கேள்வி - பதில்

நாத்திகவாதி... ஆத்திகவாதி...

புதுத் துணி அணியுமுன் அதில் குங்குமம் இட்டு அணிவது ஏன்?

_ பி.வி.சுசீலா, கூட்டப்பள்ளி

ஒரு வண்டி வாங்கினால், அதற் குச் சந்தனம் வைக்கிறீர்கள். மாலை போடுகிறீர்கள். கார் வாங்கினால் சந்தனம்- குங்குமம், மாலை. பஸ்ஸுக்கும் சந்தனம் ஒட்டியிருப்பார்கள். ஆயுதபூஜை அன்று பார்த்தால், ஊரில் ஓடும் எல்லா ஆட்டோக்களிலும் அங்கே ஒரு சந்தனம்-குங்குமம், இங்கே ஒரு மாலை. பெரிய லைப்ரரிக்குப் போனால் எங்கே பார்த்தாலும் சந்தனம்- குங்குமம். வீட்டில் சுவரில் எல்லாம் சந்தனம்-குங்குமம். அம்பாள் வைக்கும் இடத்தில் சுவரில் கொஞ்சம் சந்தனம்-குங்குமம். இப்படி தூய்மையாக இருக்க வேண்டிய இடத்தில், நேரத்தில் எல்லா இடங்களிலும் சந்தனம்-குங்குமம் காணப்படுகிறதே அங்கே எல்லாம் இல்லாத சந்தேகம் சட்டையில் மட்டும் எப்படி வந்தது உங்களுக்கு?

எந்த ஒரு புதுப் பொருளை நாம் அணிந்தாலும் அது மங்கலகரமாக, நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. குங்குமமும் சந்தனமும் மங்கல திரவியங்கள். அவற்றால், உங்களுக்கு மங்கலங்கள் கிடைக்கும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். சரியா? நாம் எதன் மூலம் வாழ்கிறோமோ, அதை வணங்குவது நமக்கு வழக்கம்.   அறுவடை அன்று நெல்லை மகாலட்சுமி என்று பூஜை செய்வோம்.

அரிசி இருந்ததால் நாம் வாழ்கிறோம். நாம் வாழ்வதால் பகவானை நினைக்கிறோம். எனவே, அரிசியையும் தெய்வாம்சமாகக் கருதுகிறோம். இந்தக் கலாசாரத்தைக் கடைப்பிடித்தால், உங்களுக்கு நன்மை கிடைக்குமே!

ஐயப்பன், ஆஞ்சநேயர் ஆகிய கடவுள்களைத் தீட்டுப்படாமல் வணங்க வேண்டும் என்பது ஏன்?

_ த. சத்தியநாராயணன், அயன்புரம்

கடவுள் வழிபாடு என்பதே உடலும் உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை உள்ளடக்கியதுதான். உள்ளத்தில் அமைதி இல்லை என்றால், கவனம் ஒருமுகப்படாது. உடலில் உபாதை இருந்தாலும் அப்படித்தான். உடல் சுத்தத்துக்குக் குளிக்கிறோம். உள்ளச் சுத்தத்துக்கு நல்லதே நினைக்கிற பக்குவத்தை வளர்க்கிறோம். இறந்தவர் வீட்டுக்குப் போய்விட்டு வந்தால் தீட்டு என்று நமது வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே குளிக்கிறோமே... அந்தத் தீட்டோடு கோயிலுக்குப் போகலாமா... என்ன!

இறைவனுக்குரிய அபிஷேகப் பொருட்களை வரிசையாகத் தெரிவியுங்களேன்.

_ பி. ஸ்ரீபாதராஜன், கோவை-22

நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சைச் சாறு, இளநீர், சந்தனம், கும்ப ஜலம் என்பது நடைமுறை.

பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் பிள்ளையாரை அதன் பிறகு என்ன செய்வது?

