Published:Updated:

சரண கோஷம் போடுவோம்!

ஐயப்ப மலர்கள்! வி.அரவிந்த் ஸுப்ரமண்யம்

சரண கோஷம் போடுவோம்!

ஐயப்ப மலர்கள்! வி.அரவிந்த் ஸுப்ரமண்யம்

Published:Updated:
##~##

தென்னாட்டில் உள்ள நாகபுரம் எனும் ஊரில், விஸ்வநாதன் எனும் வணிகன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி, ஊனமான ஒரு பெண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்த கையோடு இறந்துபோனாள். மனைவியை இழந்த வணிகன் தாங்கமுடியாத வேதனையில் துவண்டுபோனான்.

பிறகு, உற்றார் உறவினர்களின் வற்புறுத்தலாலும் அறிவுரையாலும் இன்னொரு திருமணம் செய்துகொண்டான். சில காலங்களுக்குப் பிறகு தொழிலில் நஷ்டம், மன உளைச்சல் எனத் தவித்து மருகியவன், ஒருநாள் இறந்தும் போனான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஸ்வநாதனின் இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்குப் பிறந்த ஊனமுற்ற மகளைப் பெரிதும் கொடுமைப்படுத்தினாள். வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த செவ்வந்தி மலர்களைப் பறித்து, வீதிவீதியாகச் சென்று விற்று வருவதற்கு, அவளை அனுப்பினாள்.

திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பார்கள். முகமே பார்த்திடாத அம்மாவையும், அன்பும் கனிவுமாக வளர்த்த அப்பாவையும், இறைவனையும் மனத்துள் வேண்டியபடி, தெருக்களில் திரிந்தும் கோயில் வாசலில் அமர்ந்தும் பூ விற்று வந்தாள், அந்தச் சிறுமி.

ஒருநாள்... கோயில் வாசலில் அமர்ந்து பூ விற்றுக்கொண்டு இருந்தாள். அன்றைய தினம்... உத்திர நட்சத்திர நன்னாள். அதுவொரு சாஸ்தா ஆலயம். அகத்தியர் தலைமையில் அங்கே வேதியர்கள் சூழ, யக்ஞ ஆராதனைகள் சிறப்புற நடைபெற்றுக்கொண்டு இருந்தன.

சரண கோஷம் போடுவோம்!

அப்போது, திடீரெனப் பெருங்காற்று வீசியது. மழையும் வெளுத்து வாங்கியது. என்ன செய்வது எனத் தெரியாமல் அந்தப் பெண் பதறிய வேளையில், அவளின் கூடையில் இருந்த பூ பறந்து சென்று, சாஸ்தாவின் மேல் விழுந்தது. இது எதையும் அறியாத அந்தப் பெண், சோகத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். சித்தியிடம் திட்டு வாங்கவேண்டுமே என்று நினைத்தபடியே நடந்துகொண்டிருந்தவள் மீது மிகப் பெரிய மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது. இதில் பரிதாபமாக இறந்துபோனாள் அவள்.

விஷயம் தெரிந்து, அங்கே இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அந்த வேளையில், வானில் இருந்து வந்த தேவ விமானம் ஒன்று, இறந்து கிடந்த பெண்ணை வான் வழியே அழைத்துச் சென்றது. அதைக் கண்டு அனைவரும் அதிர்ந்துபோனார்கள். கோயிலுக்குள் சென்று அகத்தியரை வணங்கி விவரம் சொன்னார்கள். விளக்கம் கேட்டார்கள்.

சரண கோஷம் போடுவோம்!

''அறிந்தோ அறியாமலோ அந்தப் பெண் ணின் கூடையில் இருந்த செவ்வந்தி மலர்கள், கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டிருக்கிற சாஸ்தாவின் மேல் விழுந்தது. எனவே, இறந்து போனவள் இதன் பலனாக சாஸ்தாவின் லோகத்தை அடைந்தாள். எவரொருவர் கடும் விரதமிருந்து செவ்வந்தி மலர்களால் ஐயன் சாஸ்தாவை அர்ச்சித்து வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு மோட்சம் நிச்சயம்!'' என அருளினார் அகத்தியர்.

சரண கோஷம் போடுவோம்!

சரி... மகா சாஸ்தா விரதங்கள் என்னென்ன... பார்ப்போமா?

சாஸ்தாவை உபாஸிக்கும் அடியவர்கள் புத வார விரதம், சனி வார விரதம் மற்றும் உத்திர நட்சத்திர விரதம் என மூன்று விதமான விரதங்களை மேற்கொண்டு  சாஸ்தாவைப் பிரார்த்தித்து வழிபடலாம். அதாவது, புத வார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.

முதல் நாள் பகல் உணவு முடித்த பின்பு விரதம் தொடங்கி, இரவில் சாப்பிடாதிருக்க வேண்டும். விரத நாளில், அதிகாலையில் எழுந்து நீராடி, நித்ய கடமைகளை முடித்து, நியமங்களை மீறாமல் ஸ்ரீமகா சாஸ்தாவை மனமுருகி வழிபடவேண்டும். தண்ணீர் மட்டுமே பருகி, விரதம் இருப்பது உத்தமம்!

அதேபோல் பாராயணம், ஜபம், தியானம் ஆகியவற்றை மேற்கொண்டு, ஐயப்ப ஆலயங்களில் தரிசனம் செய்தும் வழிபடலாம். இரவு முழுவதும் தூங்காமல் ஐயனைப் போற்றி யும் பாடியும் இருந்து, விடிந்ததும் நீராடி, சாஸ்தாவுக்குப் பூஜை செய்து, அடியவருடன் இணைந்து சாப்பிட்டால், சகல யோகங்களும் ¬கூடும் என்பது ஐதீகம்!  

உத்திர நட்சத்திர விரதம் மேற்கொள்பவர்கள், சித்திரை மாத உத்திர நட்சத்திர நாளில் தொடங்கி, சாஸ்தாவின் ஜன்ம தினமான பங்குனி உத்திரத்தன்று பூர்த்தி செய்வது சிறப்பு. கூடுதல் பலன்களைத் தந்தருள்வார் ஐயன் ஐயப்ப ஸ்வாமி! இயலாதவர்கள், பங்குனி உத்திர நாளில் விரதம் மேற்கொள்ளலாம்.

பங்குனி உத்திர விரதம் மேற்கொள்பவர்கள், இரண்டு நாட்கள் முன்னதாக, அதாவது பங்குனி மாதம் மக நட்சத்திர திருநாளில் விரதத்தைத் துவக்குவது சிறந்தது.

இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் பக்தர்கள், தினமும் ஐயப்ப ஸ்வாமியை பூஜித்து வரவேண்டும். பகலில் தூங்காமல் இருப்பது உத்தமம்.

மேலும், விரதம்  மேற்கொள்ப வர்கள் ஆசார நியமத்துடன் தங்கள் இல்லத்திலிருந்து பால்குடம், நெய்குடம், தயிர்க்குடம், இளநீர் ஆகியவற்றை அருகில் உள்ள சாஸ்தாவின் ஆலயத்துக்கு வழிநடையாக எடுத்துச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்வது ரொம்பவே விசேஷம்! இதனால் அவர்கள் வீட்டில் சகல சுபிட்சங்களும் நிறையும். துன்பம் யாவும் மறைந்து இன்பமும் நிம்மதியுமாக வாழலாம்.

பங்குனி உத்திர திருநாளில், சாஸ்தாவின் சரிதங்களைக் கேட்பதும், பாராயணம், ஜபம் செய்து வேண்டுவதும், சரண கோஷமிடுவதும் மிக நல்ல பலன்களை தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism