குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். மலையும் மலைசார்ந்த இடமும் என்றால், மயிலோனுக்கு அவ்வளவு பிரியம்! கோவை- பொள்ளாச்சி பாதையில் அமைந்துள்ள ஊர் கிணத்துக்கடவு. இங்கிருந்து மேற்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் முத்துக்கவுண்டனூர் எனும் ஊர் உள்ளது. இங்கே 'முத்துமலை’ எனும் அழகிய சிறு குன்றின் மீது மிக அற்புதமாக அமைந்திருக்கிறது குமரனின் திருக்கோயில்.

தல வரலாறு:

முருகப்பெருமான் மயில் மீதேறி உலகை வலம் வந்த கதை நமக்குத் தெரியும். அவ்வாறு வலம் வருகையில், அவருடைய கிரீடத்தில் இருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்தது. அதை எடுப்பதற்காக கீழே இறங்கிய முருகக்கடவுள், இந்த மலையில் கால் பதித்ததால், இதற்கு முத்துமலை என்று பெயர் வந்தது.

முற்காலத்தில், இந்த ஊரைச் சேர்ந்த பெண்ணொருத்தியின் கனவில் தோன்றிய முருகன், ''இந்த மலையின் ஓரிடத்தில் மூன்று காரைச் செடிகள் வரிசையாக நிற்கும். அவற்றின் நிழலில் நான் இருக்கிறேன்'' என்று அருளினாராம். அவள் ஊராரிடம் விஷயத்தைச் சொல்ல, அனைவரும் மலைக்குச் சென்றார்கள். அங்கே, காரைச் செடிகளைக் கண்டு பரவசம் அடைந்து, அந்த இடத்திலேயே முருகப்பெருமானின் சக்திவேலை ஸ்தாபித்து வழிபடத் தொடங்கினார்கள். கோயிலும் உருவானது. சுமார் 500 வருடங்கள் பழைமையானது இந்தத் திருக்கோயில்.

குழந்தை வரம்...

குழந்தை இல்லாமல் தவிக்கும் அன்பர்கள் இங்கு வந்து முத்து மலை ஆண்டவனை வேண்டிக்கொள்ள, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டுவோர், கிருத்திகை தினத்தன்று விரதம் இருக்கவேண்டும். அன்று காலை 6 மணிக்குக் கோயிலில் நடைபெறும் பாலபிஷேக பூஜையில் கலந்துகொண்டு, பூஜை முடிந்ததும், சந்நிதியில் இருந்து தரப்படும் வேலாயுதத்தைப் பெற்றுக்கொண்டு, திருக்கோயில் வெளிப் பிராகாரத்தை மூன்றுமுறை வலம் வந்து வழிபட வேண்டும். இதுபோன்று தொடர்ந்து ஆறு கிருத்திகைகளுக்கு இங்கு வந்து வழிபட, விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இன்னும் பிற தெய்வங்கள்...

வள்ளி-தெய்வானையுடன் உற்ஸவராகவும் அருள்கிறார் முருகப் பெருமான். மேலும், வெள்ளியங்கிரி ஆண்டவர், மாணிக்க விநாயகர், நாகர் சந்நிதிகளும் இங்கு உண்டு. நாக தோஷம் உள்ளவர்களுக்கு நாகர் சந்நிதியில் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.

வள்ளி ஒளிந்த குகை!

ஒருமுறை, வள்ளி- தெய்வானையுடன் முருகப் பெருமான் உலகை வலம் வந்தபோது, வள்ளிதேவி விளையாட்டாக இங்குள்ள குகை ஒன்றில் ஒளிந்துகொண்டாளாம். சிறிது நேர தேடலுக்குப் பிறகு, முருகப் பெருமான் அவளைக் கண்டடைந்ததாகக் கதை உண்டு. மேலும், இயற்கை ததும்பும் சுற்றுச்சூழலில் அமைந்திருக்கும் தியான மண்டபம் இந்தக் கோயிலின் சிறப்பம்சம். அனைத்து மதத்தவர்களும் இங்கு வந்து தியானம் செய்து திரும்புகிறார்கள்.

விழாக்கள்:

முத்துமலை முருகன் கோயிலில் மாதந்தோறும் கார்த்திகை விழா சிறப்பாக நடைபெறுகிறது. தைப் பூசம் விழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுற்று வட்டார ஊர்களில் இருந்து மட்டுமல்ல, கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் இந்த விழாவில் வந்து கலந்துகொண்டு, முருகனின் திருவருள் பெற்றுச் செல்கிறார்கள். பங்குனி உத்திரத் தேரோட்டமும் இங்கு விசேஷம்! கந்த சஷ்டி, சித்திரை வருடப்பிறப்பு என முருகனுக்கு உண்டான அனைத்து விழாக்களும் இங்கு சிறப்புற நடைபெறுகின்றன. வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் காவடி ஆட்டமும், அனுதினமும் செய்யப்படும் அன்னதானமும் இந்தத் தலத்தின் சிறப்புகள். நீங்களும் ஒருமுறை முத்துமலை குமரனை வழிபட்டு வாருங்கள். உங்கள் துன்பங்கள் யாவும் நீங்கும். முருகன் அருளால் சகல சௌபாக்கியங்களும் செழித்தோங்கி வளரும்.

- தி.ஜெயப்பிரகாஷ், படங்கள்: மு.சரவணக்குமார்