Published:Updated:

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

தெய்வம் மனுஷ்ய ரூபேண!ஓவியம்: பாரதிராஜா

சத்சங்கத்தின் சிறப்பு...

பிரார்த்தனையும் சத்சங்கமும் இன்னல்களில் இருந்து விடுபடுவதற்குச் சிறந்த உபாயங்கள் ஆகின்றன. நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒருவன் வைத்தியனுடைய உதவியின்றி நோயைக் குணப்படுத்த முடியாது. அதுபோல் உலகத் துன்பங்களில் இருந்து ஒருவன் விடுபட வேண்டுமானால் சத்சங்கத்தை நாடவேண்டும். ஏதோ ஒருநாள் சத்சங்கத்தை நாடினால் போதாது. திரும்பத் திரும்ப நல்லார் இணக்கத்தை நாடவேண்டும். ஏனென்றால் உலகப் பற்று என்னும் நோய் உடலில் ஊறிப்போய்விட்டது. நாடியை நீயே சரியாகத் தெரிந்துகொள்ளமுடியாது.  ஒரு வைத்தியனுடைய துணைகொண்டே கபநாடி எது, பித்தநாடி எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

பராசக்தி பர்வதராஜனுடைய புதல்வியாக அவதரித்தபோது, தந்தை ஹிமவானுக்குத் தனது வெவ்வேறு சொரூபங்களைக் காட்டி அருளினாள். ஹிமவான் பிரம்மத்தையும் அறிந்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தபோது, ''அப்பா, நீங்கள் பிரம்மத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் சத்சங்கத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். பிரம்மத்தைக் காட்டித் தரும் திறன் எனக்கு இல்லை'' என்றாள் பார்வதி.      

- 'ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேச மஞ்சரி’ என்ற நூலில் இருந்து.    

பின் செல்ல