ஆயிரம் இதழ் தாமரை, ஞான சூரியன் என்றெல்லாம் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரால் பாராட்டிப் போற்றப்பட்ட நம் சுவாமி விவேகானந்தர் இன்றிருந்தால், அவருக்கு 150 வயது. 1863 ஜனவரி 12-ஆம் தேதி, இரண்டு சூரியன்கள் உதயமாயின. ஒன்று, வழக்கம்போல் ஒளியைக் கொடுத்து உலகைக் காத்தது; மற்றொன்று, பின்னாளில் ஞான ஒளியைப் பாய்ச்சி, இந்த உலகையே தழைத்தோங்கச் செய்தது!

அனைவருக்கும் உரிய அந்த ஞானபானுவை நம்முடையவர் என்று உரிமையோடு கொண்டாடும் பாக்கியம் பெற்றவர்கள் நாம். அந்தக் கருணை நிறை ஒளிப் பிழம்பின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை இங்கே பார்ப்போம்.

ஒவ்வொன்றிலும் ஒரு பாடம்; ஒவ்வோர் அசைவும் வேதம். எப்படியெல்லாம் இருந்திருக்கிறார் நம் சுவாமிஜி என்று நினைத்தால் வியப்பு மேலிடுகிறது.

அடடா! 39-வது வயதில் தன்னைத் தானே இந்த உலகத்தில் இருந்து விடுவித்து, தன் குருநாதருக்கு அருகில் சென்று அமர்ந்த நம் சுவாமிஜி, மேலை நாட்டுச் சீடரான பெண்மணியிடம், ‘I Shall never see forty’ என்று கூறியதைப் படிக்கும்போது, கண்ணீர் பெருக்கெடுத்து வழிவதைத் தவிர்க்க முடியவில்லை. கண்ணீரை விரும்பாதவர்தான் சுவாமிஜி! இருப்பினும், அவர் மனித குலத்தின்மீது காட்டிய அன்புக்கும் கருணைக்கும் வேறு எதைக் காணிக்கையாகத் தரமுடியும்?

''அவர் வாழ்க்கையில் இருந்து பாடங்களைக் கற்று, அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது ஒன்று மட்டுமே சுவாமிஜிக்கு நாம் செய்யும் கைம்மாறு. நினைப்பதற்கு வியக்கத்தக்கதாயினும், நிச்சயமாக எனது அதிர்ஷ்டத்தின் காரணமாக, என் குருநாதர் சுவாமி விவேகானந்தரின் போதனை களை, அவர் இங்கிலாந்து வந்த இரண்டு முறையும் என்னால் கேட்க முடிந்தது (1895-1896)'' என்கிறார் சகோதரி நிவேதிதை.

''முதல் தடவை அவரைப் பார்த்தபோது, நாங்கள் 15 அல்லது 16 பேர் இருந்தோம். எங்களில் பலரும் நெருக்கமான தோழிகள். எங்களின் நடுவில், அவர் தனது கருஞ்சிவப்பு நிற ஆடையில் அமர்ந்திருந்தார்- தொலைதூர நாட்டில் இருந்து எமக்கான செய்தியைக் கொண்டு வந்தவர் போல! அப்போதும் எப்போதும் 'சிவ சிவ’ என்ற நாமம் அவர் வாயிலிருந்து ஒலித்தபடி இருந்தது.

நீண்ட காலமாகத் தியானம் செய்பவர்களின் கண்களில் காணப்படும் ஒளியுடனும், மென்மையுடனும், கம்பீரத்துடனும் அவர் வீற்றிருந்தார். பின்பு பேச ஆரம்பித்தார். 'தெருமுனையில் நின்று தைரியமாக, எங்களிடம் கடவுளைத் தவிர வேறேதுமில்லை என்று சொல்லக்கூடிய இருபது இளைஞர்களும் யுவதிகளுமே இன்று இந்த பூமிக்குத் தேவை. யார் சொல்கிறீர்கள்?’ என்று அவர் எழுந்து நின்று பார்வையாளர்களை வினவினார். பின்பு, இன்னும் கர்ஜிக்கும் குரலில், 'ஏன் பயப்பட வேண்டும்?’ என்று கேட்டார்!'' என்று, நம் சுவாமிஜி கர்ஜித்ததைக் கண்முன்னே காட்சியாய் விவரித்து எழுதியுள்ளார் சகோதரி நிவேதிதை.

எம்மாகால்வே என்ற புகழ்பெற்ற பிரெஞ்சு நாட்டுப் பாடகி, சுவாமிஜி மீது மாறாத பக்தி கொண்டவர்; நம்பிக்கை பூண்டவர்.

சுவாமிஜியால் தான் ஓர் ஆபத்தில் இருந்து காப்பாற்றப் பட்ட சம்பவத்தை அவரே கூறுகிறார்...

''1920-ஆம் ஆண்டு, கட்டடக் கலை தொடர்பாகச் சிலருடன் விவாதித்தபடி, மொட்டை மாடி விளிம்புக்குச் சென்று விட்டதை நான் உணரவில்லை. அப்போது 'கவனம்..! பார்த்து..!’ (Be careful!) என்று ஒரு குரல் கேட்டது. அப்போதுதான், நான் மிகவும் ஆபத்தான இடத் தில் இருப்பதை உணர்ந்து, மெதுவாகச் சுதாரித்துக் கொண்டு, மீண்டேன். அந்தக் கணம் கேட்ட அந்தக் குரல்... ஆ! சந்தேகமே இல்லாமல், அது சுவாமிஜியின் குரலல்லவா!''

சுவாமிஜியின் கருணையே கருணை!

இதன் காரணமாகவே பின்னாளில், ட்ரினெட் பெர்டியர் என்ற அன்பரிடம், ''உனக்கு எப்போதெல்லாம் ஆபத்து என்று உணருகிறாயோ, அப்போதெல்லாம் 'சுவாமி விவேகானந்தா! உதவி செய்!’ என்று குரல் கொடு. அவர் உன்னைக் காப்பாற்றுவார்!'' என்று சொன்னாராம் எம்மா கால்வே.