பக்தியின் வெளிப்பாடுகளில் பஜனைப்பாடல்களும் அடங்கும். அதிலும், பண்டரிபுரம் ஸ்ரீபாண்டுரங்கன் குறித்த பஜன் பாடல்கள் அவனது அடியார்களை நெக்குருக வைக்கும். கண்களில் நீர் மல்க, நெஞ்சில் பரவசம் பொங்க, மெய்ம்மறந்து பாடிக்கொண்டே இருக்கலாம். விட்டலனின் பாடல்களைப் பாடுவது மட்டுமல்ல, செவிமடுப்பதற்கும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.

பாண்டுரங்கனிடம் பிரேமபக்தியுடன் இருந்த பக்தர் ஒருவருக்கு, அவர் இருந்த இடத்திலேயே பண்டரிபுரத்தில் பாடப்படும் பஜனைப் பாடல்களைக் கேட்கும் வரம் கிடைத்தது.

மும்பையின் புறநகர்ப் பகுதியை ஒட்டி, திட்டிவாலா என்றொரு கிராமம் இருக்கிறது. இங்குள்ள பாண்டுரங்கனின் கோயிலில் நித்ய பூஜை செய்து வந்தார் பூசாரி ஒருவர். அவரை பண்டிட்ஜி என்று அழைத்தார்கள். அவ்வப்போது பண்டரிபுரம் செல்லும் பண்டிட்ஜி, அங்கே பாண்டுரங்கன் குறித்த பஜனைப் பாடல்களில் தனது மனத்தைப் பறிகொடுத்தார்.

காலம் கழிந்தது. முதுமைப் பருவத்தில், பண்டரிபுரம் போக முடியாமல் தவித்தார் பண்டிட்ஜி. 'பாண்டுரங்கன் ஆலயத்தின் பஜனைப் பாடல்களை- நாம சங்கீர்த்தனத்தை இனி என்னால் கேட்க முடியாதா?’ என்று வருந்தினார். ஒருநாள், துக்கம் மிகுதியால் தான் பூஜை செய்யும் கோயிலுக்குச் சென்று, 'இந்த நிலைமை தொடர்ந்தால், என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்றவாறு, பாண்டுரங்கனின் பீடத்தில் தலையை மோதிக்கொண்டு, குருதிபொங்க மயங்கிச் சரிந்தார்.

அவரது கனவில் வந்த பாண்டுரங்கன், ''இனி, நீவிர் இருக்கும் இடத்திலேயே, பண்டரிபுரத்தில் பாடப்படும் எனக்கான பஜனைப் பாடல்களைக் கேட்கலாம். எந்த இடத்தில் உனது சிரசை மோதிக்கொண்டாயோ, அந்த இடத்திலேயே உன் ஆசை நிறைவேறும்'' என்று அருள்புரிந்து மறைந்தாராம்.

அன்றுமுதல், திட்டிவாலா பாண்டுரங்கன் கோயில் பீடத்தில் காதை வைத்துக் கேட்டால், பண்டரிபுரத்தில் செய்யப்படும் பஜனைகள் கேட்பதாக நம்பிக்கை!

ஆதியில் சிறியதாகத் திகழ்ந்த கோயில், பின்னாளில் விரிவுபடுத்தப்பட்டது. ஸ்ரீபாண்டுரங்கன், ஸ்ரீருக்மாயீ பீடத்தில் மூலவர் விக்கிரகங்களுக்குச் செய்யப்படும் அபிஷேக நீர் விழுவதற்காக கோமுக் வடிவம் நிர்மாணிக்கப்பட்டது. அதில் பொருத்தப்பட்டிருக்கும் குழாயில் காதை வைத்துக் கேட்டால், பண்டரிபுரத்தின் பஜனைகள் கேட்பதாகக் கூறுகின்றனர் பக்தர்கள்.

மும்பை செல்பவர்கள் அவசியம் இந்தக் கோயிலுக்குச் சென்று இந்த சுகானுபவத்தைப் பெறலாம். மும்பை நகரில் இருந்து சுமார் 69 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த ஊர்.

- மாலதி சந்திரசேகரன்