இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும். ஆனால், இந்திரியங்களால் சுவைக்கப்படும் அல்லது நுகரப்படும் அனுபவங்கள் மனத்தை பாதிக்கும்போது, மனம் வைராக்கியத்தை உடைத்துக் கொண்டு அந்த அனுபவங்களிலேயே உழல விரும்பும். அப்போது அறிவால் மட்டுமே அதைக் கட்டுப்படுத்த முடியும்.

''இந்திரியங்களைக் கட்டுப்படுத்திவிட்டு, அவை செய்யும் காரியங்களை மனத்தால் செய்து கொண்டிருப்பது மூடத்தனம்'' என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பகவத் கீதையில் கூறுகிறார்.

எனவே, கட்டுப்படுத்த வேண்டியது மனத்தைதான். அதுதான் எப்படி?

நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போது அவற்றின் மீது நமக்கு விருப்போ வெறுப்போ, அறிவின் ஆற்றலால் மட்டுமல்ல, மனோபாவத் தினாலும்கூட ஏற்படுகிறது.

ஒரு கடையில் சென்று ஒரு பெண் தனக்கு ஒரு புடவை எடுக்க விரும்புகிறாள். அப்போது அவள், எத்தனைப் புடவைகளைப் பார்க்கிறாள்? எத்தனை விதமான விருப்பு வெறுப்புகள் அங்கே பிரதிபலிக்கின்றன? ஒருத்தி வேண்டாமென்று தள்ளியதை வேறொரு பெண், 'மிக நன்றாக இருக்கிறது’ என்று எடுத்துப் போகிறாள். இங்கே செயல்கள் அறிவின் ஆற்றலால் நிகழவில்லை; தனிப்பட்ட ரசனையின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன.

இந்திரியங்கள் செயல்படாமல் இன்பத்தையோ துன்பத்தையோ மனத்தினால் மட்டுமேகூட அனுபவிக்க முடியும். மனம் விவேகத்துக்கோ, அறிவுக்கோ எளிதில் கட்டுப்படுவதில்லை. மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் பெரும்பாலான துன்பத்துக்கு மனமே காரணமாகிறது. மனம் மனிதனின் இதயத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஆதலால்தான் அன்பு, பாசம், நேசம், கோபம், தூக்கம் ஆகியவை இதயத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. இதயம் ரத்த ஓட்டத்தோடு தொடர்பு கொண்டது. அதனால், அது மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது.

அதுமட்டுமா? மனத்தின் கோளாறினால் ஜீரண உறுப்புகள், கழிவு உறுப்புகள் போன்ற வையும்கூட எளிதில் பாதிக்கப்படுகின்றன.

மனநிலை அல்லது மனோபாவம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபட்டது. அது அவரவர் பிறந்த சூழ்நிலை, வளர்ந்த விதம், தெரிந்துகொண்ட விஷயங்கள், பெற்ற அனுபவம் இவற்றைப் பொறுத்து மாறுபடு கிறது. மூளையில் ஏற்படும் கோளாறு களால் பாதிக்கப்படுவது மனநிலைதான். அதனால்தான் அப்படிப்பட்டவர்களை மன நோயாளிகள் என்று குறிப்பிடுகிறோம்.

உடல் முக்கியம்; அதைவிட முக்கியம் அறிவும், மனமும். இவை எல்லாவற்றையும் இயங்கச் செய்துவிட்டு, அந்த இயக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ளாமல் பற்றற்றுச் செயல்படும் அற்புதமான சக்திதான் ஆத்மா அல்லது ஆன்மா.

ஆன்மா என்பது ஒரு சக்தி பீடம். உடல், மனம், அறிவு ஆகியவை இயங்க உதவும் ஆதார சக்தி. அதுவே மனித உடலின் சத்து. அது போய்விட்டால் சத்து போய்விட்டது என்பார்கள். அதுவே 'செத்துப் போதல்’ என்ற சொல்லாகிவிட்டது.

