Published:Updated:

சகல செல்வங்களை பெற உதவும் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம்!

சகல செல்வங்களை பெற உதவும் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம்!

சகல செல்வங்களை பெற உதவும் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம்!

சகல செல்வங்களை பெற உதவும் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம்!

சகல செல்வங்களை பெற உதவும் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம்!

Published:Updated:
சகல செல்வங்களை பெற உதவும் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம்!

சகல செல்வங்களைப் பெற உதவும் சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரம், திருப்பதியில் இருப்பதைப் பற்றித் தெரியுமா? அதற்கு முன், திருப்பதியைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துக்கொள்வோம்.  புனிதமான திருமலையில் காலால் நடப்பதே  குற்றம் என்று நினைத்த ராமாநுஜர், தன் முழங்கால்களால் நடந்தே ஏழு மலைகளையும் கடந்து, திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். அத்தகைய புனிதமான தலத்தைப் பற்றி நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள் இங்கே...

திரு+பதி திருப்பதி. திரு என்பது திருமகளையும், பதி என்பது திருமகளின் நாயகராம் விஷ்ணுவையும் குறிக்கும். திருமகளும் விஷ்ணுவும் அருளும் தலம் என்பதால் திருப்பதி என்னும் திருப்பெயர் ஏற்பட்டது. திரு என்னும் திருமகள் நித்தியவாசம் செய்யும் பதி திருப்பதி என்றும் பொருள் கொள்ளலாம். 

பகவான் கிருஷ்ணனாக அவதரித்தபோது, கோவர்த்தனகிரியை ஏழு நாள்கள் தூக்கிப் பிடித்து, பெரும் மழையில் இருந்து யாதவர்களைக் காப்பாற்றிய லீலை நமக்குத் தெரியும். அப்போது அந்த கோவர்த்தன மலை, 'தன்னை ஏழுநாள்கள் தாங்கி நின்ற குழந்தை கிருஷ்ணனை, நாமும் ஏழு மலைகளாக மாறி, காலமெல்லாம் பகவானை சுமந்துகொண்டு இருக்கவேண்டும்' என்று நினைத்ததுபோல், விருக்ஷாசலம், விருக்ஷபாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், நாராயணாசலம், வேங்கடாசலம் என்னும் ஆறு மலைகளைத் தாண்டி, ஏழாவது மலையான சேஷாசலத்தில் வேங்கடப் பெருமாளை தாங்கி நிற்கிறது. 

அலர்மேலு மங்கம்மாவை தரிசியுங்கள்...

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திருச்சானூரில் உள்ள அலர்மேலு மங்கைத் தாயாரை  முதலில் தரிசித்தப் பின்னர்தான் பெருமாளை தரிசிக்கவேண்டும் என்பது ஐதிகம். "எவன் ஒருவன் என் மனைவியான பத்மாவதியை தரிசித்த பின்பு என்னைக் காண வருகின்றானோ, அவனுக்குச் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.."என்று பெருமாளே கூறியுள்ளார்..

கீழ் திருப்பதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சானூர்  எனும் இடத்தில் அமைந்துள்ளது அலமேலு மங்கம்மாவின் திருக்கோயில். தொண்டைமண்டல ஆகாச ராஜா என்னும் அரசர், குழந்தை வரம் வேண்டி யாகம் ஒன்றை நிகழ்த்தினார். அப்போது புஷ்கரணி எனும் தீர்த்தக்குளத்தில் இருந்து பத்மாவதி தாயார் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றது.திருமண வயது வந்ததும் வெங்கடேஸ்வரர் தோன்றி தேவர்கள் வாழ்த்த பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்துகொண்டார். 

ஶ்ரீநிவாசமங்காபுரம்

கீழ் திருப்பதியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது , ஸ்ரீநிவாசமங்காபுரம். திருமணத்துக்குப் பிறகு ஸ்ரீநிவாசன், பத்மாவதி தாயாருடன் தங்கியிருந்த தலம் இது. இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளின் திருநாமம் ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள். திருப்பதி ஏழுமலையானை ஒரு நிமிடம் கூட திருப்தியாகத் தரிசிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்கள் இங்கே இவரை ஆசை தீர தரிசிக்கலாம்.

திருப்பதிக்குச் சென்றால் பொன் பொருள் குவிவது ஏன்?

