இது புது உலகம்

விந்தைகள் நிறைந்த சித்தர்கள் வாழ்க்கை!

சி  த்தர்களுக்கு எல்லாம் தலைவர் அநாதி சித்தர். இவர் வீற்றிருக்கும் தலைமைப் பீடம் ‘சதுரகிரி’. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பூமி, சங்கப் புலவர்களுள் ஒருவராக இருந்து- தெய்வமே தமிழை ஆராய்ந்த பூமி, சிவபெருமானின் திருவிளையாடல்கள் நடைபெற்ற பூமி, உலகுக்கெல்லாம் தாயான அம்பிகை, ‘மீனாட்சி’ என்ற திருநாமத்தில் அன்பு அரசாட்சி நடத்தும் பூமி- பாண்டிய நாடு!

பாண்டிய நாட்டின் ஒரு பகுதி சதுரகிரி. அதன் நடுவில் மாபெரும் சஞ்ஜீவி மலை இருக்கிறது. பலன் தரும் மரங்களின் நிழலில் பல குகைகள் உள்ளன. தனித்துவம் வாய்ந்த சித்த புருஷர்கள் பலர், அந்த குகைகளில் தவம் செய்தபடி அங்கிருக்கும் காயகற்ப மூலிகைகளை இன்றும் கண்ணும் கருத்துமாகப் பாது காத்து வருகிறார்கள்.

உலகுக்காகவே வாழும் உத்தமர்களின் உள்ளம் கவர்ந்த அந்த சதுரகிரி மேல் ஏறினார் அகத்தியர். அங்குள்ள சித்தர்களோடு மனம் விட்டுப் பேசினார். அமைதி ததும்பும் அந்த இடத்தில், ஒரு சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். அம்பிகையுடன் அரன் அங்கே திருமணக் கோலத்தில் தரிசனம் தந்தார்.

விழுந்து வணங்கி எழுந்த அகத்தியர், ‘‘பெருமானே... தாங்கள் இங்கேயே இருந்து தங்களை வழிபடுபவர்களுக்கு, இல்லறம் இனிதாக நடக்கவும் ஒற்றுமை வளரவும் அருள் புரியுங்கள்!’’ என உள்ளம் கசிந்து வேண்டினார்.

‘‘அப்படியே ஆகும் அகத்தியா!’’ என்ற ஸ்வாமி, அம்பிகையுடன் (அகத்தியர் நிறுவிய) சிவலிங்கத்தில் மறைந்தார்.

அகத்தியரின் மாணவர் சுந்தரானந்தர். இவர் தன் குரு நாதர் நிறுவிய சிவலிங்கத்தைப் பல காலம் வழிபட்டார் (இன்றும் வழிபடுகிறார் எனவும் சொல்லப்படுவதுண்டு). சுந்தரானந்தர் வழி பட்ட அந்தச் சிவலிங்கம் அவர் பெயரால் ‘சுந்தரலிங்கம்’ எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்வாமியை வழிபடுபவர்களின் வாழ்வு இன்பமயமாகும் மகிமையை மக்கள் உணரும்படியான ஒரு நிகழ்ச்சி, பாண் டிய நாட்டின் கோட்டையூரில் அரங்கேறியது. கோட்டையூரில் வாழ்ந்த, இடையர் குலத்தைச் சேர்ந்த பச்சைமாலின் மனைவி சடை நங்கை. சதுரகிரியின் சாரலில் பசுக்களை மேய்த்து, பால் கறப்பார் பச்சைமால். அவள் அதை விற்று வருவாள். இல்லறம் இனிமையாகப் போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் சடைநங்கை, பால் குடத்துடன் புறப்பட்டாள். வழியில், முனிவர் ஒருவர் எதிர்ப் பட்டார். பால்குடத்தைக் கீழே வைத்த சடைநங்கை, அவரைக் கும்பிட்டாள். ‘‘அம்மா! நாக்கு வறள்கிறது. அரை ஆழாக்குப் பால் கொடுக்க முடியுமா?’’ எனக் கேட்டார் முனிவர்.

‘‘இந்தாருங்கள் ஸ்வாமி! எவ் வளவு வேண்டுமோ குடியுங்கள்!’’ என்ற சடைநங்கை, குடத்தை அவரிடம் கொடுத்தாள்.

முனிவர், அரைப் படிப் பாலைக் குடித்தார். குடத்தை சடைநங்கையிடம் கொடுத்து, ‘‘தாயே... இன்னும் சில நாள் நான் இங்கே இருப்பேன். இதே போல தினந்தோறும் பால் கொடுக்க முடியுமா?’’ என்றார்.

சடைநங்கை ஒப்புக் கொண் டாள். இந்தச் செயல் சில நாட் களுக்கு நீடித்தது. ஒரு நாள், பச்சைமாலின் தாயார், ‘‘ஏண்டா! தினந்தோறும் குடம் நிறையப் பால் வரும். வர வரக் குறைந்து கொண்டே வருகிறதே! ஏன்?’’ எனக் கேட்டாள். தாயார் அடிக்கடி இவ்வாறு கேட்பதும், பச்சைமால் மௌனமாக இருப்பதும் வழக்கமாகப் போய் விட்டது.

