Published:Updated:

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

Published:Updated:
வேதங்களும் வாழ்க்கையும்
திருமணம்!
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

பி றக்கப் போகும் குழந்தையின் செழிப்புக்கு ஏற்பட்ட சம்ஸ்காரம் சீமந்தோன்னயனம். சீமந்தம் என்றால் தலையில் வகிடு அமைத்து, கூந்தலை அழகுபடுத்துதல் என்று பொருள். ‘கேசவேசம்-கூந்தலின் அழகான அமைப்பு’ என்று அமரஸிம்மன் கூறுவான் ( ஸீமந்த: கேசவே சோத ).

உயிரினங்களை உருவாக்குபவர் கடவுள். அவருக்கு ‘பிரஜாபதி’ என்று ஒரு பெயர் உண்டு. அவர் திதி என்பவளுக்கு வகிடு அமைத்து சீமந்தோன்னயனம் செய்தார். திதியின் கூந்தலில் சீப்பால் வகிடு அமைத்து, அந்த வகிட்டில், அழகை நிரந்தரமாக இருக்கும்படி செய்ய அஸ்வினி தேவர்களுக்குக் கட்டளை இட்டார் ( யத்ஸீமந்தம் கங்கதஸ்தீலீலேக யத்வாக்ஷ§ர: பரிவவர்ஜ வபம் ஸ்தே. ஸ்த்ரீஷ§ ரூபமச்விஹத த்ரனிதத்தம் ).

அஸ்வினி தேவர்கள் அவரது கட்டளையை ஏற்று, மனித இனத்தில் ஆண்களைவிட பெண்மைக்கு இயற்கையாகவே அவளது வகிட்டில் அழகை நிலை பெறச் செய்தார்கள். இன்றும் நாம் பெண்ணினத்தின் கூந்தல் அழகைப் பார்த்து ரசித்து மகிழ்கிறோம். விலங்கினங்களில் இதன் எதிரிடையைப் பார்க்கிறோம். ஆண் சிங்கம், ஆண் யானை ஆகியவற்றைப் பார்க்க விரும்புகிறோம். கூந்தல் பெண்மையின் இலக்கணம் ( ஸ்தன கேசவதீ நாரீ ).

ஆதிசங்கரர் தமது சௌந்தர்ய லஹரியில், அம்பாளின் அழகை வர்ணிக்கும்போது, முதலில் அவளது கூந்தல் அழகை எடுத்துக்கொண்டு தன் வர்ணனையைத் தொடங்கினார் ( வஹந்தீ ஸிந்தூரம்... ). பெண்கள் கூந்தலை கத்தியால் அழித்துக் கொள்ள வேண்டாம் என்று வேதம் அறிவுரை கூறும் ( யத்வாக்ஷ§ர:பிரிவவர்ஜுவபம்ஸ்தே ).

‘பிறப்போடு தோன்றும் கூந்தல் மிகவும் மென்மையாக இருக்கும். அடர்த்தியான கூந்தல் வேண்டும் என்கிற ஆவலில், கூந்தலை அழித்துத் திரும்பவும் வளரச் செய்தால், கூந்தலின் மென்மை குன்றிவிடும். தானாகவே விட்டு விட்டால் தலையின் உள்ளிருக்கும் உறுப்புகளுக்குப் பாதுகாப்பாகச் செழித்து வளர்ந்து விடும்!’ என்பது ஆயுர்வேதத்தின் பாதுகாப்பான அறிவுரை. அறிவுப் புலன்களைப் பாதுகாக்க இயற்கை தந்த வரப்பிரசாதம் கூந்தல். பெண்ணின் இயல்புகள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குக் கிடைத்து விடும். வகிடு அமைக்க முள்ளம் பன்றியின் முள்ளைப் பயன்படுத்தும்படி ஆபஸ்தம்பர் கூறுகிறார் ( த்ரேண்யா சலல்யா... ).

மங்கிய சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய நிறங்கள் பன்றியின் முள்ளில் தென்படும். சீப்பின் பற்கள் போல் தோற்றமளிக்கும். நுனி கூராகவும் நீளமாகவும் இருக்கும். பன்றி சிலிர்த்துக் கொள்ளும்போது உடலிலிருந்து விடுபட்டுக் கீழே விழுந்துவிடும். அந்த முள்ளைக் கையில் ஏந்தி நெற்றியின் மையப் பகுதியில் இருந்து ஆரம்பித்து, மந்திரத்தை ஓதியவாறு, கணவன் தன் கையால் வகிடு அமைத்து தலையின் பின்பக்கம் வரை வருட வேண்டும் என்று தர்மசாஸ்திரம் கூறும் ( சீமந்தம் ஊர்த்வம் உன்ன யதி ). முழுமுதற் கடவுள் தன் மனைவிக்குச் செய்து, பயன் பெற்றதையே நாமும் பின்பற்றுகிறோம்.

