அற்புத பயணத் தொடர்

கண்டேன் கயிலையான் பொற்பாதம்! -9

ஃபி  ரண்ட்ஷிப் பிரிட்ஜின் பெரிய வளைவான கேட்டை கடந்து உட்புறம் காலெடுத்து வைத்தோம். நாங்கள் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் மண்ணில் கால் வைத்துள்ளோம். இப்போது நாங்கள் ஏறத்தாழ கயிலை நாதனின் இடத்தை அடைந்து விட்டோம் என்று எங்களது குழுவைச் சார்ந்த நண்பர் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. ‘இன்னும் ஐந்து நாள் பயணம். இருந்தாலும், கயிலை மலை இருக்கும் திபெத் நாட்டில் பாதம் பதித்தது அவன் திருவடிகளைத் தொட்டது போலத்தானே!’ என்று விளக்கமும் அளித்தார்.

ஆமாம்..! நாங்கள் சீன எல்லையைத் தொட்டு விட்டோம். எல்லாம் அவன் செயல்!

அங்கிருந்து திருக்கயிலாய மலை எவ் வளவோ தொலைவில் இருந்தாலும், ‘இதோ வந்து விட்டீர்கள்... வாருங்கள்!’ என்று கயிலாயநாதர் கூவி அழைக்கும் பிரமை! மலர்க் கொன்றை சிவனின் அருள் பெறும் நேரம் விரைவில் அமைய, ஒளிர்மேனி சங்கரனை மனதார வேண்டினோம்.

ஞானப் பால் உண்ட சீர்காழிச் செல்வர் ஞான சம்பந்தரின் பாடல் ஒன்று ஞாபகம் வந்தது.

கரியானும் நான் முகனும் காணாமை கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சேர் அகலத்தான்
தெரியாதான் இருந்துறையுள் திகழ் பிரமபுரஞ்சேர்
உரியார்தாம் ஏழுலகும் உடனாள வுரியாரே!

அரியான் தெரியாதான் என்கிறார் ஞான சம்பந்தர். எளிதில் அறிய முடியாதவன், மனதாலும் அறிய முடியாதவன் அந்த நீறணிந்த மேனியன் சிவமூர்த்தி! நம்பிக்கையுடன் நடந்தோம்.

முதலில் தட்டுப்பட்டது ‘ஜாங்மூ’ என்ற சீனக் கிராமம். நிறையக் கடைகள். துணி வகைகள் அதிகம் இருந்தன. விதவிதமான கலர் மற்றும் டிஸைனில் வெல்வெட் படுக்கை விரிப்புகள். அழகாக இருந்தன. திரும்பி வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்றார் வழிகாட்டி. அவர் சொல்வதும் நியாயம்தான். பலர் புது இடத்துக்குச் சென்று சேர்ந்ததும் பார்க்கிற பொருள்களை எல்லாம் வாங்கிச் சேர்த்து விடு வார்கள். பணம் குறைவதோடு சுமையும் சேர்ந்து விடும். இதனால் பயண மகிழ்ச்சி குறைந்து விடும்.

அதே போல போட்டோ எடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஆர்வத்தால் பார்க்கும் அனைத்தை யும் போட்டோ எடுத்து, ஃபிலிமை காலி செய்து விட்டு முக்கியமான இடத்தை அடையும்போது ரோல் தீர்ந்திருக்கும் அல்லது செல் தீர்ந்திருக்கும். எனவே, நிதானித்து எல்லாவற்றையும் பார்த்து வைத்துக் கொண்டு, நமது திட்டமிட்ட இடத்தை அடைய வேண்டும். அங்கு தேவையான படங்களை எடுத்த பின், திரும்பும் வழியில் முன்பு பார்த்து வைத்த இடங்களை படம் எடுக்கலாம். இது எங்கள் அனுபவத்தில் நாங்கள் தெரிந்து கொண்டது.

எங்களைப் பார்த்து சீன மக்கள் ஏதோ பேசிக் கொண்டனர். எங்கள் குழுவில் இருந்த சிலரின் வேட்டி மற்றும் சேலை உடைகளைக் குறித்து அவர்கள் பேசியிருக்கலாம்! அவர்களில் சிலரைப் பார்த்துப் புன்னகைத்தோம். அவர்களும் புன்னகை செய்து வணக்கம் தெரிவித்தனர். மொழி தெரியாத நேரத்தில் இவையெல்லாம் கை கொடுக்கும்.

கடைகளின் முன்புறத்தில் வாலிபர்கள் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதமான குளிர். மிதமான வெயில். ரம்மியமான சூழ்நிலை. இயற்கையை ரசித்தபடி நடந்தோம். எங்கள் குழுவில் மிகக் குறைந்த லக்கேஜ் கொண்டு வந்தவர் திருச்சி பத்மா. அதிக லக்கேஜ் கொண்டு வந்தவர் டாக்டர் உமா மகேஸ்வரி. நாங்கள் அவ்வப்போது டாக்டர் உமாவுக்கு உதவி செய்தோம். புரபசர் லட்சுமணனுக்கு ஆஸ்துமா தொந்தரவு. அவர் மனைவி மணிமேகலையும் பொருட்களைச் சுமந்து வர சிரமப்பட்டார். எங்கள் குழுவைச் சார்ந்த பாஸ்கர், அசோக், அண்ணாமலை, மந்திரமூர்த்தி ஆகிய இளைஞர்களுடன் டாக்டர் தியாகராஜனும் சக பயணிகளுக்கு உதவினார். பயணத்தின்போது நம் உடம்பே நமக்கு எதிரியாகி விடும். அதுவும் மலைப் பயணம் என்றால், சொல்லவே வேண்டாம்! எனவே, சுவாரஸ்யமாகப் பேசியவாறே நடந்தோம்.

சற்றுத் தூரத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. லேண்ட்குரூஷியர் மற்றும் டயோட்டா கார் வகைகள். அவை கரடு முரடான பாதையில் விரைவாக மலையேறக் கூடியவை. சீன மற்றும் திபெத்தைச் சார்ந்த திறமையான வாகன ஓட்டிகள் காணப்பட்டார்கள். இவர்கள் மிகவும் லாகவமாக வண்டிகளைக் கையாளுகிறார்கள். அனாயசமாக வண்டிகளை ஓட்டுகிறார்கள். பெட்ரோலில் ஓடும் வண்டிகள். சீனாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 4.80 யுவாங். நம் மதிப்பில் சுமார் 30 ரூபாய். டீசல் 1 லிட்டர் 5.60 யுவான். நம் மதிப்பில் ரூபாய் 40. என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆம்! நம்மூருக்கு அப்படியே நேர்மாறு சீனாவில். பெட்ரோலை விட டீசல்தான் அங்கே விலை அதிகம். பெட்ரோலில் இழுக்கும் திறன் அதிகம் ஆதலால், இந்த வண்டிகள் ஒரு லிட்டருக்கு 8 கி.மீ. தூரம் பயணிக்கின்றன. டிரைவர் உட்பட மொத்தம் 5 பேர் ஒரு காரில் பயணம் செய்யலாம். லக்கேஜ் வைப்பதற்காக பின்புற சீட்டுகள் அகற்றப் பட்டுள்ளன. ஒவ்வொரு காரிலும் அதிகப்படியாக 75 லிட்டர் பெட்ரோல், கேன் ஒன்றில் கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொரு வண்டியின் முன்புறமும் ‘ஈகோ டிரக்’ என்று எழுதப்பட்ட ஆரஞ்சு வண்ணக் கொடி கட்டப்பட்டிருந்தது.

பயணிகளை 4 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, அவர்கள் பயணம் செய்ய வேண்டிய காரின் எண்ணை அந்தந்தக் குழுவுக்குத் தெரிவித்தனர். கயிலைக்குச் சென்று திரும்பும் 13 நாட்களும் அதே வண்டியில்தான் பயணிக்க வேண்டும். நல்ல ஏற்பாடு. வண்டி எண் 8 (எங்கள் குழுவுக்கென்று மொத்தம் 14 வண்டிகள்) எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. நான், என் கணவர், மணிமேகலை, அவரின் கணவர் லட்சுமணன் ஆகியோர் ஒரு குழு. எங்கள் டிரைவர் பெயர் தியாகுன்சி. அவருக்கு சீன மொழி மட்டுமே தெரியும்! பொதுவான ஆங்கில வார்த்தைகள்கூடத் தெரியவில்லை. அதனால் பயணம் முழுவதும் கொஞ்சம் சிரமப்பட்டோம்.

எத்தனை மணிக்குப் போய்ச் சேருவோம் என்று ஆங்கிலத்தில் சைகையோடு கேட்டால், அவர் என் கணவரின் கையை இழுத்து வாட்சைக் காட்டி திபெத் மொழியில் ஏதோ சொல்வார். என் கணவர் ரொம்பப் புரிந்தவர் மாதிரி தலையை ஆட்டி நன்றி சொல்வார். ஆனால், ஒன்றுமே புரிந்திருக்காது அவருக்கு. கடைசியில் நாங்கள் வந்து சேரும் இடத்தில் மணியைப் பார்த்து, ‘ஓகோ... இந்த மணியைத்தான் வாட்சைக் காட்டி சொன்னாரோ?’ என்று புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வண்டியில் இளம் சீனப் பெண் ஒருவர் பின் ஸீட்டில் வந்து அமர்ந்தாள். அவளும் டிரைவரும் எங்களுக்குப் புரியாத பாஷையில் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டே வந்தனர். சில சமயம் எரிச்சலாகக் கூட இருந்தது. இது போன்ற தொந்தரவுகளை பயண ஏற் பாட்டாளர்கள் கவனித்துத் தவிர்க்க வேண்டும். இதைப் பற்றி எங்கள் வழிகாட்டியிடம் கேட்டபோது, ‘‘சில டிரைவர்கள் நீண்ட தூரப் பயணத்தில் தூங்கி விடாமல் இருக்க... தன்னோடு உதவியாளரை அழைத்து வருவது வழக்கம்’’ என்றார். நம்ம ஊர் கிளீனர் போல. ஆனால், புரியாத பாஷையில் மணிக்கணக்காகப் பேசுவதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?. இந்த இம்சையைத் தவிர வேறு பிரச்னை ஏதும் இல்லை. எங்கள் டிரைவர் நன்றாகவே வண்டியைச் செலுத்தினார். மிகவும் ஜாக்கிரதையாக எங்கும் மாட்டிக் கொள்ளாமல் பத்திரமாகவே வண்டியை ஓட்டியது எங்களுக்கு நிம்மதி தந்தது. பாதுகாப்புதானே முக்கியம்? வழியில் எங்காவது வேறு வண்டிகள் தண்ணீரில், சேற்றில் சிக்கிக் கொண்டால், அனைத்து டிரைவர்களும் உடனே ஓடி வந்து உதவுகிறார்கள். டிரைவர்கள் எல்லோருக்கும் கார் மெக்கானிஸமும் தெரிந்திருக்கிறது. திக்குத் தெரியாத காட்டில்/மலையில் செல்லும்போது டிரைவர்களுக்கு திறமை மட்டும் கை கொடுக்காது. பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்கவும் தெரிய வேண்டும்.

எல்லோரும் அவரவர் வண்டியில் ஏறிக் கொண்ட தும் அனைத்து வண்டிகளும் கிளம்பின. வரிசையாக கார்களும் பின்னால் இரண்டு லாரியும் கிளம்பிய காட்சி பெரிய வி.ஐ.பி. செல்லும் ஊர்வலம் போலத் தெரிந்தது. வண்டிகள் புறப்பட்டபோது அனைத்து கார்களிலிருந்தும் நமசிவாய மந்திரம் உரத்து ஒலித்தது. அதே போல வழி நெடுகிலும் தனிப் பிரார்த்தனை மற்றும் கூட்டுப் பிரார்த்தனைதான். என்னதான் டயோட்டா வண்டியும் லாரியும் திறமை யான டிரைவரும் இருந்தாலும் இறைவனை நோக்கிச் செய்யும் பிரார்த்தனை ஒன்றே, நம்மைப் பயணத்தில் பத்திரமாகக் கூட்டிச் செல்ல முடியும்.

மலை ரோடு சீராகவே இருந்தது. நன்கு பரா மரிக்கப்படுகிறது என்று தெரிந்தது. வழியில் இரு புறமும் அடர்ந்த காடு. யாரும் நுழைந்து சேதப்படுத்தாத பச்சைப் பசுமைக் காடுகள். மலைகள் குறைவாகவே இருந்தன! பனித்துளி தூங்கும் பச்சை மரங்கள். இயற்கை அன்னை சுதந்திரமாக, உல்லாசமாகத் தனது சீரிய எழிலை வெளிப்படுத்தி தானும் ரசிக்கிறாளோ? இயற்கையின் உள்ளம் ஆனந்தக் கூத்தாடுகிறது பற்பல வண்ணங்களில் அழகிய மலர்கள். வெள்ளை, பல ஷேடுகளில் சிவப்பு, வயலெட், மஞ்சள் ஆகிய கலர்களில் எத்தனை செடிகள்! எத்தனை பூக்கள்! எத்தனை வண்ணங்கள்! நேபாளப் பாதையில் பார்த்தது போல் அருவிகள் அதிகம் இல்லை. 2,300 மீட்டர் (கவனிக்கவும்: அடி இல்லை; மீட்டர்!) உயரத் தில் நாம் பயணம் செய்கிறோம்.