Published:Updated:

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

அர்த்தமுள்ள ஹோமங்கள்!
ஆயூள் வளர்க்கும் ஆயுஷ்ய ஹோமம்!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ‘வித்யாவாரிதி' சுப்ரமணிய சாஸ்திரிகள்

அர்த்தமுள்ள ஹோமங்கள்!
அர்த்தமுள்ள ஹோமங்கள்!

ரவும் பகலும் சந்தித்துக் கொள்ளும் அதிகாலை மற்றும் மாலை நேரத்தை ‘சந்தி நேரம்’ என்பார்கள்.

ஒரு நாளின் மற்ற நேரத்தை உழைப்பதற்கும் பிறருக்கு உதவி செய்யவும் ஓய்வெடுக்கவும் ஒதுக்கினாலும், இந்த சந்தி நேரத்தை ஒவ்வொருவரும் தங்களது மேம்பாட்டுக்காக ஒதுக்க வேண்டும். அப்போதுதான் ஆயுள் பலம் கூடும். இதனால்தான் ரிஷிகள் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் வணங்கி வந்தனர்.

சரக சம்ஹிதை என்ற பழங்கால ஆயுர்வேத நூல், ‘சரீர ரட்சை’ என்ற பெயரில் சில உபதேசங்களைச் சொல்கிறது. ‘எந்தக் காரியத்தைச் செய்தாலும், செய்ய மறந்தாலும் உங்கள் சரீரத்தைப் பாதுகாக்க மறக்க வேண்டாம். இது விசேஷமான பொருள். இதை நன்றாகப் பராமரித்து தேவதைகளைக் குடியிருக்க வைப்பது உங்கள் கடமை. ஒரு நகரத் தலைவர், தனது நகரத்தைப் பரிபாலனம் செய்வது போல், ரத ஓட்டி ஒருவர், தனது ரதத்தைப் பராமரிப்பது போல், இந்த உடலை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்’ என்கிறது அந்த நூல்.

‘நாளைய பொழுது நமக்கு நல்லதாக விடியும்!’ என்ற மாயை கலந்த நம்பிக்கைதான் ஒவ்வொரு தினமும் மனிதர்களை வாழ வைக்கிறது. இந்தக் கணத்தில் நாம் நன்றாகத்தான் இருப்போம். ஆனால், அதைப் பொருட்படுத்த மாட்டோம். எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள்தான் எல்லோராலும் விரும்பப்படுகிறது.

என்றைக்குமே மரணத்தைச் சந்திக்காமல் சிரஞ்ஜீவியாக இருப்பது பெரிய பாக்கியம். சாஸ்திரங்கள் ஏழு பேரை சிரஞ்ஜீவிகளாகச் சொல்கின்றன. அவர்கள்: அஸ்வத்தாமன், மஹாபலி, வியாசர், ஆஞ்சநேயர், விபீஷணன், க்ருபாச்சார்யார், பரசுராமர் ஆகியோர்.

மார்க்கண்டேயன் இவர்களிடமிருந்து வித்தியாசமானவர். சிவ பக்தனான இவர் என்றும் இளமையுடன் இருக்கும் வரம் பெற்றவர். ‘பதினாறு வயதில் மரணமடைவார்!’ என விதிக்கப்பட்ட இவர், சிவனை வணங்கி வந்தார். காலன் இவர் உயிரைப் பறிக்க வந்தபோது சிவலிங்கத்தைப் பற்றியபடி இருந்தார். இவருக்காக வீசப்பட்ட பாசக்கயிறு லிங்கத்தின் மீது பட்டது. கோபம் கொண்ட சிவன், காலனின் உயிரைப் பறித்ததாக சிவ புராணம் கூறுகிறது. கோபம் தணிந்து காலனை உயிர்ப்பித்த சிவபெருமான், மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க அனுமதிக்கவில்லை, ‘என்றும் பதினாறாக’ அவர் வாழ்கிறார்; கிட்டத்தட்ட ஏழு கல்ப காலம் (ஒரு கல்பம் என்பது மூன்று லட்சம் ஆண்டுகள்) அவர் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த மார்க்கண்டேயனைப் பிரார்த்தனை செய்து ஆயுஷ்ய ஹோமத்தை ஆரம்பிக்க வேண்டும். தீர்க்க ஆயுளை கேட்பதற்காகச் செய்யப்படும் இந்த ஹோமத்தின் மந்திரங்களை போதாயன ரிஷி உருவாக்கினார்.