திருப்பதிக்குச் சென்றால், தொழிலில் லாபம் கிடைக்கும், சம்பளம் உயரும், பதவிகள் தேடி வரும், சொத்து, ஆபரணங்கள் என அனைத்தையும் நாம் பெறலாம் என்று மக்கள் நினைக்கின்றனர். அது உண்மையும்கூட. அது ஏன் தெரியுமா?
ஏழுமலையான் சக்கரம், ஶ்ரீ சொர்ணாகர்ஷண சக்கரம் என்பதால் பொன், பொருள் குவிகிறது. ஆதி சங்கரர் திருப்பதியில் ஶ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யந்திரப் பிரதிஷ்டை செய்திருப்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கு பொன்னும், பொருளும் அருளும் ஸ்தலமாகத் திகழ்கின்றது. செம்பைப் பொன்னாக்கிய கொங்கண சித்தர் சமாதி திருப்பதியில் உள்ளதாலும் திருப்பதியில் பொன் பொருள் குவிகிறது என்று கூறுவர்.

திருப்பதி பிரசாதத்தின் மகிமை :

திருப்பதி பிரசாதம், பசிக்கு உணவாக மட்டுமில்லாமல் பல நோய்களுக்கு அருமருந்தாகவும் உள்ளது. வலி தீர்த்த பிரசாதக் கதை ஒன்று உண்டு தெரியுமா?

ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில், சென்னை மாகாண கவர்னராக பணிபுரிந்தார் தாமஸ் மன்றோ. அவர் திருப்பதி ஆலய வருமானத்தைக் கண்காணிக்க உதவியாளர்களுடன் அடிக்கடி வருவார். வரும்போதெல்லாம் ஏழுமலையானை தரிசிக்கக் காத்திருக்கும் பக்தர்களைக் கிண்டல் செய்வது, மொட்டைத் தலையுடன் வருபவர்கள் தலையில் ஓங்கிக் குட்டுவது போன்ற பல துன்பங்களைப் பக்தர்களுக்கு விளைவிப்பதும், பக்தர்கள் வலியில் துடிப்பதைக் கண்டு ஆனந்தம் அடைவதும் வழக்கம். "கோவிந்தா, உன்னை நாடி வரும் எங்களைத் துன்புறுத்தும் இந்த வெள்ளையனை நீயே கவனித்துக்கொள்.." என்று வலியுடன் வேண்டினர்.
ஒரு நாள் பக்தர்கள் பெருமாளின் பிரசாதத்தைத் தரையில் வைத்துச் சாப்பிடுவதை பார்த்த அந்த கவர்னர். "நீங்க எல்லாம் கண்டதை சாப்பிட்டு, வயிற்று வலி, வாந்தி வந்து, யமலோகம் போகப் போறீங்க.."என்று கூறி கேலி செய்தான். அவ்வளவுதான் அடுத்த கணமே அவனுக்கு வயிற்றுவலி வந்துவிட்டது.ஒரு அடிகூட அவனால் எடுத்துவைக்க முடியவில்லை. மருத்துவர்கள் பலர் வந்து சோதித்தும், மருந்துகள் அளித்தும் பார்த்தார்கள். ஒரு பயனும் இல்லை.

கவர்னர், பிரசாதத்தை அவமதித்ததையும், வலியால் துடிப்பதையும் தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அந்தணர் ஒருவர் அவன் அருகில் வந்தார். "கோவிந்தா.. இவன் செய்த தவறை மன்னித்து, உன் மகிமையை உணர்த்து.." என்று வேண்டிக்கொண்டே கவர்னருக்கு பெருமாளின் வெண்பொங்கல் பிரசாதத்தை ஊட்டினார். என்ன ஆச்சர்யம்! முதல் கவளத்தில் வலி குறைந்தது. முழு பிரசாதத்தையும் சாப்பிட்டு முடிக்கும்போது, மொத்த வலியும் பறந்தே விட்டது. 

தன் தவறை உணர்ந்த கவர்னர், "இனி இந்தப் பிரசாதம் தங்கு தடையின்றி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். "கோடபாயல்" எனும் கிராமத்தின் வரவு- செலவு மொத்தத்தையும். இந்தக் கோயிலின் திருப்பணிக்கே எழுதி வைக்கிறேன் என்று கூறி, அவ்வாறே செய்தார்.கோடபாயல் கிராமத்தின் வருவாயில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட வெண்பொங்கல் காலப்போக்கில், "மன்றோ பிரபு கங்காளம்" என்று அழைக்கப்பட்டது. இன்றும் இந்தப் பிரசாதம் ஆலயத்தில் வெகு பிரசித்தம்.