Published:Updated:

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

Published:Updated:
அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்
தன லாபம் அருளும் திரிபுர் சுந்திரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 

- ஜபல்பூர் நாகராஜ சர்மா

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்


முப்பத்தொன்பதாவது ரூபம்
‘ப’-ம் பந்தினிதேவி எனும்சித் சியாமளாதேவி

ம்ஸ்கிருதத்தில் ‘ப’ என்பது இருபத்து மூன்றாவது மெய்யெழுத்து. இதற்குரிய அம்பிகையின் திருநாமம் பந்தினி தேவி அல்லது சித் சியாமளாதேவி. கீழ்க்கண்ட சித்தசாபர தந்திர ஸ்லோகத்தின் மூலம் இவள் ரூப லாவண்யம் நமக்குப் புலப்படுகிறது.

சித் ச்யாமளா பப்ருவர்ணா ஸிம்ஹாரூடா பரூபிணீ
தத்தே க்ரமேண தசபி: கரை: பூர்வவதாயுதஞ்

‘ப’கார அட்சரதேவி ஐந்து முகங்களுடன், பழுப்பு வண்ண மேனி கொண்டவள். பத்துக் கரங்கள் உடையவள். இவளின் வலக் கரங்களில் முறையே அபய முத்திரை, கிளி, கத்தி, அம்பு, சூலம் முதலியவையும் இடக் கரங்களில் முறையே வர முத்திரை, மான், கேடயம், பாசம், உடுக்கை முதலியவையும் காணப்படுகின்றன. உயர்ந்த சிம்ம வாகனத்தில் அலங்காரமாக ஆரோகணித்து அருள்பாலிக்கிறாள் என்று மேற்கண்ட ஸ்லோகம் விளக்குகிறது.

ஹே வராநநே! வைணவத்தில் பூதரன் என்றும், சைவத்தில் தசகண்டன் என்றும் ‘ப’கார தேவி அழைக்கப்படுகிறாள் என்பதை, ‘ப-காரோ பூதரச் சைவ தசகண்டோ வராநநே!’ என்று மந்திராபிதான சுலோகம் கூறுகிறது. ‘ப’கார ரூபிணி சைவத்தில் சகலண்டனாக, வைணவத்தில் பூதரனாக, சாக்தத் தில் அபய கலையாக, நம் சரீரத்தில் முதுகாக, இந்திர னாகப் போற்றப்படுகிறாள் என்று கீழ்க்கண்ட மாத் ருகா நிகண்டு ஸ்லோகம் தெரிவிக்கிறது.

சகலண்டோ பூதரச்சாபயா ப்ருஷ்டம் கதஸ்ததா
ஸுரஸு வஜ்ரமுஷ்டிச்ச ப-காரோ பாதிமோபிச

‘ப’காரம் உதித்த இங்குதான் தாட்சாயிணியின் வலது ப்ருஷ்ணி (குதிகால்) விழுந்தது என்றும், ஷஷ்டீசம் எனப்படும் இந்த மகா சக்தி பீடத்தின் தெற்குத் திக்கில் தேவியின் பாதுகை விழுந்து, அந்த உபபீடம் ஸித்தி அளிக்கும் ஸ்தலமாக மாறியது என்றும் மேருதந்திரம் கூறுகிறது.

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

ஷட்பீசம், ஷஷ்டீ மாயாபுரம் என்றெல்லாம் மேருதந்திரம் கூறும் இந்த மகா சக்திபீடத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை. பல்வேறு நூல்களை ஆராய்ந்ததில் சுதர்சனச் சக்கரத்தால் துண்டிக்கப்பட்ட தாட்சாயிணியின் வலக் குதிக்கால் பற்றிய விவரம் கிட்டவில்லை.

வலக் கட்டை விரலைப் பற்றிய விவரம் மட்டும் இந்தத் தொடரில் எஞ்சியிருக்கிறது. இந்த அங்கத்தின் விவரம் பேதமின்றி பல நூல்களிலும் இருக்கிறது. எனவே, இந்தப் புனித அங்கம் விழுந்த தலத்தையே 39-வது மகா சக்திபீடமாக ஏற்று, அதன் விவரங்களைப் பார்ப்போம்.

