அர்த்தமுள்ள ஹோமங்கள்!

வாஸ்து பற்றி கருட புராணம் என்ன சொல்கிறது?

- ‘வித்யாவாரிதி' சுப்ரமணிய சாஸ்திரிகள்

வா  ஸ்து பூஜை மற்றும் ஹோமத்தின் போது வேத விற்பன்னர்களால் சொல்லப்படும் மந்திரங்கள் ஏராளம். பொதுவாக, இந்த வகையான பூஜை யையும் ஹோமங்களையும் செய்து வைக்கும் வேத விற்பன்னர்கள், இந்த மந்திரங்களின் பொருள் என்ன என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பல மந்திரங்கள் இருந்தாலும் திக் பாலர்களை வேண்டித் துதிக்கப்படும் மந்திரங்களின் பொருளை மட்டும் சொல்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள். முதலில்...

இந்திரனுக்கான மந்திரங்கள்:

ஐராவதம் எனும் யானையின் மீது வீற்றிருப்பவ ரும் தங்கம் போன்ற பளபளப்பான ஜொலிப்பைக் கொண்டவரும், சசிதேவியின் கணவரும், ஆயி ரம் கண்களை உடையவரும், வஜ்ராயுதத்தை உடையவருமான சக்ரன் எனும் தேவேந்திரனே... உன்னை தியானம் செய்கிறேன்.

நம்மையெல்லாம் காப்பாற்றுபவரும், தொல்லை கள் தராதவரும், நன்மை செய்பவர்களை விட்டுப் பிரிந்து செல்லாதவரும், சூரரும், எல்லா யாகங் களிலும் சிறந்த முறையில் ஆராதிக்கப்பட்டவரும், மிகுந்த சக்தி உடையவரும், தனவானுமாகிய இந்திரன் எங்களுக்கு அழிவற்ற ஐஸ்வரியத்தை அருளட்டும்.

அக்னி பகவானுக்கான மந்திரங்கள்:

அக்னி தேவனே... எல்லாம் அறிந்த தாங்கள், தேவ னான வருணனுடைய கோபத்தைக் குறையுங்கள். (பொய் சொல்பவர்கள் மீது வருணனுக்குக் கோபம் ஏற்படுமாம்.) பூஜிப்பதற்குச் சிறந்தவரும், தேவர்களுக்கு ஹவிஸ்ஸை எடுத்துச் செல்பவரும், மிகுந்த ஒளியுடன் விளங்குபவருமான தாங்கள், எங்களிடம் உள்ள எல்லா துவேஷங்களையும் விலக்கி அருள் புரியுங்கள்.

எமனுக்கான மந்திரங்கள்:

கறுப்பு நிற எருமையில் கம்பீரமாக வீற்றிருப்ப வரும், கறுப்பு நிறத்தில் (இரும்பு) தண்டாயுதத்தை வைத்திருப்பவரும், கறுப்பு நிறமுள்ளவரும், கையில் பாசக் கயிறை வைத்திருப்பவரும், ஜீவன்களின் ஆயுளை முடிவு செய்யும் அதிகாரத்தில் இருப்பவருமான எமதர்மனே... உன்னை நமஸ்காரம் செய்து வணங்குகிறேன்.

பரணி நட்சத்திரத்தின் அதிபர் ஆனவரும், ஐஸ்வரியங்களை நிரம்பப் பெற்றவருமான எமன் எங்களை நன்றாக அனுக்கிரஹிக்கட்டும். மகிமை வாய்ந்த உலகின் அரசராக விளங்கும் எமதர்மன், நாங்கள் செல்வதற்கான வழியை பயம் இல்லாததாகச் செய்யட்டும். எந்த நட்சத்திரத்தில் எல்லா தேவர்களும் எமதர்மரை அரசராக்கி அபிஷேகம் செய்வித்தனரோ, அந்த எமனுடன் சம்பந்தமுள்ள பரணி நட்சத்திரத்தை ஹவிஸ்ஸினால் பூஜிப்போம். எமன் எங்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கட்டும்.

