பசி யாருக்கு?

லக்ஷ்மிபாய் என்ற பெண்மணி, ஷீர்டி சாயிபாபாவின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஒருநாள் பாபா, தான் பசியுடன் இருப்பதாக அவரிடம் கூறினார்.

உடனே லக்ஷ்மிபாய், அவசர அவசரமாக ரொட்டி தயாரித்து, பாபாவின் முன் கொண்டு வந்து வைத்தார். பாபா அதை உண்ணவில்லை. மாறாக, அங்கிருந்த நாய்க்கு அதை அன்புடன் அளித்தார். 'பசி என்றீர்களே... தாங்கள் உண்ணாமல் நாய்க்கு அளிக்கிறீர்களே?’ என்று வருத்தத்தோடு கேட்டார் லக்ஷ்மிபாய். ''நாயின் பசி வேறல்ல; என் பசி வேறல்ல! நாயின் பசியைப் போக்குவது என் பசியைப் போக்குவது போன்றதே!' என்று சொல்லித் தேற்றினார் பாபா.

பக்தனின் கோபம்!

ஒருமுறை பாபாவின் பக்தன் ஒருவன், வேறொருவரை அவர் இல்லாத நேரத்தில் மற்றவர் முன்னிலையில் கண்டபடி திட்டிப் பேசினான். பாபா அப்போது அங்கே இல்லையெனினும், அந்த பக்தன் வேறொருவரை இழித்தும் பழித்தும் பேசுவது அவருக்குத் தெரிந்திருந்தது.

பிற்பகலில், தோட்டத்தில் பாபா வேலையாக இருந்தபோது, புறம்கூறிய பக்தன் அங்கே வந்தான். பாபா அவனை அருகில் அழைத்து, ''அங்கே பார்! அந்தப் பன்றி எவ்வளவு சுவாரஸ்யமாக மலத்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது. உன் நடத்தையும் இந்த மாதிரிதான்... சற்று முன், மற்றவனின் அழுக்கை உன் நாக்காலேயே நக்கி நக்கி நீக்கினாயே! ஆமாம், நீ யாரைத் திட்டுகிறாயோ, அதன்மூலம் அவரின் மாசுகளையும் கழிவுகளையும் நீதான் பெற்றுக் கொள்கிறாய்!'' என்றார்.

பக்தன் மனம் திருந்தினான்.

'ஸ்ரீராமனையே கண்டேன்!’

வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் ஷீர்டிக்குச் செல்ல விரும்பினார். மருத்துவரான தன் நண்பரையும் உடன் வரும்படி அழைத்தார் அந்த அதிகாரி. மருத்துவ நண்பரோ, 'நான் ஸ்ரீராமனின் பக்தன். அவரை வணங்கும் நான் வேறு எவரையும் வணங்கமாட்டேன்’ என்று கூறினார். பாபாவை வணங்கும்படி எவரும் வற்புறுத்தமாட்டார்கள் என்றும், நட்பின் அடிப்படையில் தன்னுடன் வரும்படியும் அவரைக் கேட்டுக்கொண்டார் அதிகாரி. மருத்துவரும் சம்மதித்தார்.

இருவரும் ஷீர்டியை அடைந்து துவாரகாமாயிக்குச் சென்றனர். அங்கே பாபாவைத் தரிசித்ததும் அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார் மருத்துவர். அதிகாரிக்கு ஆச்சரியம். ''பாபாவை வணங்கமாட்டேன் என்றாயே... இப்போது எப்படி?'' என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் மருத்துவரிடம் இருந்து பதில் வந்தது...

''இங்கே ஆசனத்தில் எனது அன்புக்கு உரிய ஸ்ரீராமனையே கண்டேன். அதனால் வணங்கினேன்!''