இந்த மகா சக்திபீடத்தை ‘கரதோயா’, ‘யுகாத்யா’ என்றெல்லாம் அழைப்பர். இந்தப் பீடேஸ்வரியின் திருநாமம் பூததாத்ரி என்றாலும் மக்கள் அவளை காளி என்றே அழைக்கின்றனர். ஆனால், கருவறை யில் காட்சி அளிக்கும் உருவத்தை தரிசித்தால் அவள் திரிபுர பைரவி என்ற முடிவுக்கு வருவோம். ‘க்ஷீர கண்டர்’- இந்த க்ஷேத்திரத்தின் பைரவர்.

தச மகா வித்தைகளில் ஐந்தாவதான பைரவி வித்தையே, திரிபுர பைரவி எனப்படுகிறது. தச மகா வித்தையைப் பற்றிய விவரம் இந்தத் தொடரின் 40-வது அத்தியாயத்தில் (சக்தி விகடன் 29.01.06) வெளிவந்துள்ளது. புவனேஸ்வரி பைரவி, கமலேஸ்வர பைரவி, காமேஸ்வர பைரவி, கௌளேஸ பைரவி, சைதன்ய பைரவி, ஷட்கூடா பைரவி, பய வித்வம்ஸினி பைரவி, நவகூடா பாலா பைரவி, அன்னபூர்ணா பைரவி, திரிபுர பைரவி என இவள் பத்து ரூபங்களாக விளங்குகிறாள் என்று சாக்தர்கள் கூறுவர்.

இந்த ரூபங்களை ஆராதிக்கும் முறை தந்திரசாரம், சாரதா திலகம், மேரு தந்திரம், புரஸ்சர்யார்ணவம் முதலிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. இதில் இறுதியாகக் கூறப்பட்ட திரிபுர பைரவியே நாம் இப்போது தரிசிக்கப் போகும் மகாசக்தி பீடேஸ்வரி.

பைரவி என்றால் அச்சம் ஊட்டுபவள் என்று அர்த்தம். ஆனால், இந்த அம்பிகை ஆழ்நிலை தவம் செய்பவள். தவம் என்றால் தகிப்பு என்று பொருள். சிந்தனையை ஒருமுகப்படுத்துவதே தவம். இது அக்னி மயமானது. ஒருவர் தீவிரமாக தவம் செய்யும்போது இயற்கையாகவே அவரது உடல் தகிக்கும். ஏனெனில், அவர் உச்சாடனம் செய்யும் மூலமந்திரத்தின் வீரியம் அவர் உடலைக் கனலாக்குகிறது. திரிபுர பைரவி அம்மனின் அருந்தவமும் அக்னி மயமாக ஜ்வலிப்பதால் நமக்கு அச்சமூட்டுகிறது. ஆனால், அவள் ஞானாக்னி. அவள் அருள் பெற்றால் கிட்டாதது எதுவுமில்லை!

மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தின் போது அவருக்கு பரிபூர்ண சக்தியாக உதவியவள் திரிபுர பைரவியே. இந்த தேவியின் ரூப லாவண்யத்தையும், அவளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் பல புராணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அவற்றைக் கவனிப்போம்.

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

1. ...மூன்று மடிப்புகளை உடைய இடை கொண்ட இவள், சிவப்புப் பட்டாடைகளை விரும்பி அணிபவள். பருத்து நிமிர்ந்த மார்பகங்களின் மேல், ரத்தம் வடியும் முண்டங்களாலான மாலை அலங்கரிக்கிறது. சதுர்புஜங்கள் கொண்ட இவளின் இரு மேற் கரங்களில் அபய-வரத முத்திரைகளும், கீழ் இரு கரங்களில் ருத்திராட்ச மாலையும், புத்தகமும் காணப்படுகின்றன.

2. ... ஆயிரம் உதய சூரியன்களின் ஒளி கொண்டவள். சந்திர பிம்பம் போன்ற அழகிய இவள் முகத்தில் மிளிரும் முக்கண்கள் அருள் மழை பொழிகின்றன.

3. ... புத்தகம், ருத்ராட்ச மாலை, கபாலம், சின் முத்திரை ஆகியவை இவளின் அழகிய திருக்கரங் களில் பாங்காக விளங்குகின்றன. முத்துகளாலான பல்வேறு அணிகலன்களை அணிந்து, அன்றலர்ந்த வெள்ளெத்தி பூவின் நிறம் கொண்ட மேனியாள் திரிபுர பைரவி.

4. ... பாசம், அங்குசம், கபாலம், கரும்பு, மாதுளம் பழம், வில் ஆகியவற்றைத் தன் ஆறு கரங்களில் ஏந்தி, செந்நிற மலர்கள் சூடியுள்ள திரிபுர பைரவி, கற்பக விருட்சத்தின் அடியில் அமர்ந்துள்ளாள். சிவந்த மேனி கொண்ட இவளின் கருவிழிகள், பக்தர்களைக் காக்கும் பொருட்டுப் பத்துத் திக்குகளிலும் சுழன்று கொண்டே இருக்கின்றன. இளமை ததும்பும் எழிலார்ந்த இவள், விளையாடல்களில் மிகுந்த நாட்டம் கொண்டவள்.

இவ்வாறு புராணங்கள் புகழும் திரிபுர பைரவியை நியமத்துடன், காலம் தவறாமல் பூஜிப்பவர்கள் மூன்று உலகங்களும் போற்றிப் புகழும் கீர்த்தி பெறுவர். அவர்கள் அருமையான கவிதைகள் புனையும் ஆற்றலை அடைவார்கள். இத்தகைய கவிதா சிரோன்மணிகளுக்கு பல்வேறு சந்தங்களில், பல்வேறு பொருள் விளங்கக் கூடிய மனங்கவரும் கவிதைகளை படைக்கும் ஆற்றல் ஏற்படும். மேலும் அவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும் என்று நூல்கள் இவளது வழிபாட்டின் சிறப்பைச் சித்திரிக்கின்றன.

அம்மனின் புகழ் பாடும் லலிதா சகஸ்ர நாமத்தில் இரண்டு நாமாக்கள் இவளைப் பற்றி வருகின்றன. மூலாதாரைக நிலயா என்பது 99-வது நாமம். அதாவது மூலாதாரத்துக்கு முக்கியமான இருப் பிடத்தை உடையவள் என்று பொருள். வந்ஹி மண்டல வாஸிநி என்பது 352-வது நாமம். அதாவது அக்னி மண்டலத்தில் வசிப்பவள் என்று அர்த்தம். இந்த இரண்டு நாமாக்களும் அன்னை திரிபுர பைரவியைக் குறிக்கின்றன என்பது தேவி உபாசகர்களின் கருத்து. பிரம்மதேவர், படைப்புத் தொழிலின்போது தபஸ் மேற் கொண்டதாக தைத்திரியோபநிஷத் (2-6) தெரிவிக்கிறது. தபஸ் என்பது ஒரு கிரியையைக் குறிப்பதால், அதற்குரிய சக்தியை ‘கிரியா சக்தி’ என்பர்.

இந்த கிரியா சக்திக்கு அதிபதியாக விளங்குபவள் திரிபுர பைரவி. சாதகன் தவம் புரியும்போது அவன் உடல் முழுவதும் திரிபுர பைரவியின் சக்தி பரவி, அவன் தேகம் நெருப்பு போல் தகிக்கும். இந்த தேவி நெருப்பின் செந்நிறம் கொண்டவள் என்பது ஒரு கூற்று. எனவே, இவள் துர்க்கை எனும் பெயர் பெறுகிறாள் என்று துர்க்கா ஸுக்தம் நூலிலிருந்து அறிகிறோம்.

அட்சர சக்தியின் ஐம்பத்தோரு ரூபங்கள்

இவ்வளவு பெருமைகள் கொண்ட திரிபுர பைரவி, கோயில் கொண்ட திருத்தலமே 39-வது மகா சக்திபீடமாகும். கரதோயா- யுகாத்யா என்று இந்த இரண்டு பெயர்களை ஒன்றாகக் கொண்ட இன்னொரு மகாசக்தி பீடமும் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்திருப்பது விந்தையே. இந்த இரண்டு பீடேஸ்வரிகளின் திருநாமமும் அபூர்வமாக ஒன்றாகவே அமைந்துள்ளன. இவளை பூததாத்ரி என்று கூறுவர். கரதோயா-யுகாத்யா என்ற அந்த பீடத்தை நாம், ஏற்கெனவே 16-வது மகா சக்தி பீடமாக (சக்தி விகடன் 25.03.05) தரி சித்து விட்டோம்.