_ ரவிச்சந்திரன், ராசிபுரம்

பகவானுக்கு நிவேதனம் செய்த பழத்தை என்ன செய்வது, சுண்டலை என்ன செய்வது, பகவானுக்கு அணிவித்த வஸ்திரத்தை என்ன செய்வது என்றெல்லாம் நீங்கள் கேட்கவில்லை. அவற்றை எல்லாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை உங்கள் சிந்தனையின் மூலமே முடிவெடுத்து விட்டீர்கள். மஞ்சள் பிள்ளையார்தான் உங்களைக் குழப்புகிறார். ஏனென்றால், அதை அப்படியே சாப்பிட மாட்டார்கள். அதனால் கேட்கிறீர்கள்.

மஞ்சள் பிள்ளையாரைக் கரைக்கலாம். சமையலுக்குப் போடலாம். பகவான் கொஞ்ச நேரம் இருந்த மஞ்சள் உசத்தி இல்லையா? சாதாரண விபூதியைவிட, கற்பூரம் ஏற்றிய விபூதியை உசத்தியாக இட்டுக் கொள்வதில்லையா? அதைப் போல்தான் இதுவும்.

நாத்திகவாதி- ஆத்திகவாதி, இந்த இருவரில் யார் மீது இறைவன் அதிகம் கருணை காட்டுவான்?

_ ம. வின்சென்ட் ராஜ், திருப்பூர்-1

நாத்திகவாதி என்று யாரைச் சொல்கிறீர்கள்? பிழைப்புக்காகவோ, தன்னைப் பெரிய மனிதன் என்று காட்டிக் கொள்ளவோ, வேறு காரணங்களுக்காகவோ ‘கடவுள் இல்லை!’ என்று சொல்கிறவர்கள் எல்லாம் நாத்தி கர்கள் இல்லை!

ஆற அமரச் சிந்தித்து, இருக்கிற புத்தகங்களை எல்லாம் படித்து அவற்றின் தத்துவங்களையும் உட்பொருளையும் நன்கு புரிந்து கொண்டு தன் புத்தியையும் சேர்த்துச் செயல்படுத்தி, அந்தப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பது எல்லாம் தவறு என்று, புத்திசாலித்தனமான வாதங்களை முன் வைத்து, அதை அனைவரையும் ஏற்கச் செய்பவன்தான் உண்மையான நாத்திகன்! சட்ட திட்டத்துக்கு உட்பட்டு வாதத்தில் வெற்றி பெற வேண்டும் ஒரு நாத்திகன். அப்படிப்பட்ட நாத்திகன் யாரும் இங்கு இல்லை. ‘ஏதோ மனதில் தோன்றியது!’ என்று சொல்பவர்கள், ‘நான் தினமும் கோயிலுக்குப் போனேன். கடவுள் எனக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் கடவுள் இல்லை!’ என்று சொல்பவர்கள் எல்லாம் நாத்திகர்களே அல்ல!

நாஸ்திக தரிசனம் என்பதில் ஐந்து பிரிவுகள் உண்டு. அவர்கள் நாத்திகர்கள். அவர்கள் எல்லாம் பக்குவமானவர்கள். அப்படி இருந்தவர்களும் ஆன்மிகவாதிகளிடம் வாதத்தில் தோற்றுப் போய், தங்களது கருத்து தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள்.

‘நான் எதையும் நேரில் பார்த்தால்தான் நம்புவேன். கடவுளைப் பார்க்க முடியவில்லை. எனவே கடவுள் இல்லை!’ என்றார் ஒருவர்.

‘நீ எல்லாவற்றையும் உன் கண்ணால் பார்க்கிறாய். ஆனால், உன் கண்ணை நீ பார்த்தது உண்டா? அப்படியானால் உனக்குக் கண் இல்லை என்று சொல்லலாமா?’ என்று பதில் கேள்வி வந்தது. தனது கட்சியை ஸ்தாபிக்க முடியாத அவர், கடவுளை ஒப்புக் கொண்டார். அப்படி முடிந்த சமாசாரம் அது.

நீங்கள், ‘சாதாரணமாக நாத்திகம் பெரிதா? ஆத்திகம் பெரிதா?’ என்று கேட்கிறீர்கள். இதில் உசத்தி- தாழ்த்தி இல்லை. கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ‘தன்னிடம் இருக்கும் பக்தனுக்கு அனுக்கிரகம்... கடவுள் இல்லை என்று சொல்பவனுக்கு அனுக்கிரகம் கிடையாது!’ என்பதெல்லாம் இல்லை. அவனவனுடைய கர்மாவின்படி அவனவன் அனுபவிக்க வேண்டியதைக் கண்காணிப்பவர் கடவுள். போன பிறவியில் நல்லதே செய்து இந்தப் பிறவியில் நாத்திகனாக இருந்தால், அவனுக்கு நல்லதே நடக்கும். அதை வைத்துக் கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வரக் கூடாது.

வேண்டப்பட்டவர்களுக்கு நல்லது செய்வதும், வேண்டாதவர்களுக்குக் கெடுதி செய்வதுமான மனிதர் போல கடவுளை நினைக்காதீர்கள்!

தானம் செய்வதற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? அல்லது எந்த நேரத்திலும் செய்யலாமா?

_ என். ராஜி, மேலப்பாதி

நிறையக் கால அவகாசம் இருந்து, ஆட்கள் வரவும் நாளாகும், இப்போது அவசரமும் இல்லை என்ற நிலையில் நல்ல நாள் பார்க்கலாம். இப்படிச் சொல்வதால், ‘எப்போது தானம் செய்தாலும் நல்ல நேரம் பார்ப்பேன். என்ன அவசியமானாலும் வேறு நேரத்தில் செய்ய மாட்டேன்!’ என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது. எப்போது தோன்றுகிறதோ நாள், நட்சத்திரம் பார்க்காமல் தானத்தைக் கொடுத்துவிட வேண்டும். அப்புறம் கொடுக்கலாம் என்று நினைத்தால், கொடுக்க முடியாமல்கூட போய்விடலாம்.

‘பத்து நாளைக்குள் ஆபீசுக்கு வரவும்!’ என்று சொன்னால், நல்ல நாள் பார்த்துப் போகலாம். ‘நாளைக்கு வரவும்’ என்றால் நாளைக்குப் போயே ஆகவேண்டும். அங்கே நல்ல நாள்- பொல்லாத நாள் எதுவும் செய்யாது.

ரிக் வேதத்தில் ஒரு சம்பவம். தானம் பண் ணுகிறேன் என்று ஒருவன் புறப்பட்டான். கையில் கொஞ்சம் தங்கம் வைத்திருந்தான். ‘உன்னிடம் தானம் வாங்கிக் கொள்ளப் போகிறவர் ரொம்ப உயர்ந்த ஆசாமி. அவருக்கு இப்போது தேவையும் இருக்கிறது. தானத்துக்கு மிகவும் பாத்திரமானவர்’ என்றார்.

இதைக் கேட்டதும், ‘அப்படியா? அப்படியானால், நாளைக்கு எனக்கு இன்னும் அதிகமான தங்கம் வரும். சேர்த்துத் தந்து புண்ணியத்தைக் கூட்டிக் கொள்கிறேன்.’

‘நாளைக்கு நிச்சயம் தங்கம் வருமா?’
‘நிச்சயம் வரும்!’
‘நாளைக்கு இவர் இருப்பாரா?’
‘இவரை என்னுடனேயே வைத்துக் கொள்வேன்.’
‘நாளைக்குக் கொடுக்க வேண்டாம் என்று தோன்றிவிட்டால்..’
‘தோன்றாது. என் மனம் மாறாது!’
‘நாளைக்கு நீ செத்துப் போய்விட்டால் என்ன செய்வாய்?’

பதிலில்லை. அந்த நிமிடமே தானத்தைக் கொடுத்தான். கொடுக்கணும். அதனால் திருப்தி ஏற்படும் என்று தோன்றினால், தோன்றியதும் கொடுங்கள்.

மரண தேவதை, இடக் கையால் உன் தலைமுடியைப் பற்றி விட்டாள். வலக் கையில் உள்ள கத்தியை ஓங்கி விட்டாள். அப்போது கொடுப்பது போல் நினைத்துக் கொண்டு அந்தக் கணமே தானம் கொடுப்பதுதான் தானம். எனவே, பஞ்சாங்கத்தைப் புரட்டி நேரத்தை வீணாக்காதீர்கள்!

