கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது பெரியநாயக்கன் பாளையம். இங்கிருந்து கோவனூர் செல்லும் சாலையில் பயணித்தால், சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாலமலை. அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்ல தினசரி மூன்று முறை பேருந்து வசதி உண்டு. இங்கு, அகிலத்தையே காத்தருளும் ஸ்ரீஅரங்கநாதர் கோயில் கொண்டிருக்கிறார்.

ஸ்தல புராணம்: கிருத யுகத்தில், காலவ மகரிஷிக்கும் துர்தமன் எனும் கந்தர்வனுக்கும் திருமால் நேரில் காட்சி தந்து, பாப விமோசனம் அளித்து அருளிய திருத்தலம் இது. திரேதா யுகத்தில், ரம்பைக்கும் கிருதாசி எனும் தேவ கன்னிகைக்கும் பாப விமோசனம் அளித்து அருள்பாலித்துள்ளார் திருமால்.

இங்கே உள்ள பத்ம தீர்த்தத்தில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். எனவே, இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடினாலோ, தண்ணீரை எடுத்துத் தலையில் தெளித் துக்கொண்டாலோ நம் பாவமெல்லாம் பறந்தோடி விடும் என்கின்றனர் பக்தர்கள்.

துவாபர யுகத்தில், நந்தபூபாலர் எனும் மன்னர் இங்கு வந்து தீர்த்தக் குளத்தில் நீராடி, அரங்கனின் பேரருளால் சிறப்புடன் அரசாட்சி நடத்தினார்; அவரின் தேசமும் செழிப்புற்றது என்கிறது ஸ்தல புராணம்.

மலையழகு: கொள்ளை அழகுடன் திகழ்கிறது பாலமலை. மலையின் மேல் பகுதியை திருமாலின் சிரசாகவும், கீழே உள்ள காரமடையை அவரின் திருவடியாகவும் கொண்டு வணங்குகிறார்கள் பக்தர்கள். அடிவாரத்தில் உள்ள பாலமலை தலம், பெருமாளின் வயிற்றுப் பகுதியாகக் கருதப்படுவதால், இங்கு உணவுக்குப் பஞ்சமிருக்காது என்பது ஐதீகம். அதற்கேற்ப கோயிலில் தினமும் அன்னதானம் குறைவற நடைபெறுகிறது.

மூலவர்-உத்ஸவர்: மூலவர் ஸ்ரீஅரங்க நாதர் சுயம்புமூர்த்தம். பசு ஒன்று தானாகவே பால் சுரந்து, அதனால் விக்கிரகம் வெளிப்பட்டுப் பின்னர் ஆலயம் கட்டப்பட்டதாகச் சொல்வர். அதேபோல், இந்த ஊரில் உள்ள ஒருவரின் கனவில் தோன்றிய அரங்கநாதர், 'இந்த ஊரின் உத்ஸவர், திருப்பதியில் வணிகர் ஒருவரிடம் இருக்கிறார்’ என்று அருளினாராம். அதன்படி ஊர்மக்கள் சிலர் திருப்பதிக்குச் சென்று வணிகரைச் சந்திக்க... 'என் கனவிலும் வந்தார் பெருமாள். இதோ, எடுத்துக் கொள்ளுங்கள்!’ என்று விக்கிரகத்தை வழங்கினாராம் வணிகர்.

ஸ்ரீஆண்டாள் வீதியுலா: சித்ரா பௌர்ணமி விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், மார்கழியில் ஒவ்வொரு நாளும் தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம்தான்! மார்கழியில் ஸ்ரீஆண்டாள் திருவீதியுலா வரும் தலங்களில் இதுவும் ஒன்று. அப்போது திருப்பாவை பாடி, அரங்கனை ஆட்கொள்ளும் காட்சியைத் தரிசிப்போருக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். அதேபோல், திருப்பள்ளியெழுச்சி வேளையில் ஸ்ரீஅரங்கனை கண்ணாரத் தரிசித்தால், நம் கவலைகள் யாவும் பறந்தோடும்; நினைத்த காரியம் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீதும்பிக்கையாழ்வார், ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீராமானுஜர், ஸ்ரீயோக நரசிம்மர் ஆகியோரும் இங்கு சந்நிதி கொண்டிருக்கின்றனர்.

பிரார்த்தனை: தொழில் நசிவு, தீராத நோய், தோஷங்கள், பூர்வ ஜென்ம பாபங்கள் என பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து ஸ்ரீஅரங்கனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால் போதும்... நம்மை வளமுடன் வாழச் செய்வான் ஸ்ரீஅரங்கநாதப் பெருமாள்.

- ஞா.சுதாகர் படங்கள்: ர.சதானந்த்