இப்போது நாம் தரிசிக்கும் இந்த சக்தி பீடத்தையே யுகாத்யா என்று சிலர் கூறுகிறார்கள். இந்த பீடம், மேற்கு வங்கத்தில் ஒரு மாவட்டத் தலைநகராக விளங்கும் பர்த்வான் நகருக்கு வடக்கே 35 கி.மீ. தூரத்தில் கீர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் க்ஷீர்கன்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது.

பர்த்வான்-கடோவா ரயில் மார்க்கத்தில் இருக்கும் நிகம் எனும் ரயில் நிலையத்தில் இறங்கி, மூன்றரை கி.மீ. தூரம் நடந்தால் கீர் கிராமத்தை அடையலாம். பூததாத்ரி என்றும் காளி மந்திர் என்றும் அழைக்கப்படும் இந்த தேவியின் கோயில் சிறியதாகத் தென்படினும், பூததாத்ரிதேவியின் கீர்த்தி பெருமளவுக்குப் பரவியுள்ளது. மகர சங்கராந்தி அன்று நடைபெறும் பெருந் திருவிழாவின்போது இங்கு பக்தர் கூட்டம் அலைமோதும். இந்த விழாவை ‘பைஷாக் சங்கராந்தி’ என்று கூறுகிறார்கள்.

பூததாத்ரி அம்மன், திரிபுர பைரவி ரூபத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். அணுகியவர்களின் இன்னல்களை உடனுக்குடன் போக் கும் கண்கண்ட தெய்வம் இவள் என்ற நம்பிக்கையை இங்கு வரும் பக்தர்களிடம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த தேவியை தவறாமல் ஆராதித்து வந்தால் பீடாஹாரமும், தன லாப மும், சகல சம்பத்தும் ஏற்படும். மட்டுமின்றி லௌகீக, சாஸ்திரிய, ஞான விருத்தியும், முக்தியும் கிட்டும் என்று இங்குள்ள பெரியோர் திட நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

‘திரிபுர பைரவிதேவி, ஆயிரம் உதய சூரியன்களின் ஒளி கொண்டவள். முகத்தாமரையில் புன்சிரிப்பும், மூன்று கண்களும் உடையவள். சிவப்பு வண்ண மேலாடை, கபால மாலை, ரத்தின கிரீடம், சந்திர கலை ஆகி யவற்றைத் தரித்தவள். கைகளில் ஜபமாலையும், புத்தக மும், வர- அபய முத்திரைகளும் கொண்டவள்’ என்று பூததாத்ரி அம்மனின் தியான சுலோகம் கூறுகிறது.

பூததாத்ரி அம்மன் சந்நிதியில் மேற்சொன்ன பொருள் கொண்ட தியான ஸ்லோகத்தை ஒரு முறை யேனும் மனமார தியானம் செய்தால் நன்மை பல பெற்று நலமுற வாழ்வோம் என்பது திண்ணம்!

ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி

பல்லவி

ாதந்தன்னை பற்றினேனம்மா பூததாத்ரியாய்
கரதோயா பீடமமர்ந்த அன்னையே (பாத)

அனு பல்லவி

பவானி புரத்தில் க்ஷீரகண்டகர் மகிழ
பக்குவமா யுறைந்த தாயே ப்ரம பவானியே (பாத)

சரணம்

பாதகங்களை செய்யினும் நின் பதத்தை வணங்கிட
பாவங்கள் பறந்தோடுமே பந்த பாசங்கள் விலகுமே
பாக்யதேவதையாய் ஸ்ரீ நீலகண்டர் இடபாகத்தில்
பாங்குற சேர்ந்து தருங் காக்ஷி பெரும் சிலாக்யமன்றோ

துரிதகாலம்

செங்கமல மலரும் நாணும் மென்னடியில்
செங்கை குவித்து தேவாதி தேவர் வணங்கி
செங்கதிரோனை சூழ்ந்த மேக கூட்டமென விளங்க
செங்கதிரொளி வீசி நகங்களும் துலங்கிட (பாத)

 


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism