இறைவன்பால் ஆர்வம் வேண்டும். இதுவே முதல் தேவை.
ஆர்வத்தை வளர்த்து, அதை எப்போதும் விழிப்புடனும் ஜீவனும் சக்தியும் கொண்டதாகவும் வைத்திருக்க வேண்டும். இது இரண்டாவது நிலை.
இதனைச் செய்ய மனத்தை முனைப்படுத்த வேண்டும்.இறைவனது சித்தத்துக்கும் நோக்கத்துக்கும் பூரணமாக அர்ப்பணம் செய்யும் வகையில், மனம் இறை உணர்வுடன் ஒன்ற வேண்டும். இப்படிப்பட்ட மன உணர்வுடன் இறைவனை ஐக்கியம் அடைதலே யோகம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பணியில் முழு ஈடுபாடும், தன்னலமற்ற உழைப்பும் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். உங்களை எல்லாம் ஒரே குடும்பமாகக் கருதுகிறேன். உங்கள் ஒவ்வொருவருடைய திறமைக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அவை வளர்ச்சியடைய வேண்டும்; சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
- ஸ்ரீஅரவிந்த அன்னை
'ஸ்ரீஅன்னை ஒரு மகாசக்தி’ என்ற புத்தகத்திலிருந்து...