Published:Updated:

மதுரை மீனாட்சியின் மகிமை!

மதுரை மீனாட்சியின் மகிமை!

கட்டுரை
மதுரை மீனாட்சியின் மகிமை!
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மதுரை மீனாட்சியின் மகிமை!

க்திப் பயிர் செழித்து வளர பன்னெடுங்காலமாக மதுரையில் அன்னை மீனாட்சி கொலு வீற்றிருப்பதைப் போல உலக மக்களின் உள்ளத்தில் எல்லாம் பக்தி உணர்வு ஊட்ட அமெரிக்க நாட்டு டெக்ஸாஸ் மாநிலத் தில் ஹூஸ்டன் நகரில் அன்னை மீனாட்சிக்கு ஓர் ஆலயம் எழுப்ப அமெரிக்கவாழ் இந்துக்கள் _ குறிப்பாகத் தமிழ் மக்கள் முன்வந்தனர். ஹூஸ்டன் நகரில் ஆலயம் எழுப்பி அன்னை மீனாட்சியின் திரு உருவத்தை பிரதிஷ்டை செய்யவும் குட முழுக்கு நடத்தவும் 1982 ஜூன் மாதம் 27-ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டது.

ஹூஸ்டன் நகரில் உருவாகிய ஆலயத்தில் அன்றாட பூஜைகள் செய்வதற்கும் குடமுழுக்கு விழா நடத்துவதற்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சேர்ந்த சந்திரசேகர் பட்டர் என்ற தங்கம் பட்டர் மதுரையில் இருந்து பயணம் மேற் கொண்டார்.

மதுரை கோயிலின் சார்பில் ஹூஸ்டன் ஆலயத்துக்கு வெண்கலத் திருஉருவம் ஒன்றும், பட்டாடை ஒன்றும் காணிக்கையாக அவர் மூலம் கொடுத்து அனுப்பப்பட்டன. தங்கம் பட்டர் சென்னையில் இருந்து 1982 ஜூன் மாதம் 21-ஆம் தேதி விமானம் மூலம் மும்பை வழியாக ஹூஸ்டன் புறப்பட்டார்.

அந்த விமானம், மும்பை விமான நிலையத்தில் இறங்குவதற்குள் விபத்துக்குள்ளாகிச் சிதறி விழுந்தது. தாம் எடுத்துச் சென்றிருந்த உடைமைப் பொருட்களோடு காணிக்கைப் பொருளான அன்னை மீனாட்சியின் திரு உருவத்தையும் பட்டாடையையும் தங்கம் பட்டர் தன்னுடனேயே வைத்திருந்தார். அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வித ஆபத்தும் நேராமல் உயிர் தப்பித்த தங்கம் பட்டர் சற்று சுதாரித்து எழுந்து பார்த்தபோது அவர் எடுத்துச் சென்றிருந்த மற்ற உடைமைகள் யாவும் எரிந்து சாம்பலாகியிருந்தன. ஆனால், மீனாட்சியின் திருவுருவமும் பட்டாடையும் எந்த வித பாதிப்புமின்றி தனக்கு முன்பாக ஜொலிப்பதைக் கண்டு பிரமித்தார்.

தம்மோடு பயணம் செய்த 18 பேர், விமானம் தரை இறங்குவதற்கு முன்னதாகவே உயிரிழந்தபோதிலும் அன்னை மீனாட்சியின் அருளால் உடலில் ஒரு கீறல்கூட இன்றி தங்கம் பட்டர் உயிர் தப்பித்தார். என்னே அன்னையின் அருள்!

- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்