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

கூந்தலை அதாவது தலைமுடியை உடல் உறுப்புகளில் ஒன்றாகப் பார்க்கும் தர்மசாஸ்திரம் மற்ற புலன்களைப் போல் கேசத்தையும் பராமரிக்கும்படி வற்புறுத்தும். கேசத்தைக் காப்பாற்றும் முறைகளை வராகமிஹிரர் தன் ப்ருஹத்ஸம்ஹிதையில் விளக்குகிறார். கந்த யுக்தி எனும் பகுதியில், கூந்தலுக்கும் மணம் சேர்க்கும் விதிமுறைகளை விளக்குகிறார். மற்ற உடல் உறுப்புகள்போல் கேசமும் பிறப்பிலிருந்து இறக்கும்வரை உடலோடு ஒட்டிக் கொண்டு இருக்கும்.

ஆயுர்வேதம் கேசத்தைப் பராமரிக்க உகந்த மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. மஜ்ஜையின் உபதாது-கழிவுப் பொருள்தான் கேசம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடும். மஜ்ஜையை வளர்க்கும் உணவு வகைகள் அடர்த்தியான கூந்தலை ஏற்படுத்தும். ‘தந்தையிடமிருந்து கேசத்தைப் பெற்றுக் கொள்கிறது குழந்தை’ என்று சுஸ்ருதர் குறிப்பிடுகிறார் ( கர்பஸ்யதேச... பித்ருஜானி ).

கண்ணுக்கு மை, காதுக்குத் தோடு, கைகளுக்கு வளையல், விரலுக்கு மோதிரம், இடுப்புக்கு ஒட்டியாணம், காலுக்குக் கொலுசு, கால் விரலுக்கு மெட்டி... இப்படி அழகுபடுத்தும் உருப்படியாகக் கூந்தலுக்கு புஷ்பாலங்காரம் செய்கிறோம். ‘கூந்தலுக்கு அணிகலனாக புஷ்ப மாலையைப் பயன்படுத்து’ என்று தர்மசாஸ்திரம் அறிவுறுத்துகிறது ( சுபிகேசிர ஆரோரை சோபயந்தீமுகம் மம ). புஷ்பாலங்காரம் முகத்தின் அழகை வெளிப்படுத்தும். அவளது மனம் களிப்படையும் என்கிறது தர்மசாஸ்திரம் ( முகம் ஹிமமசோபய பூயாம்ஸம்சபகம் குரு ).

முழு நிலவுக்கு ‘ராகா’ என்று பெயர். ‘ஹே ராகா’ அவளை முழுமையாக்க, நீ அவளுடன் ஒன்றிவிடு. உனது முழுமை, உலகைக் களிப்புடன் விளங்கச் செய்யும். அவளது மனம் முழுமை பெற்று உன்னைப் போல் விளங்க வேண்டும். சீமந்தோன்னயனத்தின் முழுப் பயனை அவள் பெற வேண்டும். வயிற்றில் இருக்கும் குழந்தை முழுமை பெற்று, அதாவது பத்து மாதங்கள் இருந்து வெளிவர வேண்டும். அந்தக் குழந்தை வீரம், தைரியம் என்கிற குணங்களுடன் சிறந்து விளங்க வேண்டும். பிறர் போற்றும்படி அவன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நல்ல உருவம், நல்ல புத்தி ஆகியவை அவனிடம் திகழ வேண்டும், என்கிற வேண்டுகோளை உள்ளடக்கிய மந்திரங்கள் மந்திர ப்ரச்னத்தில் விளக்கப்படுகின்றன.

மனம், சந்திரன்- இவை இரண்டின் இயல்பும் ஒன்றாக இருக்கும். பரம்பொருளின் மனதிலிருந்து சந்திரன் தோன்றினான் என்கிறது வேதம் ( சந்திரமா மன்ஸோஜாத: ). காலத்தின் ஆன்மா சூரியன், மனம் சந்திரன் என்று ஜோதிடம் கூறுகிறது ( காலாத்மா தினக்ருத் மனஸ்துஹினகு ).

வேதங்களும் வாழ்க்கையும் - திருமணம்!

தேய்வதும் வளர்வதும் இரண்டுக்கும் பொருந்தும். நிறைவோடு திகழும் உன்னை, அவள் மனநிறைவையும் குழந்தையின் மன நிறைவையும் வேண்டிப் பணிகிறேன். மனதின் ஸ்திரத் தன்மை, பிறக்கும் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதாரமாகத் திகழ்வதால், அதன் நிறைவு உறுதிப்பட வேண்டும். நிறைவுற்ற உனது வடிவம், ‘மன நிறைவை நீ வழங்குவாய்’ என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது என்ற கணவனின் வேண்டுகோளும் இடம் பெற்றிருக்கின்றன.

