராமத்தில் அமைந்துள்ளதுதான் அருள்மிகு சோமகமலாம்பிகை சமேத ஸ்ரீசோமநாதர் ஆலயம்.

சோழப் பேரரசர்களது தலை நகரங்களுள் ஒன்றாக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் எனும் பழையாறை நகரின் நடு நாயகமாக பட்டீஸ்வரம் எனும் கோயில் இருக்க, அதன் நான்கு திசைகளிலும் நான்கு கோயில்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் பழையாறை கீழ்த்தளி என்று சொல்லப்படும் கீழப்பழையாறை ஸ்ரீசோமநாதர் ஆலயமாகும்.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே இந்தக் கோயில் மிகச் சிறப்புடன் திகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இந்தக் கோயிலை வைப்புத் தலமாகக் குறிப்பிட்டுப் பாடி யுள்ளனர் (கோயிலுக்கு நேரில் வராமல் இங்குள்ள ஈசனை நினைத்து, சைவக் குரவர்கள் பாடிய தலங்கள், வைப்புத் தலங்கள் எனப்படும். இதுபோல் நூற்றுக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன).

தற்போது காணப்படும் ஸ்ரீசோமநாதர் ஆலயம் மூன்றாம் குலோத்துங்க சோழனால் முழுக்க முழுக்க கற்கோயிலாகத் திருத்தி அமைக்கப்பட்டது என்று கல்வெட்டு சொல்கிறது.

1957-ஆம் வருடம் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1962-ஆம் வருடம் கடைசியாகக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின், அடுத்து ஒரு கும்பாபிஷேகம் நடத்தலாம் என்று 1989-ஆம் வருடம் ஆலயத் திருப்பணிகளுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்பின் பதினேழு வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் கும்பாபிஷேகம் நடக்க வில்லை!

ஆலயத்தின் சிறப்புகளைப் பார்ப்போமா?

_ கருடனும் ஆதிசேஷனும் வழிபட்ட ஸ்தலம்.

_ சந்திரன் பூஜித்து வணங்கிய ஸ்தலம். அதனால்தான் இந்த இறைவன் பெயர் ஸ்ரீசோமநாதர்.

_ ராஜராஜ சோழன் திருப்பணி செய்த ஸ்தலம்.

_ குந்தவைப் பிராட்டியார் இங்கு தங்கி இருந்துதான் தன் சகோதரன் ராஜராஜ சோழனின் குழந்தை ராஜேந்திர சோழனை வளர்த்தாள்.

_ அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியார், மணி முடிச் சோழனின் மகளாகப் பிறந்து வளர்ந்து சமயப் பணி ஆற்றியது இங்கு தான்.

இனி, ஆலய தரிசனம் செய்வோம்.

கிழக்குத் திசை பார்த்த ராஜ கோபுரம். ஏழு நிலை கோபுரமாக குலோத்துங்கனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் மேற்கட்டுமானம் பெரிதும் சிதைந்து போனது. சுமார் முப்பதடி உயரத்துக்குக் கருங்கல் கட்டுமானம். அதன் மேல் செங்கல் கட்டுமானம். தற்போது எஞ்சி இருப்பது ஒரே ஒரு நிலை மட்டுமே! அதுவும், செடி-கொடிகள் அடர்ந்து காணப்படுகிறது.

பிரமாண்டமான நுழைவாயில். கோபுர வாயிலின் இரு பக்கத்திலும் 108 நாட்டிய கரணச் சிற்பங்கள் அழகாக மிளிர்கின்றன. நாட்டிய மாதர்களின் விதவிதமான காட்சிகள். இதில் பல உருவங்கள் சிதைவடைந்து காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் ராஜராஜ சோழன் இந்த ஊரில் இருந்துதான் தஞ்சைக்கு நாட்டிய மங்கைகளை அழைத்துச் சென்றானாம். அதை நினைவூட்டும் வகையில் இந்தச் சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டிருக்கலாம்.