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

ஒரு குழந்தையின் பெயரில் செய்யப்படும் முதல் ஹோமமாக இதுதான் இருக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகு முதல் ஒரு வருட காலம் அதைக் காப்பாற்றும் பொறுப்பை கடவுள் ஏற்றிருக்கிறார். அதனால் அந்த முதல் ஆண்டில் குழந்தைக்காக என்று ஹோமங்கள், யாகங்கள் தேவையில்லை. முதல் வயது முடிந்து அடுத்த வருஷம் ஆரம்பமாவதை ‘அப்த பூர்த்தி’ என்கிறோம். இந்த அப்த பூர்த்தியில்தான் ஆயுஷ்ய ஹோமத்தைச் செய்வார்கள்.

இதை ஆங்கில வருடத்து பிறந்த தேதி வைத்து கணிக்க கூடாது. தமிழ் மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்ததோ, அடுத்த ஆண்டு அதே தமிழ் மாதத்தில் அதே நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்று பார்த்தால் அதே நாள் தான் அப்தபூர்த்தி. உதாரணமாக கடந்த தாரண வருடம் தை மாதம் பன்னிரண்டாம் தேதி (25.1.2005) செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் பூசம். இந்த குழந்தைக்கு அப்தபூர்த்தி இந்த பார்த்திப வருடம் தை மாதம் இரண்டாம் தேதி (15.1.2006) ஞாயிற்றுக்கிழமை பூச நட்சத்திரத்தில் வருகிறது. அதாவது நாள் கணக்கில் பார்த்தால் பத்து நாட்கள் முன்னதாகவே வந்துவிடுகிறது. இதேபோல தாமதமாகவும் வரும்.

கடந்த ஆண்டு கார்த்திகை ஒன்றாம் தேதி (16.11.2004) செவ்வாய்க்கிழமை பூராட நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு அப்தபூர்த்தி வந்தது இந்த ஆண்டு கார்த்திகை பத்தொன்பதாம் தேதி (4.12.2005) ஞாயிற்றுக்கிழமை அதே பூராட நட்சத்திரத்தில். பதினெட்டு நாட்கள் தாமதமாக வந்திருக்கிறது. சமயத்தில் ஒரே தமிழ் மாதத்தில் சில நட்சத்திரங்கள் இரண்டு நாட்கள் வரக்கூடும். அப்படி வரும் போது முதலில் வரும் நட்சத்திர நாளைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வசதியிருந்து ஒவ்வொரு மாதமும் சரியாக ஜென்ம நட்சத்திர நாளில் இந்த ஹோமத்தைச் செய்ய முடிந்தால் விசேஷம். அப்படி இல்லா விட்டாலும் ஆண்டுக்கு ஒரு தடவை அப்த பூர்த்தியின்போது செய்வது நல்லது.

இந்த ஹோமத்தை ஏன் செய்ய வேண்டும் என்று போதாயனர் விளக்குகிறார். ‘‘திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், ஆயுளை அபிவிருத்தி செய்யவும், தேக ஆரோக்கியத்துக்காகவும், என்னவென்று கார ணம் சொல்ல முடியாமல் ஏற்படும் மனவேதனை களுக்குத் தீர்வாகவும், மருந்துகளால் தீர்க்க முடி யாத நோய்களில் இருந்து நிவாரணம் பெற வும், இப்போது இருப்பதைவிட இன்னும் பலமடங்கு சுகமான வாழ்க்கையை அடைவதற்கும், ஆயுள் தேவதையின் அருளாசி பெற்றுப் பூரண ஆயுளுடன் உடல் மற்றும் மனநலம் குன்றாமல் வாழ்வதற்கும் ஜென்ம நட்சத்திர நாளில் இந்த ஹோமத்தை செய்ய வேண்டும்’’ என்கிறார் அவர்.

ஹோமத்தைத் துவக்கும்போது வழக்கம் போல முதலில் தெய்வப் பிரீதியையும், பெரியவர்களின் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கான அனுக்ஞையைச் செய்ய வேண்டும். அடுத்தது விநாயகருக்கு முதல் வணக்கம் செலுத்தும் விக்னேஸ்வர பூஜை. இதற்குப் பிறகு இந்த ஹோமத்தை எதற்காக எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை விளக்கும் சங்கல்பம்.

