Published:Updated:

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

அர்த்தமுள்ள ஹோமங்கள்!
ஹோம மந்திரம் சொல்வது என்ன?
 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- ‘வித்யாவாரிதி' சுப்ரமணிய சாஸ்திரிகள்

அர்த்தமுள்ள ஹோமங்கள்!
அர்த்தமுள்ள ஹோமங்கள்!

செ வ்வாய்க்கு அடுத்து புதன். இந்தக் கிரகத் தின் அதிதேவதை விஷ்ணு. பிரத்யதி தேவதை நாராயணன். இதற்கான ஹோம மந்திரங்களின் சுருக்கம்: ‘ஏ அக்னியே... எங்கள் விஷயத்தில் கவனமாக இரு. இந்த யாகத்தைச் செய்யும் எஜமானரின் விருப்பங்களைக் கவனி. உன்னையே தந்தையாகவும், கஷ்டங்களிலிருந்து காப்பாற்றுபவராகவும் கருதுகிறோம்.

திரிவிக்கிரம அவதாரம் எடுத்த விஷ்ணு, உலகம் முழுவதையும் பிரித்து பூமியில் ஓர் அடியும், பாதாள லோகத்தில் ஓர் அடியும், சொர்க்கத்தில் ஓர் அடியும் வைத்தார். மூவுலகின் புழுதி படிந்த விஷ்ணுவின் அந்தக் காலடியில் இந்த உலகமே அடங்கி இருக்கிறது’ என்பதாகும்.

இதற்கு அடுத்த கிரகம் குரு. இவரின் அதி தேவதை இந்திரமருத்து. பிரத்யதி தேவதை பிரம்மா. இவர்களுக்கான ஹோம மந்திரங்களின் சுருக்கம்: ‘ஹே பிரகஸ்பதியே! ரத்தினம் போன்ற உயர்ந்த வகை செல்வங்களை அனுபவிக்க மகாராஜாக்கள்தான் மற்றவர்களைவிட தகுதியான வர்கள். அமைச்சர்களிடம் அணிகலன்கள், ஆபர ணங்கள் போன்றவை விளங்குகின்றன. தங்கள் பலத்தினால் உயிரைக் காப்பாற்றும் படைபலமும் இவர்களிடம் உண்டு. இந்த எல்லாச் செல்வங்களும் விசித்திரமானவை. பர மாத்ம சொரூபத்திலிருந்து உருவான பிரகஸ்பதியே... இந்தச் செல்வங்கள் யாவும் எங்களிடமும் இருக்கும் படி செய்வாயாக.

ஹே மருத்கணங்களோடு கூடிய இந்திரனே! நல்ல யாகங்கள் செய்த எங்கள் முன்னோர்கள் உன்னை இன்பமடையச் செய்து, உனது அருளினால் நல்ல பலன்களைப் பெற்றனர். அதேபோல இந்த யாகத் தைச் செய்யும் எஜமானரும் உனக்குப் பணிவிடை செய்கிறார்.

சிருஷ்டியின் ஆரம்பத்தில் பரமாத்மா உலக வடிவமாக உண்டானார். பிறகு கிழக்குத் திசையில் சூரியனாகி, நன்கு பிரகாசித்து, நான்கு திசைகளையும் பிரித்து எல்லா இடங்களிலும் வியாபித்துக் கொண்டார். பஞ்ச பூதங்களை அவர் தான் பிரித்தார். அப்படியே மலைகள், நதிகள், சமுத் திரங்கள் முதலியவற்றையும் மற்ற எல்லா உலக இயல்புகளையும் அவரே நிர்மாணம் செய்தார்’ என்பதே இந்த மந்திரங்களின் அர்த்தமாகும்.

அடுத்தது சுக்கிரன். இந்தக் கிரகத்தின் அதிதேவதை இந்திராணி. பிரத்யதி தேவதை இந்திரன். இவர் களுக்கான ஹோம மந்திரத்தின் சுருக்கம்: ‘நிர்மல மானவரும், கிரணங்களோடு கூடியவருமான அக்னி பகவானுக்கு நன்கு பரிசுத்தமான இந்த ஹவிஸை அளியுங்கள். தியானத்தின் மூலம் நல்ல புத்தியை சம்பாதியுங்கள்.

தேவலோகப் பெண்களின் தலைவியான இந்தி ராணி சிறந்த பதிவிரதை. அவள் கணவர், முதுமையின் காரணமாக மறைவதே கிடையாது.

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

உலகம் முழுமைக்கும் மேலானவராக விளங்குப வரும், சிறந்தவருமான இந்திரனை அழைக்கிறோம். நல்ல புத்திரர்கள், மற்ற வசதிகள் கிடைக்க அவர் விசேஷ அனுக்கிரகம் செய்யட்டும்’ என்பதாகும்.

