Published:Updated:

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் இல்லை!

நமது நிருபர்
திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் இல்லை!
திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் இல்லை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கோடை கால வார விடுமுறை நாட்களில், வி.ஐ.பி தரிசனம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதியில், தனி நபராக வரும் வி.ஐ.பி-களுக்கு, அவரது உற்றார் உறவினர்களுக்கு, அவரது பரிந்துரைக் கடிதம் எடுத்து வருவோருக்கு என மொத்தம் மூன்று வகைகளில் வி.ஐ.பி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுவந்தனர். இந்த நிலையில், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சாமானிய பக்தர்கள் அதிகளவில் தரிசனம் காண வருவார்கள் என்பதால், வி.ஐ.பி-கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு தரிசனம் கிடையாது என திருப்பதி தேவஸ்தான கமிட்டி அறிவித்துள்ளது. பதவிகளில் இருக்கும் வி.ஐ.பி-களுக்கு மட்டுமே இதில் விலக்கு அளிக்கப்படுவதாக கமிட்டி நிர்வாகி சாம்பசிவ ராவ் கூறியுள்ளார்.

திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் இல்லை!

இதையடுத்து, அர்ச்சனைப் பொருள்கள் மற்றும் தரிசன டிக்கெட்களுக்கான கட்டண உயர்வு குறித்தும் கமிட்டி சார்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், வளர்ச்சிப் பணிகளுக்காக 89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான கமிட்டி அறிவித்துள்ளது.