உடலின் இயங்கு சக்திகளையும் இயக்கு சக்திகளையும் இயக்கிக்கொண்டிருப்பதுதான் ஆன்மாவின் வேலை. அதனால் உண்டாகும் ஆசாபாசங்களுக்கும், இன்ப துன்பங்களுக்கும், வெற்றி தோல்விகளுக்கும் ஆன்மா பொறுப்பேற்பதில்லை.

உதாரணத்துக்கு விஞ்ஞான உண்மை ஒன்றைக் குறிப்பிடலாம். மின்சாரம் எனும் சக்தி, இரண்டு கம்பிகளின் வழியே ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செலுத்தப்படுகிறது. மறுமுனையில் பொருத்தப்படும் உபகரணங்களின் அமைப்பைப் பொறுத்தே மின் சக்தியின் பலன் வெளிப்படுகிறது.

உதாரணமாக, மின் இணைப்பில் ஒரு குளிர் சாதனப்பெட்டியை இணைத்தால், குளிர்ச்சி கிடைக்கிறது. ஒரு இஸ்திரிப் பெட்டியை இணைத்தால், வெப்பம் கிடைக்கிறது. ஒரு மின்சார பல்பை இணைத்தால், ஒளி கிடைக்கிறது. ஒரு டேப் ரிக்கார்டரை இணைத்தால், ஒலி கிடைக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டியை இணைத்தால், ஒலியும் ஒளியும் கிடைக்கின்றன. இணைக்கப்படும் உபகரணத்தின் தன்மையை வைத்தே, மின்சக்தியின் வெளிப்பாடும் காணப்படுகிறது.

அதுபோலவே, ஐம்புலன்களால் ஆக்கப்பட்ட மனித உடலில், உயிர்ச்சக்தியாகிய ஆன்மா எனும் அற்புத சக்தி செலுத்தப்படும்போது, தனி மனிதர்களின் இந்திரியங்கள் எனும் உபகரணங்களைப் பொறுத்தே, செயல்கள் வெளிப்படுகின்றன. இவை மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றன. காலத்தைப் பொறுத்து, சந்தர்ப்பத்தைப் பொறுத்து, மனோ பாவத்தைப் பொறுத்தும் மாறுபடுகின்றன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் உபகரணங்கள் வேலை செய்யாது. அதுபோலவே, ஆன்மா பிரிந்ததும், உயிர் நீங்கிய உடல் பலனற்றுச் சத்துப் போய், செத்துவிடுகிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் விஞ்ஞானபூர்வமாக பல விளக்கங்கள் உண்டு. ஆன்மிகம் எனும் மெய்ஞ்ஞானம், பிறப்பையும் இறப்பையும் வித்தியாசமான பரிமாணத்தில் விளக்குகிறது.

மனித உடல் பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் குறிப்பிட்ட சேர்க்கையால், குறிப்பிட்ட விகிதத்தில் உருவாகும் கூட்டுப்பொருள்தான், மனித உடல். ஆன்மா எனும் உயிர்ச் சக்தி அதில் சென்று தங்கும்போது, மனித உடலில் பிரமாண்டமான மானிட சக்திகள் உருவாகி, செயல்பட ஆரம்பிக்கின்றன. இதுவே ஜனனம், அல்லது பிறப்பு.