இதற்கு அடுத்தது சனி. இந்த கிரகத்தின் அதிதேவதை பிரஜாபதி. பிரத்யதி தேவதை எமதர்மராஜன். இவர் களுக்கான ஹோம மந்திரங்களின் சுருக்கம்: ‘ஜல தேவதைகள் எங்களுக்கு விருப்பமான குடிநீரையும், மற்றவற்றையும் கொடுக்கட்டும். மேலும் எங்களுக்கு சுகம் ஏற்படும்படியும், துன்பங்கள் விலகும்படியும் தண்ணீர் நான்கு புறத்திலும் பெருக்கெடுத்து ஓடட் டும்.

ஹே பிரஜாபதி தேவதையே! உலகத்தில் உண்டாகி இருக்கும் எல்லாப் பொருட்களையும் வியாபித்துக் கொள்ளும் சக்தி உன்னைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. நாங்கள் எந்தெந்த விருப்பங்களை எதிர் பார்த்து இந்த ஹோமத்தைச் செய்கிறோமோ, அவை எல்லாம் எங்களுக்கு ஸித்திக்கட்டும். உங்கள் அனுக்கிரகத்தால் நாங்கள் பெரும் செல்வத்துக்கு அதிபதி ஆகக் கடவோம்.

ஹே எமதர்மராஜனே! பித்ருக்களுடன் ஒன்றாகி இந்த யாகத்துக்கு வந்து அமர்வாயாக. இங்கு சொல்லப்படும் மந்திரங்கள் உன்னை ஆவாகனம் செய்யட்டும். இந்த ஹோமத்தில் சமர்ப்பிக்கப்படும் பொருட்களால் நிறைவடைந்து, இதைச் செய்யும் எஜமானனைச் சந்தோஷப்படுத்துவாயாக’ என்பதே இந்த மந்திரங்களின் அர்த்தமாகும்.

அடுத்தவர் ராகு. ராகு கிரகத்தின் அதி தேவதை சர்ப்பம். பிரத்யதி தேவதை நிர்ருதி தேவி. இவர்களுக் கான ஹோம மந்திரங்களின் சுருக்கம்: ‘பிரஜாபதியின் பாதுகாப்பினால் விசித்திரமான இந்த யாகம் எங் களை வந்து சேர்ந்தது. இது பிரம்மாவின் அதிசய சக்தியினால் சூழப்பட்டதாக இருக்கிறது. இது எப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு நண்பரைப் போல எங்கள் மீது பிரியம் காட்டுகிறது.

அக்னியானவர், சூரிய வடிவில் இருந்து கொண்டு எப்போதும் பயணிக்கிறார். வெண் மையான ஒளியாக இருந்து இந்த உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கிறார். தன் தாயான பூமியையும் அது வந்தடைகிறது. தந்தையான சொர்க்கலோகத்தையும் அது சிறந்த முறையில் சென்றடைகிறது.

இந்த யாகத்தைச் செய்யும் எஜமானனே! உன் கழுத்து முதலான இடங்களில் நிர்ருதி தேவியானவள் அவிழ்க்க முடியாத பாசக்கயிற்றைக் கட்டினாள். அப்படிக் கட்டப்பட்ட கயிற்றை இப்போது அவிழ்த்து விடுகிறேன். இந்த விடுவிப்பு, ஆயுளின் நடுவில் சில காலத்துக்கு மட்டுமில்லை. ஆயுள் முழுக்க இருக்காது. இனி சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டு எல்லா வித மான உணவுகளையும் எந்தவித இடையூறும் இல்லாமல் சாப்பிடலாம்’ என்பதே ராகு ஹோம மந்திரங்களின் சுருக்கமாகும்.

அர்த்தமுள்ள ஹோமங்கள்!

கடைசியாக கேது. இந்தக் கிரகத்தின் அதி தேவதை பிரம்மா. பிரத்யதி தேவதை சித்ரகுப்தன். இவர்களுக்கான ஹோம மந்திரங்களின் சுருக்கம்: ‘அக்னி, இந்திரன் முதலான எல்லா தேவர்களையும் நியமனம் செய்பவராக பரமாத்மா இருக்கிறார். அந்த நான்முகரான பிரம்மா பல ரூபங்களில் இருக்கிறார். இலக்கண சுத்தமாக எழுதக் கூடிய வியாசர், வால்மீகி போன்றவர்களாக அவர்தான் இருக்கிறார். அந்தணர்களுள் கோத்ரங்களைக் குறிப்பிடும் முக்கிய ரிஷியாக இருக்கிறார். நாலு கால் பிராணிகளில் மிக பலம் பொருந்திய எருமை மாடாக இருக்கிறார். பறவைகளில் பெருங்கழுகாக இருக்கிறார். மரக்கூட்டமான காடுகளைப் பொறுத்தவரை அவற்றை வெட்டக் கூடிய கோடரியாக அவர் இருக்கிறார். யாகத்துக்கு மந்திர சக்தியாக இருப்பவர் அவரே. எல்லாவற்றையும் சுத்தம் செய் யும் கங்கா தீர்த்தமும் அவரே. ஹோமத் திரவியங்களை ஆக்கிர மித்து பரமாத்மாவாக அவர் விளங்குகிறார்.

