கோயிலின் அமைவிடம்: எந்த நேரமும் தன்னிடம் வருவோர்க்கு இல்லையென்று சொல்லாமல், உள்ளங்கையில் திருமகளை வைத்துக்கொண்டு, வாரி வழங்கும் பேரருளாளனாக பெருந்தேவியுடன் அருள்பாலிக்கிறார் ஸ்ரீகரி வரதராஜப் பெருமாள். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள இவரின் ஆலயம் அழகு. இவரோ, பேரழகு!

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்தில் ஏறி, பெரியநாயக்கன் பாளையத்தில் இறங்கி சிறிது தூரம் நடந்தால், கோயிலை அடையலாம்.

ஸ்தல வரலாறு: சுமார் 300 வருடங்களுக்கு முன்பு சுயம்பு மூர்த்தமாக வெளிப்பட்டாராம் பெருமாள். திருமேனியில் வைரக் கோடு தெரிய, அதனை ஆசாரி ஒருவர் வெட்டியெடுக்க முயல, அவரின் கண்கள் பறிபோயினவாம். பிறகு, ஊர்மக்களுக்குப் பெருமாளின் சக்தி தெரிய வர, பிரமித்துப் போனார்கள்; அடுத்து, அங்கே சுயம்பு மூர்த்தத்தைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வழிபடத் துவங்கினார்கள் என்கிறது ஸ்தல வரலாறு.

சிறப்புகள்: புதனுக்கு அதிபதியாகத் திகழும் திருமால் தனது திருமார்பில் மரகதப் பச்சை அணிந்தபடி காட்சி தருவது, இங்கே சிறப்பு! ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தைப் போலவே, பெருமாளுக்கு வலது பக்கத்தில் இங்கே ஸ்ரீஆண்டாளுக்குச் சந்நிதி அமைந்துள்ளது. புதன்கிழமைகளில், மாதாந்திர அஸ்த நட்சத்திர நாளில் இங்கு வந்து பெருமாளை சேவிப்பது மிகுந்த பலனைத் தரும்; வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் தங்கும் என்பது ஐதீகம்!

மார்கழி விசேஷம்: மதி நிறைந்த மார்கழியின் முப்பது நாட்களும் இங்கு விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. தினமும் ஸ்ரீஆண்டாள் திருவீதியுலா வருவதும், அப்போது பக்தர்கள் திருப்பாவை பாடி ஆராதிப்பதும் காணக் கண் கோடி வேண்டும். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு, ஸ்ரீகரிவரதராஜரை மனதாரப் பிரார்த்தித்தால், விரைவில் நல்ல வாழ்க்கைத் துணை அமைந்து, வாழ்க்கை செழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

பிற விழாக்கள்: மேலும் பன்னிரு ஆழ்வார்களின் திருநட்சத்திர நாளில், இங்கு சிறப்பு பூஜைகளும் திருவீதி புறப்பாடும் நடைபெறுகின்றன. அதேபோல் பௌர்ணமியிலும் விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி கொலு, புரட்டாசி சனிக்கிழமைகள், உறியடி உத்ஸவம் ஆகியவையும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி மாதம் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

கல்வி வரம் அருளும் ஸ்ரீஹயக்ரீவர்: ஸ்ரீகரிவரதராஜர் மூலவராகக் குடிகொண்டிருக்கும் இந்த ஆலயத்தில், ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதியும் உள்ளது. மிகுந்த வரப்பிரசாதியான இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், கல்வி வளம் பெறலாம்; அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறலாம் என்கின்றனர் மாணவர் கள். ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவியுடன் ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள், ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீஅனுமனுடன் ஸ்ரீசீதா சமேதராக ஸ்ரீராமபிரான், ஸ்ரீதன்வந்திரி பகவான், பன்னிரு ஆழ்வார்கள், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீவிஷ்வக்சேனர் ஆகியோரும் இங்கு தரிசனம் தருகின்றனர்.

- ஞா.சுதாகர்

படங்கள்: ர.சதானந்த்