நிருதிக்கான மந்திரங்கள்:

கத்தி ஏந்திய கையை உடையவரும், கறுத்த நிறமுள் ளவரும் பயங்கரமானவரும், மனிதனை வாகனமாக உடையவரும், காளிகை என்பவளின் கணவரும், பாதுகாப்பு கணங்களுக்கு அதிபருமான நிருதியை தியானம் செய்கிறேன். ஹே நிருதி தேவனே... எவர்கள் சோம யாகம் செய்யவில்லையோ, எவர்கள் ஹவிர் யக்ஞங்களைச் செய்யவில்லையோ, அவர்களைப் பின்தொடர்வாயாக! தவிர, எவர்கள் மறைமுகமாகவும் கண்ணுக்கு நேராகவும் திருடுகிறார்களோ அவர்களையும் தொடர்வாயாக! அவர்களைப் பிடித்துத் தண்டிப்பாயாக! வாழ்க்கையில் ஒரு முறையேனும் சோம யாகங்கள், ஹவிர் யக்ஞங்கள் போன்றவற்றைச் செய்பவர்களை எந்த விதத்திலும் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுக்காதே. மாறாக, இவற்றைச் செய்யாமல் இருப் பவர்களுக்குத் தண்டனை கொடு. நிருதியே... உனக்கு என் நமஸ்காரம்.

வருணனுக்கான மந்திரங்கள்:

‘நாக பாசம்’ என்னும் ஒரு விதப் பாசக் கயிறைத் தரித்திருப்பவரும், சந்தோஷத்துடன் கூடியவரும், பத்மினிதேவியின் பிரியமான கணவனும், சந்திரன் போன்ற ஒளி உடையவரும், மகரம் (முதலை) எனும் நீர் வாழ் ஜந்துவை வாகனமாக உடையவருமான வருண பகவானே... உன்னை தியானம் செய்கிறேன்.

வேத மந்திரங்களில் வணங்கப்படும் உம்மை சரண் அடைகிறேன். யக்ஞம் செய்பவர், ஹவிஸ்ஸுகளினால் தன்னைக் காத்துக் கொள்வதை வேண்டுகிறார். அந்த ஹவிஸ்ஸுகளுடன் உம்மைச் சரணடை கிறேன். மிகவும் துதிக்கப்படுபவரான நீங்கள், இப்போது கோபம் கொள்ளாமல், எங்களை ஆசிர்வதிப்பீராக!

வாயு பகவானுக்கான மந்திரங்கள்:

மருத் கணங்களால் விரும்பப்படுபவரும், புள்ளிமானை வாகனமாக உடையவரும், எல்லா ஜீவராசிகளின் சரீரத்துக்குள் செல்பவ ரும், புகை வர்ணம் உடையவருமான வாயு தேவனே... உன்னைத் துதிக்கிறேன்.

வாயுதேவனே... நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குதிரைகளுடன் கூடியவராக எங்களுடைய இந்த யக்ஞத்துக்குத் தொந்தரவு தராதவராகப் பக்கத்தில் வருவீராக. இங்கு ஹவிஸ்ஸைப் பெற்றுக் கொண்டு சந்தோஷம் அடைந்தவராக, எங்களையும் சந்தோஷம் அடையச் செய்யுங்கள். உம்மைச் சேர்ந்தவர் கள் அனைவருடனும் சுபமானதும் அழிவற் றதுமான நலன்களுடன் எங்களைக் காப் பாற்றுவீராக!

குபேரனுக்கான மந்திரங்கள்:

புஷ்பக வாகனத்தில் ஏறிச் செல்பவரும் மஹா பத்மம், பத்மம், சங்க நிதி, மஹாநிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, கர்வ நிதி எனப்படும் ஒன்பது நிதிகளு டன் கூடியவரும், தங்க நிற ஒளியை உடையவரும், சற்றே சிவந்த கண்களுடன் கூடியவருமான குபேரனை மனதால் துதிக்கிறேன்.