பச்சைமால், மனைவியைச் சோதிக்கத் தீர்மானித் தார். மறு நாள் பாலுடன் சடைநங்கை கிளம்பிய தும் அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். வழியில் முனிவரைச் சந்தித்துப் பால் கொடுத்த சடைநங்கை, வீட்டுக்குள் நுழைந்ததும் ‘பளார்’ என அறை விழுந்தது. சடைநங்கையின் இரு கன்னங்க ளிலும் மாறி மாறி அறை விழுந்தது. ‘‘ஆணவம் பிடித்தவளே... எவனோ ஒரு சாமியாருக்கு தினந் தோறும் பாலைக் கொடுக்கிறாயே! உனக்கு என்னடி உரிமை இருக்கிறது?’’ என்று கத்திய பச்சைமால் வீட்டை விட்டு வெளியேறினார்.

சடைநங்கை உள்ளம் உடைந்தாள். ‘‘சீ! என்ன வாழ்வு இது? நான் செய்யும் புண்ணியம் இந்தக் குடும்பத்தைத்தானே சேரும்! இதுகூடச் செய்வதற்கு உரிமை இல்லாத எனக்கு, இல்லறம் தேவைதானா?’’ என்று புலம்பியவள் சதுரகிரி மலை மேல் ஏறினாள். சுந்தரலிங்கர் சந்நிதியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள். ‘‘தெய்வமே... உன் அடியவர்களுக்கு உதவாத வாழ்வு ஒரு வாழ்வா? அதைச் செய்ய முடியாத என்னை உலகத்தில் விட்டு வைக்கலாமா நீ? என்னை ஏற்றுக் கொள்!’’ என்று கதறினாள்.

‘கலகல’ என்று சிரிப்புச் சத்தம் எழுந்தது. திடுக்கிட்டாள் சடைநங்கை. அவளிடம் பால் வாங்கிக் குடித்த முனிவரின் வடிவம் சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டது. அதைப் பார்த்த சடைநங்கையின் உடல் முழுவதும் ஆடியது.

எதிரில் இருந்த ஸ்வாமி வாய் திறந்தார். ‘‘சடைநங்கை... சித்தர் களுக்கு எல்லாம் தலைமைச் சித்தன் யாமாவோம். உத்தமமான சித்தர்களை உருவாக்கி அவர்கள் மூலம், உலகம் வாழ வழிகாட்டுவது எனது இயல்பு. எமக்குப் பால் அளித்த நீ இன்று முதல், எமது நவசக்திகளில் ஒருத்தியாக இரு. உன் கூடப் பிறந்த உத்தமர்கள் ஏழுபேரும் ‘ஐயன்மார்கள்’ எனும் பெயருடன் இந்தச் சதுரகிரியில் திசைக்கு ஒருவராகத் தங்குவார்கள். வழி தவறுபவர்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டுவார்கள்!’’ என்று சொல்லி, சிவலிங்கத்துக்குள் புகுந்து மறைந்தார்.

அப்போதே சடைமங்கையின் திருமேனி மின்னி, ஜொலித்து தெய்விக வடிவமானது. சிவசித்தர் சொன்னபடி, நவசக்திகளில் ஒரு சக்தியாகி, சதுரகிரியில் இருந்தபடி உலகனைத்தையும் பாதுகாக்கத் தொடங்கினாள். அவள் சகோதரர்கள் எழுவரும் ஐயன்மார்களாக ஆனார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம், சடைமங்கையின் கணவரான பச்சைமாலின் கனவில் அப்படியே தெரிந்தன. நடுங்கினார் அவர். உள்ளம் உடைந்தது. செய்த பாவத்தை நினைத்துப் பதைத்தது மனம். ‘‘சடைநங்கை உத்தமி. பாவி நான். அவளைப் போய் உடம்பு நோகும்படி அடித்தேனே! கொஞ்சம் பால் தானம் செய்தாள் என்று, என்ன பரபரப்பாகக் கொதித்தேன். பொருளே அருள் என்று இருந்த நான், அருளே பொருள் என்று இருந்த சடைநங்கையை அடித்து விட்டேனே!’’ என முகத்தில் அடித்துக் கொண்டு அழுதார். விரக்தி பிறந்தது. அதன் விளைவு?

பசுக்களை ஓட்டிக் கொண்டு சதுரகிரிக்குப் போனார் பச்சைமால். அங்கேயே தொழுவம் அமைத்தார். மாடுகளை மேய்ப்பது, தொழுவத்தில் கட்டுவது, பாலைக் கறப்பது, அவரவர்க்குப் பாலாகவும் தயிராகவும் அன்போடு தருவது, மற்ற நேரங்களில் சிவசிந்தனையிலேயே ஆழ்ந்து இருப்பது என்று நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார். உத்தமியை உடல் நோக அடித்தது, அவ்வப்போது சிந்தனையில் குறுக் கிடும். கண்ணீர் சிந்துவார். இந்தக் கண்ணீரை மாற்றத் தீர்மானித்தார் மகாலிங்கர். அது என்ன?

பச்சைமால் வாழ்ந்த கோட்டை யூரை மூவரைய தேவர் என்பவர் ஆண்டு வந்தார். அரசாட்சியில் மட்டுமல்லாது, கொடுப்பதிலும் அவர் சிறந்து விளங்கினார்.

நல்லதைக் கேட்கும் ஆர்வமுள்ள அவர், அவ்வப்போது சிவசித்தர் மகிமைகளைக் கேட்டு, அவரை தரிசிப்பதில் மிகவும் விருப்பம் உள்ளவராக இருந்தார். ஒரு முறை ஏராளமான படைகளுடன் சதுரகிரி மலையை அடைந்தார். தன் படைகளும் சிவசித்தரை தரிசிக்கட்டும் என்ற ஆவல் போலும்!

தம்மை தரிசிக்க வந்த அரசர் முன்னால் அநாதி சித்தர் (சிவபெருமான்) நின்றார். ‘‘மூவரைய தேவா... உயர்ந்த உள்ளம் கொண்ட c, இங்கே ஓர் ஆலயம் கட்டு!’’ என்று சொல்லி, அதற்குண்டான பொருட்களையும் காட்டினார்.

அநாதி சித்தர் உத்தரவுக்குக் கட்டுப்பட்டார் அரசர். குறித்த காலத்தில் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. குளமும் அமைக்கப்பட்டது. சூரியன் உதயம் ஆனான். எல்லோரும் அறியும்படியாக அநாதி சித்தராக இருந்த ஸ்வாமி அரை நொடியில் சிவலிங்கமாக ஆவிர்பவித்தார்.

அரசர் அதிர்ந்தார். சிவசித்தரைச் சேவிக்கும் பேறு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். இயற்கையாக அங்கே அமைந்த மாவூற்றில் நீராடினார். காட்சியளித்துக் கருணை புரிந்த சிவலிங்கத்தைத் தன் படைகளுடன் சேர்ந்து வழிபட்டார். அந்தச் சிவலிங்கமே மகாலிங்கம்!

அங்கேயே மற்றொரு புறத்தில் (நாம் ஏற்கனவே பார்த்த) சுந்தரானந்தர், சுந்தரலிங்கத்தை பூஜை செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த பச்சைமால் அவரை வணங்கி ஆசிபெற்று அவருக்கெனவே ஒரு மாட்டை ஒதுக்கி, அதன் பாலைத் தினந்தோறும் அவருக்கு அளித்து வந்தார்.

ஒரு நாள் அந்தப் பசுவை தொழுவத்தில் காணாது தவித்த பச்சைமால் அதை தேடிச் சென்றார். நெடுந்தூரத்தில் பசு நிற்பதைக் கண்டார். மகிழ்ச்சியோடு பக்கத்தில் போனால், வேடன் ஒருவன் அந்தப் பசுமாட்டின் காம்பில் வாயை வைத்துப் பால் குடித்துக் கொண்டிருந்தான். பச்சை மாலுக்குத் தாங்க முடியாத ஆத்திரம். குச்சி ஒன்றை எடுத்து வேடனை ‘பளீர் பளீர்’ என அடித்தார்.

சதுரகிரியே அதிர்ந்தது. ‘ஹர... ஹர...’ என்ற அலறல் எங்கும் எதிரொலித்தது.

சுந்தரானந்தரும் சட்டை முனியும் விரைந்து வந்தார்கள். ‘‘அம்மா!’’ என்ற குரல் எழுந்தது. அது ரிஷப தேவரின் குரல். அதன் மேல் பேரொளி மயமாக அநாதி சித்தரான சிவபெருமான் காட்சி யளித்தார்!

‘‘சிவபெருமானே... உத்தமியான சடைநங்கையை அடித்தேன். உமது ஆடலைப் புரிந்து கொள்ளாமல் உம்மையும் அடித்தேன். என்னைப் போலப் பாவி யாரும் கிடையாது. என் பாவம் தீர்வதற்குத் தண்டனை தாருங்கள் ஸ்வாமி!’’ என்று கதறினார் பச்சைமால்.

அவரை அன்போடு நோக்கிய மகாலிங்கர், அப்படியே அணைத்து, தன் திருவடி நிழலில் சேர்த்து அருள் புரிந்தார்.

இந்தப் புனித மகாலிங்கமும், அகத்தியர் ஸ்தாபித்த சுந்தரானந்தர் வழிபடுகிற சுந்தரலிங்கமும் இன்னும் சதுரகிரிமலையில் சித்த புருஷர்களால் பூஜை செய்யப்படுகின்றன. தரிசிப்போம்! தரித்திரம் போம்!