ஆலயத்தில் பிரம்மோற்சவம் நடந்ததில்லை என்கிறார்கள். அதனால், கொடிமரம் இல்லை. சுமார் எட்டடி உயர பலிபீடம். நந்திதேவர். பிரதோஷ நந்திதேவர், தனி கருங்கல் மண்டபத்தில் காட்சி தருகிறார். ஆலயத்தில் ஒரு கால பூஜை தற்போது நடைபெற்றாலும் பிரதோஷ கால பூஜைகளும் நடைபெறுவது உண்டு. உள்ளூர்க்காரர்கள் மற்றும் வெளியூர்க்காரர்கள் என்று சுமார் பதினைந்து பேர் வரை கூடுவார்களாம்.

இதைத் தாண்டினால், மூன்று நிலையுடன் கூடிய ஒரு கோபுரம். உள்ளே நுழைந்ததும் பெரிய பிரதேசம்.

நேரே காட்சி தருவது ஸ்ரீசோம நாதர் சந்நிதி. மாடக் கோயில் அமைப்பு. இடப் பக்கம் சென்று ஒன்பது படிகள் ஏறி இறைவனைத் தரிசிக்க முடி யும். படிகள் ஏறும் இடம் ஒரு தேர் போல் செதுக்கப்பட்டுள்ளது, பிரமிக்க வைக்கும் ஒன்று. குதிரை மற்றும் யானைகள் இணைந்து தேரை இழுப்பது போல் கல்லில் கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார்கள். இதை அடுத்து இடப் பக்கம் ஒரு வாசலும், வலப் பக்கம் ஒரு வாசலும் பாழடைந்து காணப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் இல்லை. தேர் போன்ற அமைப்பில் ஏறி இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும். இங்கிருந்துதான் பிராகாரம் தொடங்குகிறது. முதலில், பிராகார வலம் வருவோம்.

பிராகாரச் சுவர்களிலும், பாதையிலும் ஆங்காங்கே செடி- கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. கோஷ்ட தட்சிணாமூர்த்தி முதலில் தரிசனம் தருகிறார். படிகள் ஏறி இவரை அருகில் சென்று தரிசிக்க முடியும். தனது வழக்கமான தோற்றத்தோடு அருள் பார்வையை அள்ளி வழங்குகிறார், இந்தத் தென்முகக் கடவுள். இவரின் கீழே முனிவர்கள் கல்லில் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கே நரசிம்ம உருவத்துடன் கூடிய சிற்பங்கள் அற்புதமாகக் காணப் படுகின்றன.

அடுத்து, கோஷ்டத்திலேயே அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். கோஷ்டத்திலும் ஏராளமான சிற்பத் தொகுதிகள் காணப் படுகின்றன. சண்டிகேஸ்வரரும் உண்டு. பிராகாரத்திலேயே ஸ்தல விருட்சமான நெல்லி காணப்படுகிறது. பிராகார வலம் முடியும் இடத்தில் மடப் பள்ளி இருந்ததாம்.

வலம் முடிந்து யானை மற்றும் குதிரைகள் இழுக்கும் தேர் வடிவ மண்டப படிகளில் ஏறுகிறோம். விஸ் தாரமான பன்னிரண்டு கால் மண்டபம். இதைத் தாண்டிச் சற்று நடந்தால் இன்னொரு மண்டபம். பதினாறு கால் மண்டபம். இங்கே இடப் பக்கமாக மூன்று விநாய கர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவில் இருக்கும் விநாயகர் சற்று ஒல்லியாக இருக்கிறார். இடது ஓரத்தில் இருக்கும் விநாயகர் தெளிவான அமைப்புடன் பிரமாதமாக இருக்கிறார்(படம்).

வலப் பக்கம் வள்ளி- தெய்வானை சமேத முருகன். இதை அடுத்து ஸ்ரீகயிலாசநாதர் சந்நிதி.