சந்திரனுக்கான மந்திரங்கள்:

ஹே சந்திர பகவானே! உம்முடைய வ்யவஹாரமான யக்ஞத்தில் இருப்பவர் களாகவும், சரீரம்- மனம் ஆகியவற்றை நன்றாகச் செலுத்துபவராகவும், பிள்ளை- பேரன்களுடன் கூடிய வராகவும் சௌகரியங்களை அனுபவிப்போமாக! (குபேரனுக்கும் சந்திரனுக்கும் வடக்கானது திக்கு)

ஈசானனுக்கான மந்திரங்கள்:

சிரஸில் சந்திர கலையைத் தரித்திருப்பவரும், மூன்று கண்கள் உள்ளவரும் உயர்ந்த காளை வாக னத்தை உடையவரும், புலித் தோலை ஆடையாகத் தரித்திருப்பவரும், செந்நிறமானவரும், எப்போதும் சுபத்தைக் கொடுப்பவருமான பரமசிவனை தியா னம் செய்கிறேன்.

வாஸ்து பூஜையின்போதும், வாஸ்து ஹோமம் நடத்தும்போதும் வேத விற்பன்னர்களால் சொல்லப்படும் மந்திரங்களின் பொருளைப் பார்த்தோம். இந்த ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் பலியை போட்ட பிறகு, ‘என் னைக் காப்பாற்று, எனது புது வீட்டைக் காப்பாற்று, என் குடும்பத்தாரைக் காப் பாற்று!’ என்று இந்த மந்திரத்தையும் பிரார்த்தனை செய்வார்கள்.

வாஸ்து பற்றி கருட புராணத்திலும் சில தகவல்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா? சொல்கிறேன்.

ஒரு வீடு கட்ட ஆரம்பிக்குமுன் அடிக் கல் நடும் நிகழ்வு ஒன்று நடத்தப்பட வேண்டும். அப்போது முப்பத்திரண்டு கடவுள்களை, வீடு அமைய இருக்கும் இடத் துக்கு வெளிப்பக்கம் வழிபட வேண்டும். அந்தக் கடவுள்களின் பெயர்கள்: ஈசானன், பர்ஜன்யன், ஜெயந்தன், இந்திரன், சூர்யன், சத்யகன், ப்ருஹு, ஆகாஷா, வாயு, பூஷா, விதாதா, க்ரஹணஷத்ரா, எமன், கந்தர்வன், ப்ருகு, ராஜா, மிருஹா, பிட்ரிஸ், டௌபாரிகா, சுக்ரீவன், புஷ்பதந்தன், கனதீபன், அசுரன், சேஷன், பாடன், ரோஹன், அகிமுக்யன், பல்லாடன், சோமன், சர்ப்பன், அதிதி மற்றும் திதி ஆகியோர்.

அதேபோல் வீட்டுக்குள்ளே வணங்கப்பட வேண்டிய நான்கு கடவுள்களின் பெயரையும் கருட புராணம் குறிப்பிடுகிறது. அவர்கள் ஆபா, சவித்திரன், ஜயன், ருத்ரன் ஆகியோர்.

வீட்டின் வாசலில் சிறு கோயில் அமைதல் வேண்டும். நாம் கிழக்கு முகமாக நின்று பூஜை களை நடத்தும் விதத்தில் அந்தக் கோயில் அமைந்திருக்க வேண்டும்.

பொருட்கள் வைக்கும் அறை, வீட்டின் வடக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். கிணறு, போர்வெல் போன்ற நீர்நிலைப் பகுதிகள் மேற்குப் பக்கமும், விருந்தினர்கள் தங்கும் இடம் தெற்குப் பக்கமும் அமைதல் வேண்டும். பொதுவாக ஒரு வீட்டில் எட்டுக் கதவுகள் அமைந்திருக்க வேண்டும் என்றும் கருட புராணம் தெளிவாகச் சொல்கிறது.