Election bannerElection banner
Published:Updated:

எந்த ராசிக்காரர்கள் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்? #Astrology

எந்த ராசிக்காரர்கள் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்? #Astrology
எந்த ராசிக்காரர்கள் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்? #Astrology

எந்த ராசிக்காரர்கள் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்? #Astrology

பெற்றோர்களுக்குத் தங்கள் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு  தேர்ச்சி பெற்று விட்டாலோ ப்ளஸ்-டூ தேர்ச்சி பெற்றுவிட்டாலோ அவர்களை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்று ஒரு கவலையும் பயமும் வந்துவிடும்.  எந்தத் துறையில் அவர்களை ஈடுபடச் செய்வது? அவர்களுக்கு அந்தத் துறை சிறப்பாக அமையுமா?  என்று நம் மனதில் எழும் சந்தேகங்களைக் கேள்விகளாக்கி, ஜோதிடச் சுடர் ஞானரதத்தைக் கேட்டோம். 

‘உத்யோகம் புருஷ லட்சணம்' என்று சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால், தற்காலத்தில், 'உத்யோகம் சகலருக்கும் லட்சணம் என ஆகிவிட்டது. காரணம் 'அந்த காலத்தில் கணவன் ஒருவர் மட்டும் வேலைக்குப் போனால் போதும்னு இருந்தாங்க. அப்போ தேவைகள் குறைவு. இப்போ எல்லாவிதத்திலேயும் தேவைகள் அதிகம். ஒருத்தரோட சம்பளம் மட்டும் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாம போகுது. அதனால், பெண்களும் வேலைக்குச் செல்லவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். 

ஒருவர் படித்தது ஒன்று...  பார்க்கின்ற வேலை ஒன்றாக இருக்கிறது. இதைத் தவிர்க்க அவரவர் ராசிக்குரிய படிப்புகளைத் தேர்வு செய்து படித்தால் நிச்சய வெற்றி கிடைக்கும்.

ஜோதிட ரீதியாக தொழில்ஸ்தானமான 10-ம் இடம் எந்த ராசிக்காரருக்கு எந்தத் தொழில் நன்றாக வருமோ அந்தத் தொழிலுக்குத் தொடர்புடைய படிப்பைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

மேஷம்

ராணுவம், அறுவை சிகிச்சை டாக்டராவது, ரத்தப்பிரிவைக் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கூடப்பணி, அறுவை சிகிச்சைக்குரிய கருவிகள் தயாரிப்பு, காவல் துறை, ரியல் எஸ்டேட்,  சிவில் என்ஜினீயரிங், குங்குமம் தயாரிப்பு, சாயப்பட்டறை, பொதுச் சேவை, மக்கள் தொண்டு போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றவை. 

ரிஷபம்

கலைத்துறையான சினிமா, இசைத்துறை, நடிப்பு, இயக்குனர், படத் தயாரிப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், கேமரா மேன், மேக்கப் மேன், சின்னத் திரை, காஸ்ட்யூமர், அழகு நிலையம் நடத்துபவர் மற்றும் கணினித் துறை போன்ற துறைகளைக் குறிப்பிடலாம். 

மிதுனம்

பத்திரிகைத் துறை, நானோ டெக்னாலஜி, விவசாயத் துறை, ஜோதிடம், பேச்சாளர், வழக்கறிஞர், இலக்கியத் துறை, அக்கௌண்டண்ட், ஆடிட்டர், வீணை வாசித்தல், புல்லாங்குழல் வாசித்தல், இசைக்கருவிகளை இயக்குதல், பாடல் கற்றல், பைலட், நடனம் கற்றல், கதை, கட்டுரைப் படைப்பு, தரகர், கமிஷன் மற்றும் ஏஜென்ட் துறை, வாங்கி விற்கும் டிஸ்ரிபூட்டர்ஸ், மார்க்கெட்டிங், கணினிப் பொறியாளர், ஊடகத்தில் வேலைப் பார்த்தல் போன்றவை.