எந்தக் குழந்தைக்காக இந்த ஹோமத்தைச் செய்கிறோமோ அந்தக் குழந்தையின் பெயரைச் சொல்லி, ‘‘வேதங்கள் கூறும் வழியில் இந்தக் குழந்தையின் ஆயுள் மேன்மை அடைவதற்கும், அபமிருத்யு தோஷ பரிகாரத்துக்காகவும், இந்தக் குழந்தைக்கு இருக்கும் எல்லா துக்கங்களும் நீங்குவதற்காகவும், இதன் மனதில் தோன்றும் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதற்காகவும், இந்தக் குழந்தையின் முதல் ஆண்டு நிறைவில் - இரண்டாம் ஆண்டு ஆரம்பத்தில் - பிறந்த மாதத்திலும், ஜென்ம நட்சத்திரத்திலும் என்னென்ன தோஷங்கள் ஏற்பட்டதோ அவற்றுக்குப் பரிகாரம் செய்யவும், ஆயுள் தேவதையின் அருள் ஸித்திப்பதற்காகவும், அந்த அருளால் நீண்ட ஆயுள் கிடைக்கவும் ஆயுஷ்ய ஹோமம் என்ற இந்த கர்மாவைச் செய்கிறேன்’’ என மந்திரங்களால் சங்கல்பம் செய்ய வேண்டும்.

ஹோமத்துக்காக வழக்கம் போல சதுரமான அக்னி குண்டம் உருவாக்கி அதில் அக்னியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அக்னிக்கு வடக்கில் தரையில் நெல்லைப் பரப்பி, அதன்மேல் நுனி வாழையிலையில் அரிசியைச் சதுரமாகப் பரப்பி, எட்டு இதழ் பத்ம கோலம் போட்டு அதன் மேல் கும்பத்தை வைக்க வேண்டும்.

இதில் ‘இமம் மே வருண’ என்ற மந்திரத்தின் மூலம் சகல தீர்த்தங்களின் அதிபதியான வருணனை முதலில் தியானித்து ஆவாகனம் செய்ய வேண்டும். இதன் பிறகு இந்த ஹோமத்துக்கு முக்கிய தேவதையான ஆயுள் தேவதையை தியானித்து ‘ஆயுஷ்டே’, ‘ஆயுர்தா அக்னே’ என்ற மந்திரங்களைச் சொல்லி கும்பத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

இது தவிர மிருத்யுஞ்சய ருத்ரன், பஞ்ச சாத்குன்ய தேவதைகள், நட்சத்திர தேவதை (குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அந்த நட்சத்திரத்துக்கான தேவதை) ஆகியோரை தியானித்து ஆவாகனம் செய்ய வேண்டும்.

ஆயுஷ்ய ஹோமத்துக்குத் திரவியம் அன்னம்தான். அன்னத்தை வேக வைக்கும்போது தண்ணீரோடு கொஞ்சம் பால் சேர்த்து வேக வைக்கவும். கண்டிப் பாக இதை வடிக்கக் கூடாது. அப்படியே கஞ்சி சுற்றிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டும். இந்த அன்னத்தில் ஒரு பகுதியை பலிக்காகவும் (காகத்துக்கு உணவிடுவதை பலி என்பார்கள்!), இன்னொரு பகுதியை ஹோமத்துக்காகவும் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

‘ஆயுஷ்டே’, ‘ஆயுர்தா’ ஆகிய மந்திரங்களால் அன்ன ஹோமமும், நெய் ஹோமமும் செய்ய வேண்டும். (சிலர் அரச மர சமித்துகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள்!) மந்திரங்களைச் சொல்லி ஹோம குண்டத்தில் அன்னத்தை இடும்போதே அதில் கொஞ்சத்தை ஓர் இலையில் தனியாக எடுத்து வைக்க வேண்டும். ஹோமத் தீயில் நெய் விடும்போது அதில் ஒவ்வொரு தடவையும் மிஞ்சுவதை இந்த அன்னத்தில் கொட்டிவிட வேண்டும். இந்த நெய் கலந்த அன்னத்தில் கடைசியில் கொஞ்சம் வெல்லம் கலந்து குழந்தைக்கு ஊட்டிவிட வேண்டும். ஹோமத்தின் முடிவில் கும்பத்தில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து குழந்தை மீது தெளிக்க வேண்டும்.

கடைசியில், ‘‘இந்த நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்த இந்தக் குழந்தை ஆயுள் விருத்தி பெறட்டும்... கஷ்டங்கள் தீரட்டும். இந்த வரங்களை அளிக்கும் வல்லமை கொண்ட அக்னி தேவனே... வாயுவே... சூரியனே... பிரஜாபதியே... அருளுங்கள்!’’ என மந்திரங்களைச் சொல்லி ஹோமத்தை முடிக்க வேண்டும்.

வழக்கமான மந்திரங்கள் தவிர, ஆயுஷ்ய சூக்தம் எனப்படும் எட்டு மந்திரங்கள் அடங்கிய தொகுப்பைச் சொல்லியும் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டும். பிறகு மிருத சஞ்சீவனி சூக்தம் தனியாக ஜெபிப்பது சிறப்பு. இந்த சூக்தங்களின் அர்த்தங்கள்...