வீணா கானத்தால் அவளை மகிழ்விக்க வேண்டும். இருவர் ஒன்றாகச் சேர்ந்து வீணை வாசிக்க வேண்டும். பதினெட்டு வித்தைகளில் ‘காந்தர்வம்’, அதாவது பாட்டும் ஒன்று. ‘பாட்டு’ சாம கானத்திலிருந்து உருப்பெற்றது. வீணையை அறிமுகம் செய்தது வேதம் ( யத்வீணா ச்ரியமேவாஸ்தின் ததித: ). வீணை ஒலியின் சிறப்பை அமரஸிம்மனும் விளக்குகிறான் ( வீணாயா: கவணீதே... ). நாரதர் வீணைக்கும் சரஸ்வதியின் வீணைக்கும் தனிப் பெருமை உண்டு. இருவரும் மனதை மகிழ்விப்பவர்கள்.

இரு அறிஞர்கள் வீணை வாசிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் கூறும் ( வீணாகாதிநௌ காயத ). வீணை லட்சுமி கடாட்சத்தின் அறிகுறி ( ச்ரியாவா ஏதத்ரூபம் யத்வீணா ). எல்லா வித ஐஸ்வர்யமும் வீணா கானத்தில் கிடைக்கும்.

பாட்டு, பாமரனையும் வசீகரிக்கும். விலங்கினங்களும் பாட்டில் மயங்கும் ( பசுர்வேத்தி சிசுர் வேத்தி வேத்தி கானரஸம் பணி: ). பாட்டைக் கேட்டு அவள் மனம் களிப்படைய வேண்டும். யமுனை நதிக்கரையில் வசிப்பவர்கள் ‘ஸால்வ தேச’ மன்னன் யௌகந்திரியின் ஆட்சியில் மகிழ்ந்து பாடினார்கள். நதியோரத்தில் வசிக்கும் நாமும் ‘முழு நிலவு’ எங்களது ராஜா. அவனது அருளில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று வீணா கானம் செய்து நதியின் பெயரை வெளியிட வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகிறது (« ஸாம ஏவனோ ராஜேத்யாஹு: ).

முளைத்த நெல் செடியை அவள் தலையில் சூட்ட வேண்டும் ( யவான் வீரூடானாபத்யா ). மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குப் பழம், தாம்பூலம் அளித்து மகிழ்விக்க வேண்டும். பழம் அவளது எண்ணத்தை ஈடேற்றும் ( பலம் மனோரத பலம் ). தாம்பூலம் மங்கலத்தைப் பொங்க வைக்கும் ( தாம்பூலம் ஸ்ரீகரம் பத்ரம் ). அந்தச் சூழல், மகிழ்ச்சி பொங்கத் திகழ வேண்டும் என்பது தர்மசாஸ்திரத்தின் கருத்து.

தம்பதி, அறத்துக்காக இணைந்திருக்கிறார்கள். இவள் அறத்துக்காக கர்ப்பமுற்றிருக்கிறாள். அறத்தின் மறு உருவம் காளை மாடு. ‘காளை வடிவில் தோன்றிய அறம்’ என்று காளை மாட்டை தர்மசாஸ்திரம் பாராட்டும் ( தர்மஸ்தவம் விருஷரூபேண... ).

இருவருமாகச் சேர்ந்து காளை மாட்டின் நெற்றியில் இருந்து வாலின் நுனிவரை தங்கள் கைகளால் மனநிறைவோடு வருடிவிட வேண்டும். பத்து விரல்களோடு சேர்ந்த ஸ்பரிசம் அறத்தின் வழிபாடாக மாறி விடுகிறது. ஸ்பரிசத்தால் அன்பை வெளிப்படுத்துவது விலங்கினங்களில் முழுமை பெறும். ஸ்பரிசத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி விலங்கினங்களில் அலாதியானது.

ராமன், அனுமனைக் கட்டி அணைத்து மகிழ்ந்தார். கிருஷ்ணன், குசேலனை ஆலிங்கனம் செய்து ஆனந்தமளித்தார். உடல் முழுவதும் பரவியிருக்கும் அறிவுப்புலனான ‘த்வக்’ ஸ்பரிசத்தை நன்கு உணர்ந்து மகிழும். அது மற்ற புலன்களைவிடச் சிறந்தது. மனம், பாட்டினால் மகிழ்ந்தது. ஸ்பரிசத்தால் உடல் முழுவதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. ‘கர்ப்பவதியின் ஆரோக்கியத்துக்கும் கர்ப்பத்தின் வளர்ச்சிக்கும் அவளது மகிழ்ச்சி தேவை!’ என்று ஆயுர்வேதம் வலியுறுத்தும். வாழையடி வாழையாக வந்த நமது சம்பிரதாயமும் அவளை மகிழ்விப்பதில் ஈடுபடும். கர்ப்பிணியைப் பார்க்க வருபவர்கள் இனிப்புடன் வருவது மரபு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism