Published:Updated:

நமது சுவாமிஜி

எழுமின்... விழிமின்!ஓவியர் பத்மவாசன்

##~##

சுவாமி விவேகானந்தரின் முகத்தைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தாலே, நமக்குள் தெளிவும் மன உறுதியும் வந்துவிடும். அவரின் கண்களைக் கூர்ந்து கவனித்தாலே, நம் கவலைகள் யாவும் பறந்து, எதிர் நபர் மீது கருணையும் வாஞ்சையும் நமக்குள் குடிகொள்ளும். அப்படியரு தீட்சண்யமான பார்வையும் முகமும் கொண்டவர் சுவாமி விவேகானந்தர்!

இந்த நூற்றாண்டின் இளைஞர்கள் அனைவரும் சுவாமி விவேகானந்தரை அறிந்து உணர்ந்துகொள்வது மிகவும் அவசியம். அவருடைய கருத்துக்களைப் படித்துப் புரிந்துகொண்டால், நாளைய தலைமுறை வெகு நிச்சயமாக சத்தான, அன்பான, திடமான, நல்லதொரு சமுதாயமாக மலரும் என்பதில் துளியளவு சந்தேகமும் இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ல்லூரிக் காலங்களில், சுவாமிஜி தீவிரமான தியானப் பயிற்சியில் ஈடுபடுவார். இரவு வேளைகளில் தூக்கமின்றி, தியானத்தில் ஆழ்ந்திருப்பார். இதுவும் ஓய்வின்மையும் சேர்ந்து, ஒருமுறை கடுமையான தலைவலியால் அவதிப்பட்டுத் துடித்தார் சுவாமிஜி.

நமது சுவாமிஜி

இதன் காரணமாக, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை அவர் வந்து பார்க்க முடியவில்லை. அதை உணராமலா இருப்பார் குருநாதர்? நரேந்திரனைப் பார்ப்பதற்கு குருதேவரே வந்தார். அருகில், பக்தர் ஒருவரின் இல்லத்தில் இருந்துகொண்டு, 'நரேனை அழைத்து வாருங்கள்’ என்றார்.

அழைக்கச் சென்றவர்கள் அவசரம் அவசரமாகத் திரும்பி வந்தார்கள். நரேன் தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என்றும், படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றும், அவரால் எழுந்து இங்கு வந்து பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

உடனே ராமகிருஷ்ண பரமஹம்சர், ''நான் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள். இங்கு வரும்படி நான் அழைத்ததாகச் சொல்லுங்கள். உடனே ஓடி வருவான், பாருங்கள்!'' என்றார்.  

அப்படியே சொன்னார்கள். அதைக் கேட்டு, சுருண்டு படுத்திருந்த சுவாமி விவேகானந்தர் பதறியடித்துக்கொண்டு எழுந்தார். ஓட்டமும் நடையுமாகச் சென்று, பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை, தன் குருநாதரைச் சந்தித்தார். மலர்ந்த முகத்துடன் அவரை நமஸ்கரித்தார்.

நமது சுவாமிஜி

அவரை அப்படியே கருணையுடன் தாங்கிய குருநாதர், தாயின் பரிவுடன், அன்பான பார்வையும் வாஞ்சையான புன்னகையுமாய், ''குழந்தாய், உனக்கு என்னப்பா ஆச்சு?'' என்று கேட்டுக்கொண்டே பதிலுக்குக் காத்திருக்காமல், விவேகானந்தரின் தலையை வருடிக் கொடுத்தார்.

''குருநாதரின் திருக்கரம் என் தலையில் பட்ட அந்த நிமிடமே, என் தலைவலி மொத்தமும் மாயமாய் மறைந்து போனது!'' என்று அந்த இனிய சம்பவத்தை நினைவுகூர்ந்து சொல்லி யிருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

செல்வி அல்போட்டா ஸ்டர்ஜெஸ் எனும் பெண்ணுக்கு அவரின் 23-வது பிறந்தநாளின் போது, அவரை வாழ்த்தி ஒரு மடல் எழுதுகிறார் நம் சுவாமிஜி. இதோ... அந்தக் கடிதம்.

''அன்னையின் இதயம், வீரனின் துணிவு, மென்மையான மலரின் இனிமையான உணர்வு, எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் வசீகரமும் வலிமையும், பூஜா பீடத்தில் தோன்றும் ஒளிப்பிழம் பின் விளையாட்டு, தலைமைத்துவ பலமும் அன்பான கீழ்ப்படிதலும், தொலைவை எட்டும் கனவுகளும், அமைதியான வழிகளும்,

தன்னிடமும் எல்லோரிடமும் உள்ள அழிக்கமுடியாத நம்பிக்கையும், பெரியதாய் மதிக்கத்தக்கதிலும், சிறியதாய் இருப்பதிலும் காணப்படும் தெய்வீகத்தன்மையும்... இவை எல்லாமும் நான் இன்று காணக் கூடியதற்குமேலும் அந்த அன்னை உனக்கு வழங்கட்டும்!

அன்பும் ஆசிகளும்!

என்றும் உனது,

விவேகானந்தா.''