கடகம்

நீர் சம்பந்தப்பட்ட தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக பால், எண்ணெய், பெட்ரோல் பங்க், குளிர்பானம் விவசாயம், நீராவி இயந்திரத்தில் பணிபுரிதல், கடல்ப் பொருட்கள், சங்குப் பொருட்கள், மீன் உணவகம், மரைன் இன்ஜினீயரிங் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

சிம்மம்

அரசுத் துறை, அலுவலக கிளார்க் தொடங்கி அதிகாரி வரை உள்ள பணிகள், கவுன்சிலர் தொடங்கி அமைச்சர் வரை உள்ள பணிகள்,  டாக்டர் தொழில், பொன் நகை, காண்ட்ராக்டர் வேலை, அரசியல்,  நூல் வியாபாரம், டெக்ஸ்டைல் டெக்னாலஜி  போன்றவை. 

கன்னி

சித்த மருத்துவம், ரியல் எஸ்டேட், கணக்குத் துறை, ஆடிட்டர், இசை, நடனம், நாடகத்துறை, எடிட்டிங், போட்டோகிராபி, பத்திரிகைத் துறை, வழக்கறிஞர், இலக்கியத் துறை, கதை, கட்டுரை எழுதுவது, அயல்நாட்டுத் தூதர், மார்க்கெட்டிங் துறை, வாங்கி விற்பது, ஏஜென்ட், கணினிப் பொறியாளர்,  ஊடகத்தில் வேலைப் பார்த்தல் போன்றவை.

துலாம்

கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், மிருதங்கம், நாதஸ்வரம், நட்டுவாங்கம், இசை அமைப்பது, சவுண்ட் இன்ஜினீயரிங், 
ஏரோ ஸ்பேஸ், ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங், பைலட் சினிமா இயக்குனர், பிலிம் டெக்னாலஜி, சினிமோடோகிராபி போன்றவை.

விருச்சிகம்

டாக்டர், ராணுவம், மருந்து தயாரிப்பு, உயிர் வேதிப்பொருட்களைப் பற்றிய பார்மாசூட்டிகல் என்ஜினியரிங், அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள், ரத்தப்பிரிவுகளைக் கண்டறியும் படிப்பு, லேப் டெக்னிசியன்ஸ் துறை. அஞ்சல் துறை, காவல் துறை போன்றவை

தனுசு

புரோகிதர், ஆன்மிகப் பணியில் ஈடுபடுதல், போதித்தல், டீச்சர், புரொபசர், மஞ்சள் வியாபாரி, தங்க  நகை செய்பவர், நகைக் கடை நடத்துபவர், அறநிலையத்தில் பணிபுரிபவர், அமைச்சர், ஆலோசகர், வங்கிப் பணி, ஆடிட்டர் போன்றவை.

மகரம்

நிலக்கரிச் சுரங்கம், கட்டடத்தொழில், இயந்திரப் பணி, இறைச்சி வியாபாரம், பஞ்சாயத்துத் தலைவர், தொழில் சங்கத் தலைவர், வான்வெளி துறை, இரும்பு சம்பந்தப்பட்ட பணி போன்றவை.

கும்பம்

அகழ்வாராய்ச்சி, தடயங்கள் பற்றிய படிப்பு, தொல்பொருள் ஆராய்ச்சி, பட்டப்ப்டிப்பு, பி.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங் உரம், சர்க்கரை, மருந்துகள், சாயம், சிமெண்ட் தொழிற்சாலை கண்ணாடி தயாரிப்பு, பி.டெக் தோல் தொழில் நுட்பம் நெசவுத்தொழில்நுட்பம் போன்றவை.  

மீனம் 

புரோகிதர், ஆன்மிகப் பணியில் ஈடுபடுதல், ஆசிரியர் பணி, ப்ரொபசர், மஞ்சள் வியாபாரம், தங்க நகை செய்பவர், நகைக் கடை நடத்துபவர், அறநிலையத்துறை பணிபுரிதல், அமைச்சர், வங்கிப்பணி, ஆடிட்டர் போன்றவை. இந்தத் துறைகளைச் சார்ந்த படிப்புகளைப் படித்தால் சிறப்பாக வெற்றி பெறலாம்.

- எஸ்.கதிரேசன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு