சிறப்பு கட்டுரை

இரவு முழுக்க நடைபெறும் தேனபிஷேகம்!

ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர்

த  ஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகருக்கு வட மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புறம்பயம் (கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு). பரஞ்சோதியாரது திருவிளையாடற் புராணம் கூறும் ஈசனின் 64 திருவிளையாடல்களில், ‘சாட்சி பகர்ந்த படலம்’ எனும் திருவிளையாடல் நிகழ்ந்த திருத்தலம் இது! இங்குள்ள இறைவன் பெயர் ஸ்ரீசாட்சிநாத சுவாமி. இறைவி பெயர் இக்ஷ§ரஸவாணி என்கிற ஸ்ரீகரும்படு சொல்லியம்மை.

பிற்காலச் சோழப் பேரரசு உருவாகக் காரண மான, வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் இங்கு தான் நடந்தது. பல்லவ வம்சத்தின் கடைசி அரசரான அபராஜிதவர்ம பல்லவனுக்கும் வீர பாண்டியனுக்கும் இடையே நடைபெற்ற போரில் பல்லவனுக்கு உதவியாக வந்து, பாண் டியனை முறியடித்து வெற்றி கொண்ட முதலாம் ஆதித்தன், (விஜயாலய சோழனின் மைந்தன்) தனது வெற்றியின் நினைவாக இங்கு ஸ்ரீபுறம்பயநாதர் ஆலயத்தைக் கருங்கல்லால் கட்டினார். இவர் ராஜராஜ சோழனின் முப்பாட்டனார்.

பிரமாண்ட புராணத்தின் க்ஷேத்திர காண்டத் தில், புன்னாகவன மகாத்மியம் என்ற பகுதியில் நந்திகேஸ்வரர் சொல்வதாக இந்த ஆலயம் பற்றி எழுதப்பட்டுள்ளது (சம்ஸ்கிருதத்திலான இதன் பிரதி, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தில் உள்ளது). பிரளய வெள்ளத்தில் இருந்து புன்னாகவனத்தை, அதாவது இந்தத் தலத்தைப் பாதுகாத்தருள ஸ்ரீவிநாயகர் புறமாக நின்றதால், இந்த ஊருக்கு, புறம்பயம்- திருப்புறம்பயம் எனப் பெயர் (பயம் என்றால் நீர்) வந்ததாம்.

புன்னாகவன மகாத்மியம் 13 சருக்கங்கள் (பகுதிகள்) கொண்டது. அவற்றுள் ஒன்று பிரளயம் காத்த படலம். கிருத யுகத்தின் முடிவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினின்று இந்தத் தலத்தைக் காத்தருள சிவபெருமான் விரும்பினார். எனவே, ஸ்ரீவிநாயகப் பெருமானை அழைத்துக் கூறி னார். உடனே விநாயகப் பெருமான், ஓம்காரத்தைப் பிரயோகித்து ஏழு கடல்களின் நீர்ப் பெருக்கை ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். அது இன்றும் ஆலயத் திருக்குளமான பிரம்ம தீர்த்தத்தின் கிழக்கே, ‘ஸப்த சாகரகூவம்’ எனும் பெயரில் உள்ளது. அப்போது வருண பகவான், தன் திருமேனியிலிருந்து சங்கம், நத்தான் கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற பொருட்களை எடுத்து, அவற்றால் விநாயகப் பெருமானை பிரதிஷ்டை செய்து, வழிபட்டாராம். அவரே இந்த ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்பது ஐதீகம்.

இவருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவில் ஒரேயரு முறை நடைபெறும் தேன் அபிஷேகம் தவிர, வேறு எந்த ஓர் அபிஷேகமும் எப்போதுமே கிடையாது. மட்டுமின்றி, இவருக்கு அபி ஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் வெளியே வழியாமல் விநாயகர் திருமேனியிலேயே உறிஞ்சப்படுவது கண்கொள்ளாக் காட்சி. சாதாரணமாகச் சந்தன நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விநாயகர், தேனபிஷேகத்தின்போது செம்பவழ நிறத்தில் தென்படுகிறார். இந்த அபிஷேகக் காட்சியைக் காணும் பக்தர்கள் கோரிய பலன்கள், மறு தேனபிஷேக விழாவுக்குள் நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

1986-ஆம் ஆண்டில் தேனபிஷேக விழாக் குழுவினர், காஞ்சி மாமுனிவரை தரிசித்தபோது, ‘‘திருப்புறம்பயத்தில் ஸ்ரீபிரளயம் காத்த விநாயகருக்கு தேனபிஷேகம் முறைப்படி தொடர்ந்து நடைபெறுகிறதா?’’ என்று கேட்டதுடன் இந்த விநாயகரின் சிறப்பை அங்கிருந்தவர்களிடம் விளக்கிக் கூறி, பரவசப்பட்டாராம்!

விநாயகர் சதுர்த்தி - ஆகஸ்ட்: 27