Published:Updated:

சரும நோய் தீர்க்கும் சந்தனக் காப்பு வழிபாடு!

Vikatan Correspondent

வள்ளியூர் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி

##~##

 ஸ்தல வரலாறு: பாண்டிய நாட்டின் இந்தப் பகுதி முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் கீழ் இருந்த காலத்தில், இந்தப் பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னன் உக்கிரபாண்டியனின் பேரன், அள்ளியுண்ட ராஜா வேட்டைக்கு வந்தான். அப்போது அங்கே இருந்த மலைக் குகையில் சற்று ஓய்வெடுக்கலாம் என வந்தவன், அங்கிருந்த முருகப்பெருமானின் அழகிய விக்கிரகத் திருமேனியைக் கண்டு அதிசயித்துப் போனான். அத்துடன், கோயில் திருப்பணியில் ஈடுபட்டதுடன், முன்மண்டபமும் கட்டினான் என்கிறது ஸ்தல வரலாறு.

வள்ளியூர் எனப் பெயர் வந்தது எப்படி?: ஸ்ரீவள்ளியை அழைத்துக்கொண்டு இந்த வழியே வந்தபோது, அவளின் விருப்பப்படி இந்தக் குகையில் தங்கினாராம் கந்தவேள். 'பின்னாளில் இந்தப் பகுதி உன்னை நினைவுபடுத்தும் வகையில் உன் பெயரிலேயே அழைக்கப்படும்’ என அருளினாராம்.  ஆரம்பத்தில், ஸ்ரீவள்ளியுடன் மட்டுமே தரிசனம் தந்த ஸ்ரீமுருகப்பெருமான், பிறகு அகத்தியரின் வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீதெய்வானைக்கும் இடம் அளித்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஸ்வாமி: ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி

தலம்: வள்ளியூர்

சரும நோய் தீர்க்கும் சந்தனக் காப்பு வழிபாடு!

எங்கே உள்ளது?: திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில்!

தலத்தின் சிறப்பு: நெல்லை மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குகைக்கோயில் இதுவே!

தீர்த்தம்: சரவணப் பொய்கை

விழா: பத்து நாள் விழாவாக நடைபெறும் சஷ்டி விழாவின் நிறைவு நாளில், இரவு 11 மணிக்கு சூரனை வதம் செய்யும் திருக்காட்சி நடைபெறும்.

சிறப்பு பூஜை: மாதந்தோறும் சஷ்டி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் வந்து, ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்வித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், சரும நோய்கள் நீங்கி, நலமுடன் வாழலாம் என்பது ஐதீகம்!

- கட்டுரை, படங்கள்: தி.ஹரிஹரன்