டிசம்பர் 24 முதல் 2014 ஜனவரி 6 வரைசெல்வாக்கு கூடும்...ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

சூரியன் - 28-ம் தேதி வரை மூலம் நட்சத்திரத்திலும், 29-ம் தேதி முதல் பூராடம் நட்சத்திரத்திலும்...
செவ்வாய் - அஸ்தம் நட்சத்திரத்திலும்...
புதன் - 30-ம் தேதி வரை பூராடம் நட்சத்திரத்திலும், 31-ம் தேதி முதல் உத்திராடம் நட்சத்திரத்திலும்...
குருபகவான் - புனர்பூசம் நட்சத்திரத்திலும்...
சுக்ரன் - உத்திராடம் நட்சத்திரத்திலும்...
சனி - விசாகம் நட்சத்திரத்திலும்...
ராகு - சுவாதி நட்சத்திரத்திலும்...
கேது - அசுவினி நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர்.
கிருத்திகை, பூசம், பூரம், உத்திரம் 1-ம் பாதம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்.