சயனத்தில் உள்ள விசித்திரமான பலம் கொண்ட அக்னி பக வானே! எல்லோரையும் மகிழ்விக்கக் கூடிய நீ ஸ்தோத்திரங்களால் துதிக்கப்படுகிறாய். உன்னை ஸ்தோத்திரம் செய்கிற எங்களுக்கு செல்வங்களை அளிப்பாயாக. மகன்கள், பேரப்பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழக்கூடிய பெரிய செல்வத்தை எங்க ளுக்கு அளிப்பாயாக’ என்பதே இந்த மந்திரங்களின் அர்த்தமாகும்.

இவ்வாறு நவக்கிரகங்களுக்கான ஹோமங்கள் முடிந்ததும், கும்பத்தில் ஆவாகனம் செய்திருக்கும் பிற தேவதைகளுக்கு ஹோமம் செய்ய வேண்டும்.

ஹோமத்தின் முடிவில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்றபடி கிரகசாந்தி செய்யும்போது சில பாராயணங்களைச் செய்ய வேண்டும். ஒருவரின் கிரக நிலையில் சூரியன் சரியில் லாத இடத்தில் இருந்தால், அவர்கள் ஹோமம் செய்யும்போது ‘ஆதித்ய ஹ்ருதயம்’ ஆறு தடவை பாராயணம் செய்வது நல்லது.

இதே போல சந்திரனால் பாதிப்பு என்றால், துர்க்கா சப்த ஸ்லோகி (துர்க்கையைப் பற்றிய ஏழு ஸ்லோகங்கள் அடங்கியது) பத்து தடவை சொல்ல லாம். செவ்வாய் கிரகத்தால் பாதிப்பு என்றால், ருண மோசன மங்கள ஸ்தோத்திரத்தை ஏழு தடவை பாரா யணம் செய்யலாம். புதன் கிரகம் சரியில்லாத இடத்தில் இருந்து, தொல்லைகள் கொடுத்தால், பாகவதத்தில் வரும் கிருஷ்ணாவதாரம் பதினேழு தடவை பாராயணம் செய்யலாம். அல் லது நாராயணீயத்தில் வரும் கிருஷ்ணாவதாரம் படிக்கலாம். குருவால் பாதிப்பு ஏற்பட்டால், வேத மந்திரங்களை நிறையச் சொல்ல வேண்டும்.

சுக்கிரன் சரியில்லாமல் இருந்தால், லட்சுமி சகஸ்ரநாமம் அல்லது கனகதாரா ஸ்தோத்திரம் இரு பது தடவை பாராயணம் செய்ய வேண்டும். சனி சரியில்லாமல் இருந்தால், நவக்கிரக ஹோமத்தோடு ஐயப்ப சகஸ்ரநாமம், ஆஞ்சநேய சகஸ்ரநாமம் அல்லது அனுமன் சாலீஸா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பத்தொன்பது தடவை சொல்ல வேண்டும்.

இதேபோல் ராகுவால் பாதிப் புகள் இருந்தால், விஷ்ணு சகஸ்ர நாமம் அல்லது ஆஞ்சநேய சகஸ்ர நாமம் பதினெட்டு தடவை பாராய ணம் செய்ய வேண்டும். கேது சரியில்லாமல் இருந்தால், புருஷ ஸ¨க்தம், விநாயக சகஸ்ரநாமம் அல்லது கணபதி அதர்வசீர்ஷம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஏழு தடவை பாராயணம் செய்ய வேண்டும்.

கடைசியாக ஹோமத்தில் ஏதாவது தவறுகள் நேர்ந் திருந்தால், அதற்காக இறைவனிடம் பிராயச்சித்தம் கேட்கும் ‘பிராயச்சித்த ஹோம’த்தை செய்துவிட்டு, உபஸ்தானம் செய்து ஹோமத்துக்கு வந்திருந்த நவக்கிரகங்கள் உள்ளிட்ட எல்லா தேவர்களையும் சந்தோஷமாக அவர்களது இடத்துக்கே வழியனுப்பி வைக்க வேண்டும். ‘பல தானம்’ என்ற ஒன்றை ஹோமம் செய்யும் அந்தணர்கள் செய்யச் சொல்வார்கள். இந்த ஹோமத்தின் விசேஷமான அம்சமே இது! கெடுதல் களைக் களைந்து வாழ்க்கையில் நல்ல அம்சங்கள் திரும்பவும் வருவதற்காக செய்யப்படுவதுதான் நவக்கிரக ஹோமம். பலமுள்ள பொருட்களை தானம் செய்வதன் மூலம் இது சாத்தியமாகும். பல தானம் என்றால் இதுதான். வஸ்திரம், தானியம், தட்சணை, பிரதிமை (நவக்கிரக பிரதிமைகளை வெள்ளியால் செய்து தானம் தரும் வழக்கமும் உண்டு!) போன்ற வற்றைத் தரலாம்.

ஹோமம் நிறைவு பெற்றதும் நவக்கிரகங்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்பது கலசங்களில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து அதை யாருடைய பாதிப்புக்காக ஹோமம் செய்கிறோமோ, அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் செய்து கொண்டாலும் தப்பில்லை. சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அதை பிரசாதமாகக் கொள்ள வேண்டும்.

(அடுத்த இதழில் சந்திப்போம்...)