இந்த ஆலயத்தில் இவருக்கு ஸ்ரீசோமநாதரைவிட கூடுதல் கவனிப்பு நடக்கிறது. இவரை ‘கடன் தீர்க்கும் கயிலாசநாதர்’ என்கிறார்கள். திங்கள் மற்றும் சனிக் கிழமைகளில் இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை, மனச் சுமை போன்றவை தீரும் என்பது ஐதீகம். அடிக்கடி வெளியூர்களில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு வந்து ஸ்ரீகயிலாசநாதரின் அருள் பெற விசேஷ ஹோமங்களையும், அபிஷேக ஆராதனைகளையும் செய்து செல்கிறார்களாம். நாம் போயிருந்த அன்றுகூட ஸ்ரீகயிலாசநாதருக்கு வழிபாடு செய்வதற்காக, திருப்பூரில் இருந்து ஒரு பக்தர் வர இருப்பதாகச் சொன்னார்கள். மாமன்னன் ராஜராஜ சோழன் அனுதினமும் இந்த கயிலாசநாதரை வழிபட்டு வந்தானாம்.

கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயலும் ராவணன் சிற்பத்துடன் இந்த கயிலாசநாதர் விக்கிரகம் நன்றாக வடிக்கப்பட்டுள்ளது. ஐந்து தலைகள் முன்புறம் தெரிய, ராவணன் கயிலை மலையின் கீழ் ஒரு காலைக் குத்திட்டு அமர்ந்து, மேலிரு கரங்களால் கயிலை மலையைப் பெயர்த்து மேலே தூக்குகிறான். தனது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கீழ் இரு கரங்களை முழங்காலிலும் இடுப்பிலும் அழுத்தியவாறு எழுந்து நிற்க முற்படுகிறான்.

ராவணன் தாங்கி நிற்கும் கயிலை மலையில், ஒரு காலைத் தொங்க விட்டுக் கொண்டும் மறு காலை மடித்த நிலையிலும் மேல் கரங்களில் மான், மழு ஏந்தியவராக சிவபெருமான் அமர்ந்துள்ளார். சிவனாருடன் ஊடல் கொண்டு ஒதுங்கி இருந்த உமையம்மையோ கயிலை மலையின் நடுக்கம் உணர்ந்து அஞ்சி நடுங்கி, ஊடலையும் மறந்து சிவபெருமானைக் கட்டித் தழுவும் கோலத்தில் இருக்கிறாள்.

கீழ் இடக் கரத்தால் உமையம்மையான தேவியை அணைத்து ஆறுதல் சொல்லும் பரமேஸ்வரன், மலையைப் பெயர்த்தெடுக்க முயலும் ராவணனை தேவிக்குச் சுட்டிக் காட்டும் வண்ணம், கீழ் வலக் கரத்தின் ஒரு விரலைக் கீழ் நோக்கிக் காட்டுகிறார். அதோடு, தன் வலக் கால் பெருவிரலால் மலை அழுந்துமாறு ஊன்றுகிறார். இந்த அருமையான விக்கிரகத்தில் தேவியின் முகத்தில் பயம் தெரிய, சிவனார் முகத்தில் புன்னகை அரும்புகிறது.

முன் மண்டபத்தில்தான் இருக்கிறோம். அடுத்து, மகா மண்டபம் செல்கிறோம். இதுவும் நல்ல விஸ்தாரமான மண்டபம். உள்ளே_ ஒரு லிங்க பாணம், சூரியன், கமல பீடத்தில் சந்திரன், பைரவர், நவக்கிரகம், சேக்கிழார், சைவ நால்வர் போன்றோரின் விக்கிர கங்கள் தரிசனம் தருகின்றன.

சந்திரன் இங்கு வந்து ஸ்ரீசோமநாதரை வழிபட்டு நலம் பெற்றதால், இங்குள்ள சந்திர பகவானும் சிறப்பு பெற்றவர் ஆகிறார். நல்ல அறிவும் அழகும் உள்ள குழந்தைகளைப் பெற விரும்பும் பெண்கள், சந்திரனுக்கும் ஸ்ரீசோமநாதருக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டால் கோரிக்கை நிறைவேறுமாம்!

தவிர ஆஸ்துமா, கண் குறைபாடு, தொடர் இருமல், சைனஸ் போன்ற உடல் தொந்தரவு இருப்பவர்களும் சந்திரனையும், ஸ்ரீசோம நாதரையும் வழிபட்டால் நிவர்த்தி பெறலாம்.

அடுத்து, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஸ்ரீவீரதுர்க்கை, கம்பீரமாக ஒரு மேடையின் மீது அருள் பாலிக்கிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வைத்து வழிபடுகிறார்கள். கோர்ட் வழக்கு மற்றும் விவகாரங்களில் சிக்குண்டு தவிப்பவர்கள், இந்த வீர துர்க்கையை வேண்டிக் கொண்டு அபிஷேக- ஆராதனை செய்தால், எல்லாத் துன்பங்களும் விலகி விடுமாம்!

இந்த வீர துர்க்கைக்குப் பின்னால் கயிலை மலையை ராவணன் பெயர்த்தெடுக்கும் காட்சி, நாயக்கர் கால ஓவியமாக இருப்பதைக் காணலாம். இந்த ஓவியங்கள் தற்போது மெருகு குலைந்து காணப்படுகின்றன. இந்த துர்க்கையின் அருகே ஒரு சுரங்கம் இருக்கிறதாம்.

மகா மண்டபத்தில் இருந்து நேரே பார்த்தால், மூலவர் ஸ்ரீசோமநாதரின் அற்புத தரிசனம். பலிபீடம், நந்தி, துவாரபாலகர்கள் எல்லாம் மகா மண்டபத்தில்! அடுத்து... சற்றே பெரிதாக உள்ள அர்த்த மண்டபம். உள்ளே கருவறை. சந்திர பகவானுக்கு அருள் புரிந்த ஸ்ரீசோமநாதர். மூன்றடி உயர ஆவுடையாரின் மேல் ஒன்றரை அடியில் பாணம். பளிங்கு போல் மின்னுகிறது பாணம். அர்ச்சகர், கற்பூர ஆரத்தி காட்டும்போது அதன் ஒளி, பாணத்தில் பட்டு கண்ணாடி போல் பிரதிபலிக்கும் காட்சி அற்புதம்!

அம்மனை இன்னும் தரிசிக்கவில்லை. ஆலயத்தை விட்டு வெளியே வருகிறோம். மூன்று நிலை கோபுரம் தாண்டியதும் இடப் பக்கம், தனி மண்டபத்தில் அருள்மிகு சோமகமலாம்பிகை அரு ளாட்சி நடத்தி வருகிறார் (ஆலயத்துக்குள் நுழைந்ததும் வட திசையில்).

இந்த அம்மன் ஆலயம், ‘திருக்காமகோட்டம்’ என்று சொல்லப்படும். மண்டப முகப்பில் திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து இரண் யனை வதம் செய்யும் கோலம் சிற்ப வடிவில் அற்புதத் தொகுப்பாகக் காணப்படுகிறது. முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என கம்பீரமான அமைப்பு.

நான்கு கரங்களுடன் அருள் பாலிக்கும் தேவி. சோமகமலாம்பிகை- பெயர்க் காரணம் என்ன? காமதேனுவின் புதல்விகள் பட்டி, விமலி, கமலி, நந்தினி ஆகியோர். இவர்களில் கமலி இங்குள்ள அம்பிகையை விரதம் இருந்து பூஜித்ததால், இந்த அம்பிகை சோமகமலாம்பிகை எனப்பட்டாள். சித்தப் பிரமை நீங்கவும், திருமணத் தடை நீங்கவும் இந்த அம்மனை வழிபட்டால் நலம் பெறலாம். உச்சிக் கால நேரத்தில் ஸ்ரீசோமகமலாம்பிகைக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்தால் திருமணத் தடைகள் நீங்கப் பெறும்.

ஆலயத் தீர்த்தம்- சோம தீர்த்தம். வெளியே இருக்கும் பெரிய பிராகாரம், பராமரிப்பில்லாமல் இருக்கிறது. ஒரு கால பூஜையே தற்போது நடந்து வருவதால், பிற நேரத்தில் ஆலயத்துக்கு வரும் பக்தர்களை கோயிலுக்குள் கூட்டிச் செல்பவர் ருக்மணி அம்மாள் என்பவர். இவர் ஆலயத்துக்கு அருகே வசிக்கிறார். ஒருவேளை பக்தர்கள் செல்லும் நேரத்தில் கோயில் பூட்டி இருந்தால், ருக்மணி அம்மாள் வீட்டுக் கதவைத் தட்டினால் போதும். கூட்டிச் செல்வார்.

ஸ்ரீசோமநாதர் ஆலயம், அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. எனவே, ஸ்ரீசோமநாதர் ஆலயத்துக்குச் சொந்தமான உற்சவ மூர்த்திகள் சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி ஆலயக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

இதில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பஞ்சலோகத்தால் ஆன நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகளின் கதை சுவாரஸ்யமான ஒன்று.

‘‘முன் காலத்துல நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் சிலைகள் இந்தக் கோயில்லதான் இருந்தது. உற்சவங்களுக்கு அப்பப்ப எடுத்து, பயன்படுத்திட்டிருந்தாங்க. பல வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நாள் இரவு, திருடர்கள் வந்து இந்தச் சிலைகளைக் களவாடப் பார்த்தாங்க. சிலைங்களோட எடை ரொம்ப அதிகம். மெள்ள மெள்ள அசைச்சுத் தூக்கிட்டுப் போன திருடங்களால, சிலைகளை கோயிலுக்கு வெளியே எடுத்திட்டுப் போக முடியல. அதுக்குள்ள பொழுதும் விடிய ஆரம்பிச்சிடுச்சு. இனிமேலும் இதை எடுத்திட்டுப் போக முயற்சி செஞ்சா நாம மாட்டிக்குவோம்னு சிலைகளைக் கோயில் பிராகாரத்துலயே போட்டுட்டுப் போயிட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் சிலைகளுக்குப் பாதுகாப்பு அவசியம்னு சுவாமிமலை கோயில்ல கொண்டு வெச்சாச்சுட்டாங்க!’’ என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

இதே சுவாமிமலையில் பாதுகாக்கப்படும் இன்னொரு உற்சவர் விக்கிரகம்- மங்கையர்க்கரசி தாயார் (பார்க்க- பெட்டிச் செய்தி!)

சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி ஆலயத்தின் துணை ஆணையரும் செயல் அலுவலருமான லட்சு மணனைச் சந்தித்தோம்.

அவர் நம்மிடம், ‘‘சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி ஆலய நிர்வாகத்தின் கீழ் மொத்தம் பதினோரு கோயில்கள் இருக்கின்றன. அதில், கீழப்பழையாறை ஸ்ரீசோமநாதர் ஆலயமும் ஒன்று. சுவாமிமலை நிர்வாகத்தின் கீழ் உள்ள பல கோயில்களுக்குத் திருப்பணி வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன. அடுத்து, கீழப் பழையாறை கோயிலுக்குத் திருப்பணி வேலைகளைத் துவக்க எண்ணி உள்ளோம். பக்தர்களின் அருள் உள்ளங்களோடு இந்தப் பணி சிறப்பாக நடந்து முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு!’’ என்றார் நம்பிக்கையுடன்.

பழையாறையில் உள்ள பழைமையான ஸ்ரீசோம நாதர் ஆலயம் விரைவில் புதுப் பொலிவு பெற வேண்டும். இழந்த தனது மெருகை, மீண்டும் பெற்று ஆறு கால பூஜைகள் நடக்க வேண்டும். விழாக்களும் உற்சவங்களும் விமரிசையாக நடக்க வேண்டும். அதற்கான முன்முயற்சி, ஆன்மிக உள்ளங்களின் கையில்தான் இருக்கிறது.

'எங்க ஊரு பொண்ணு மங்கையர்க்கரசியார்!'

ம  ணிமுடிச் சோழனின் மகளாக பழையாறையில் தோன்றியவர் மங்கையர்க்கரசியார் (காலம் கி.பி.600- 660). சைவத்தை வளர்க்கும் பொருட்டு, பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் துணைவியார் ஆனார். திருஞானசம்பந்தரின் துணையோடு சிவபக்தியின் சிறப்புகளைப் பரப்பியவர், நாயன்மார்களுள் ஒருவர் ஆனார்.

இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இன்றைக்கும் சித்திரை மாதத்தில் மங்கையர்க்கரசியாரின் திருநட்சத்திரத்தன்று (ரோகிணி) இவரது உற்சவ விக்கிரகத்துக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் கோலாகலமாக நடைபெறும். தங்கள் ஊர்ப் பெண் என்கிற பாசத்தால் ஊரார் அனைவரும் அன்றைய தினம் சீர் கொண்டு வந்து வைத்து வழிபடுவார்கள். இதற்காக, சுவாமிமலையில் இருந்து மங்கையர்க்கரசியாரின் உற்சவ விக்கிரகம் அன்றைய தினம் கீழப் பழையாறைக்கு எடுத்து வரப்படும். ‘இத்தகைய சிறப்பு வாய்ந்த மங்கையர்க்கரசியாருக்கு ஆலயத்தில் ஒரு வழிபாட்டு விக்கிரகம் இல்லை’ என்பது பலரது குறையாக இருக்கிறது.

அ  றிந்திராத ஆலயங்கள்... அற்புதத் தகவல்களை வழங்கி வரும் ‘ஆலயம் தேடு வோம்’ பகுதியில் தஞ்சைக்கு அருகில் உள்ள நெடார் அருள்மிகு மங்களாம்பிகை சமேத ஸ்ரீகாள ஹஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி விரிவான கட்டுரையை 12-5-2006 சக்தி விகடன் இதழில் வெளியிட்டிருந்தோம்.

சக்தி விகடனின் பெங்களூர் வாசகர் அருணின் முயற்சியால் தற்போது அங்கு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக அம்மன் சந்நிதியின் விமானம் சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு, விரைவில் முழுமை பெற இருக்கிறது. இதை அடுத்து ஈஸ்வரன் சந்நிதியில் சீரமைப்புப் பணிகள் தொடர இருக்கின்றன என்பதை வாசகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

_ ஆசிரியர்

எப்படிப் போவது?

கு  ம்பகோணத்தில் இருந்து தெற்கில் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழப் பழையாறை. கும்பகோணத்தில் இருந்து பட்டீஸ்வரம் வழியாக ஆவூர் செல்லும் நகரப் பேருந்தில் ஏறி, முழையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அரை கி.மீ. தூரம் நடந்தால் கீழப் பழையாறை ஸ்ரீசோமநாதர் ஆலயம் வரும். கும்பகோணத்தில் இருந்து ஆட்டோ அல்லது கார் மூலம் செல்வதும் எளிது.

ஆலயம் பற்றிய விவரங்கள் மற்றும் தொடர்புக்கு:

துணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு சுவாமிநாத ஸ்வாமி திருக்கோயில்,
சுவாமிமலை- 612 302,
கும்பகோணம் தாலூகா.
போன்: 0435 245 4421

வி. குருமூர்த்தி சிவம் குருக்கள்
வி. சபேச குருக்கள்,
தெற்கு அக்ரஹாரம்,
பட்டீஸ்வரம்- 612 703,
கும்பகோணம் தாலூகா.
போன்: வி. குருமூர்த்தி சிவம்: 93629 49090
வி. சபேச குருக்கள்: 04374 268281