வீட்டில் நவக்கிரகங்களை வைத்து பூஜை செய்யலாமா? பலன் உண்டா?

_ மு.சந்திரசேகரன், இட்டாநகர், அருணாசலப் பிரதேசம்

கோயில் என்பது இடையில் வந்தது. அதற்கு முன்பெல்லாம் வீட்டிலேயேதான் பூஜித்தனர். நமது பக்தியை எடுத்துக் காட்டுவதற்குக் கோயில் என்பது இல்லை. ஏழை-எளியவர்கள், பாமரர்கள், வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஆகியோர் வழிபட ஏற்பட்டது கோயில். நன்கு கற்று உயர்ந்தவன் எந்த இடத்திலும் பகவானைப் பார்ப்பான். மேல் தட்டில் இருப்பவர்கள் அடைகிற மோட்சத்தை, அடித்தட்டில் இருப்பவர்களும் அடைய கோயிலுக்குப் போய் பூஜையைப் பார்த்தாலே போதும் என்று வைத்தார்கள். வசதி இருப்பவர்கள் வீட்டிலேயே நவக்கிரகத்தை வைத்து ஆராதனம் பண்ணலாம்.

ஸ்வாமி படங்கள் உள்ள பூஜையறையில் முன்னோர், நாம் குருவாக நினைப்பவர்கள் போன்றோரின் படங்களை வைக்கலாமா?

_ துரை. குருவாயூர் கண்ணன், சிவகங்கை

சில கேள்விகளிலேயே சில கருத்துகள் தொக்கி நிற்கும். ஸ்வாமி படங்கள் உள்ள பூஜையறையில், வேறு படங்களை வைக்கக் கூடாது என்ற கருத்து உங்கள் கேள்வியிலேயே ஒளிந்திருக்கிறது. இது உங்கள் மனதில் இருந்தும், இப்படிக் கேட்கிறீர்கள். முன்னோர்களது படங்களை வைப்பதைவிட அவர்களை மனதில் வைக்கத் தெரிந்து கொள்ளுங்கள். ஸ்வாமி படத்துக்கும் இது பொருந்தும் என்றாலும் ஸ்வாமி படம் இருக்கும் இடத்தில் முன்னோர் படம் தேவையில்லை. நம் முன்னோர்களெல்லாம் வம்ச பரம்பரையில் வந்தவர்கள். ஸ்வாமி நிரந்தரமானவர். முன்னோர் படத்தைச் சாதாரணமான இடத்தில் வைக்கலாம். என்னதான் இருந்தாலும் கடவுள் கடவுள்தான், மனுஷன் மனுஷன்தான்!

இன்னும் சொல்லப் போனால், ஊரில் இருக்கிற ஸ்வாமி படங்களை எல்லாம் வாங்கி வைப்பது கூட தேவையற்றது. ஒரு கடவுளின் படம் போதும். படங்களை அடுக்கி வைத்து அழகு பார்த்துக் கொண்டே இருந்தால், எப்போது ஆராதனம் செய்யப் போகிறீர்கள்?

என் ஒரே மகன் வீட்டை விட்டுப் போய் விட்டான். எனக்கு யார் கொள்ளி வைப்பார்கள்? என் மனைவி வைக்கலாமா?

_ வி. வெங்கட்டராமன், திண்டுக்கல்

இதற்கு ஏற்கெனவே விளக்கம் கொடுத்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் வேறு ஆண் பிள்ளைகளே இல்லையா, என்ன? உங்கள் சகோதரர்களோ, அவர்களின் பிள்ளைகளோ இருப்பார்கள். அப்படி யாருமே இல்லாத பட்சத்தில் நீங்கள் தத்தெடுக்கும் பிள்ளை அதைச் செய்யலாம். அதுவும் இல்லையா, உங்கள் சொத்தை அனுபவிக்கப் போகிறவர் செய்யலாம். கவலையை விடுங்கள்!

பதில்கள் தொடரும்...