உயிர் அல்லது ஆன்மா ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மனித உடலை விட்டுப் பிரிந்து சென்றபின், மானிட சக்தி நீங்கிய அந்த மனித உடல், எரிப்பதாலும் புதைப்பதாலும் மீண்டும் சிதைந்து, அதிலுள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை பரந்த வெளியிலுள்ள பஞ்ச பூதங்களோடு கலந்துவிடுகின்றன. மனித உடலிலுள்ள எலும்பும் தசையும் நிலத்தோடும், ரத்தம், நிண நீர் போன்றவை நீரோடும், உடலின் வெப்பம் அக்னியோடும், மூச்சுக்காற்று விண்வெளிக் காற்றோடும், உடலின் வெற்றிடம் ஆகாயத்திலும் கலந்துவிடுகின்றன. ஆக, பஞ்சபூதங்களின் கூட்டுப் பொருளாக இருந்த மனித உடல் சிதைந்து, மீண்டும் பஞ்ச பூதங்களில் கலக்கிறது. இந்த விளக்கத்தை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பஞ்ச பூதங்களின் கூட்டுப் பொருள்களால் உடல் உருவாவதும், மீண்டும் சிதைந்து இயற்கையில் கலப்பதும், உடலுக்கு மட்டுமே உரிய செயலாகும். உடல் மறைந்ததும் மனம், அறிவு ஆகியவையும் மறைந்துவிடுகின்றன. ஆனால், ஆன்மா ஒருபோதும் மறைவதில்லை.

அழிவே இல்லாத ஆன்மா நம் பிறப்போடு தோன்றுகிறது. ஆனால், இறப் போடு மறைவதில்லை. அது இன்னொரு சரீரத்தைச் சார்ந்து, புதிய பிறப்பெடுக்கிறது; அல்லது, இறைவனை அடைந்துவிடுகிறது. இதனால்தான், ஆன்மா அனைத்திலும் உயர்ந்தது; அது பந்தமில்லாதது; பேத மில்லாதது; பாதிப்பு இல்லாதது; அழிவு இல்லாதது. 'உடல் அழியும், ஆத்மா அழியாது’ என்று கீதையில் கூறியுள்ளார் பகவான்.

ஆத்மாதான் பிரம்மம்;
இந்த பிரம்மம் அமிர்தமானது;
நித்யமானது; அழிவில்லாதது.
ஆத்மா என்பது சத்யம்;
எல்லாக் காலத்திலும் இருப்பது;
அது உண்மையின் ஒரு வடிவம்.
ஆத்மாவை அறிந்தவன், பயமில்லாமல்
வாழ்கிறான்.

(பிரஜாபதிவித்யா நூலிலிருந்து)

- விருட்சம் வளரும்...

யானையும் வண்டும்

ஒரு காட்டில் யானை ஒன்று, மரத்தின் இலைகளைப் பறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வண்டு அதன் காதுப்புறமாகப் பறந்து ரீங்காரம் செய்தது. யானை அதை லட்சியம் செய்யாமல் தன் காதுகளை அசைத்தவாறு, இலைகளைச் சாப்பிடுவதில் கவனமாக இருந்தது.

ஆனால், வண்டு மீண்டும் மீண்டும் சத்தமிட்டபடியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பொறுமை இழந்த யானை ஒரு கட்டத்தில் வண்டைப் பார்த்து, ''நீ ஏன் இப்படி அமைதியில்லாமல் சத்தமிட்டபடி பறந்துகொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டது.

அதற்கு வண்டு, ''நான் இங்கே பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புகிறேன். பல வண்ணப் பூக்களை நுகர்கிறேன். அவற்றில் தேன் குடித்து மகிழ்கிறேன். எனவே, உற்சாக மிகுதியில் ரீங்காரம் செய்கிறேன். அது சரி, நீ எப்படி இவ்வளவு இரைச்சலுக்கிடையேயும் அமைதியாக இருக்கிறாய்?'' என்று கேட்டது.

''என்னுடைய புலன்கள் என்னை ஆட்டிப் படைக்க நான் அனுமதிப்பது இல்லை. நான் செய்கின்ற வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறேன். இப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த வேலையில் மட்டும் நான் கவனம் செலுத்துகிறேன். ஆதலால், அமைதியாக இருக்கிறேன்'' என்றது.

புலன்களை அடக்கிச் செயல் புரிந்தவன், அமைதியும் நிம்மதியும் நிச்சயம் பெறுவான்.