Published:Updated:

ஆலய தரிசனம் - ஹாங்காங்கில் இந்துக் கோயில்!

ஆலய தரிசனம் - ஹாங்காங்கில் இந்துக் கோயில்!

ஆலய தரிசனம் - ஹாங்காங்கில் இந்துக் கோயில்!

ஆலய தரிசனம் - ஹாங்காங்கில் இந்துக் கோயில்!

Published:Updated:
ஆலய தரிசனம்
ஹாங்காங்கில் இந்துக் கோயில்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலய தரிசனம் - ஹாங்காங்கில் இந்துக் கோயில்!

ஹா ங்காங்கில் உள்ள ஹேப்பிவாலி கோயில் மிகவும் புகழ்பெற்றது. அங்கு வசிக்கும் பெரும்பான்மை இந்துக்களான சிந்தி இன மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி 1952-ஆம் ஆண்டில் எஸ்.டி.மேல்வானி என்பவரால் கட்டப்பட்ட திருக்கோயில் இது.

ஹாங்காங் அரசினரால், இந்துக்களுக்கான இடுகாடு அமைக்க ஹேப்பிவாலி பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் ஒதுக்கித் தந்த அந்தப் பகுதியில், தங்களது தேவைபோக மீதியுள்ள இடத்தில் திருக்கோயில் ஒன்றை அமைக்க இந்துக்கள் திட்டமிட்டனர். இப்படித்தான் அங்கே கோயில் உருவானது. மூன்றடுக்குக் கட்டடமான இந்தக் கோயிலின் கரு வறை மீது வட இந்தியப் பாணியில் கோபுரம் அமைக்கப்பட்டது.

ஆலய தரிசனம் - ஹாங்காங்கில் இந்துக் கோயில்!

கோயிலின் நுழைவாயிலில் ‘இந்துக் கோயில்’ என ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் எழுதப் பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சுமார் ஐம்பது படிகள் உள்ளன. ஏறுவதற்கு வசதியாக இடையிடையே பத்து சதுர அடியில் சமதளங்கள் உள்ளன. முதியோர் பயணம் செய்ய அமர்ந்து செல்லும் நாற்காலி கள் உள்ளன. தண்டவாளத்தின் மீது ஊர்ந்து செல்லும் இந்த நாற்காலிகள், மேல் தளத்தை அடைந்ததும் பயணிகள் இறங்கிக் கொள்ள லாம்.

கோயிலில் முதலில் தென்படுவது மாடத் தில் அமைந்துள்ள சிறிய ஆஞ்சநேயர் சந்நிதி. அதையட்டி சுமார் முப்பதடி அகலம், நூறடி நீளத்தில் நீண்ட ஒரு கூடம் உள்ளது. இதை அடுத்து வரிசையாக மூன்று சந்நிதிகள்! முதலில் ஸ்ரீலட்சுமி நாராயணன் சந்நிதி. இங்கு சுமார் ஐந்தடி உயரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு- ஸ்ரீலட்சுமி இருவரும் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். பளிங்குச் சிலைகள். வெகு நேர்த்தியாக, செயற்கையான வண்ணப் பூக்களாலும், புத்தம்புது மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பத்து சதுர அடியில் அமைந்துள்ள இந்தச் சந்நிதியின் பிராகாரத்தில் பக்தர்கள் வலம் வரலாம்.

இதன் இடப் புறம் சிவபெருமான்-பார்வதிதேவி சந்நிதி. இருவரும் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றனர். சிவனின் இடப்புறத் தொடையில் ஸ்ரீவிநாயகர் அமர்ந்திருக்க, அருகே முருகப் பெருமான் காட்சி தருகிறார். இவருக்கு வலப் பக்கம் மயில் வாகனம். இவர்களுக்கு முன்பாக நந்தி பகவான் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள சிலைகளும் பளிங்குக் கற்களால் ஆனவையே. சிவபெருமான்-பார்வதி சந்நிதிக்கு முன்பாக ஒரு சிவலிங்கம் உள்ளது. இதன் மேற்புறம் தாரைப் பாத்திரம் ஒன்று தொங்குகிறது. பக்தர்களே இங்கு அபிஷேகம் செய்யலாம். இதற்கு வசதியாக அருகிலேயே ஒரு பாத்திரத்தில் அபிஷேகத்துக்கான சுத்தமான தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. பக்தர் கள் தாங்கள் கொண்டுவரும் பாலைக் கொண்டும் இங்கு அபிஷேகம் செய்யலாம். இந்த சந்நிதிக்குப் பிராகாரம் இல்லை.

மூன்றாவது சந்நிதி _ ஜுலேலான் சந்நிதி. தர்மத்தைக் காத்து பரி பாலிக்கும் ஜுலேலானை சிந்தி மக்கள் பிரத்தியேகமாக வழி படுகின்றனர்.

யார் இந்த ஜுலேலான்? சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், சிந்து மாகாணத்தில் (தற் போதைய பாகிஸ்தான்) வாழ்ந்த வர் மகான் ஜுலேலான். மீன் மீது அமர்ந்திருப்பது போல இவ ரது சிலை பளிங்குக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் மற்றோர் அவதாரமாகக் கருதப்படும் இவர், ‘அம்ரிலால்’ (கடலின் கடவுள்) என்றும் அழைக்கப்படுகிறார்.

ஆலய தரிசனம் - ஹாங்காங்கில் இந்துக் கோயில்!

1953-ல் ஹரி என்.சர்மா என்பவரை ஹாங்காங்குக்கு வரவழைத்து, இந்தத் திருக்கோயிலை வடிவமைத் தனர். அதன் பின் இவர் இந்தக் கோயிலில் சில காலம் அர்ச்சகராகவும் பணி புரிந் தார். 1960-ல் ஹரிலால் குடும்பத்தினர், இவருக்காக அமைத்துக் கொடுத்த ‘ஹிந்து மந்திர்’ எனும் கட்டடத்தில் இப்போது வசிக்கிறார். ஆலயத்தின் தற்போதைய அர்ச்சகர் மகேஷ் சாஸ்திரி.

‘இந்து சங்கம்’ என்ற அமைப்பு ஹேப்பிவாலி கோயில் நிர்வாகத்தைக் கவனிக் கிறது. காலை எட்டு முதல் இரவு எட்டு மணி வரை கோயில் திறந் திருக்கிறது.

பொதுவாக வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. குத்து விளக்கு பூஜையும் பஜனைகளும் அவ்வப்போது நடைபெறும்.

இந்து மதத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் நூற்றுக்கணக்கான சீன மாணவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து இந்து மதம் பற்றியும், சாஸ்திர விளக்கங்கள் குறித்தும் அவ்வப்போது கேட்டறிந்து செல்வதாக மகேஷ் சாஸ்திரி பெருமையுடன் சொல்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism