'இன்றைக்கு 'எழுச்சூருக்கு எப்படிப் போகணும்?’ என்று தினம் தினம் விசாரித்து அறிந்துகொண்டு வந்தவண்ணம் இருக்கிறார்கள் பக்தர்கள். 'காஞ்சி பீடாதிபதி ஒருவரின் திருச்சமாதி அந்தக் கோயிலில் இருக்கிறதாமே..?!’ என்று ஆச்சரியத்துடன் கேட்டு, கோயிலைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். 'குளமும் கோயிலுமா கொள்ளை அழகோட இருக்கிற இந்த ஸ்தலத்துக்கு வந்ததும் மனசே நிறைஞ்சுடுச்சு!’ என்று பூரித்துப் போய் சொல்கிறார்கள். ஆனா, ஒரு பத்து வருஷத்துக்கு முன்னே, எழுச்சூர் கிழக்கா வடக்கானுகூட யாருக்கும் தெரியாது. இங்கே இருக்கிற கோயிலோ, கோயில்ல இருக்கிற சிறப்புகளோ பரவலா வெளியே யாருக்கும் தெரியாமல் இருந்தது'' என்கிறார், கோயிலை நிர்வகித்து வரும் கிருஷ்ணகுமார்.

சென்னை, ஒரகடத்துக்கு அருகிலும், வாலாஜாபாத்துக்கு முன்னதாகவும் இருக்கிறது எழுச்சூர் கிராமம். இந்தத் தலத்தில், நந்திதேவர் கொள்ளை அழகு! ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத சண்முகர் அழகோ அழகு! முருகப்பெருமான் அம்பாளைப் பார்த்தபடி இருக்க, நடுவே சிவனார் காட்சி தர... சாந்நித்தியமான தலம் என்று சொல்லாதவர்களே இல்லை. ஆனால், கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை, இந்தக் கோயில் சிதிலம் அடைந்த நிலையில் இருந்தது என்றால், கோயிலின் இன்றைய நிலையைப் பார்ப்பவர்கள் நம்பவே மாட்டார்கள். அத்தனை அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம்.

''கோயிலைத் தூய்மைப்படுத்தும் பணியை முதலில் எடுத்துக் கொண்டோம். முள்ளும் புதருமாக இருந்ததையெல்லாம் சரி செய்து, கோயிலுக்குள் வருவதற்கு வழி உண்டாக்கினோம். ஊர்மக்கள் உதவியுடன் ஆரம்பத்தில் சிறிய அளவில் தினப்படி பூஜைகள் நடந்தன. கோயிலைப் பற்றியும், கோயிலின் தற்போதைய நிலை குறித்தும் காஞ்சி சங்கரமடத்துக்குத் தெரிவித்தோம். ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் கோயில் திருப்பணிக்காக நிதியுதவி செய்தார்கள். அப்படி ஆரம்பித்த திருப்பணியால் கோயில் சீர்செய்யப்பட்டு, பொலிவுக்கு வந்தது. இதற்கு உலகம் முழுவதும் உள்ள சிவனடியார்களே காரணம். காஞ்சி சங்கர மடத்தின் மீதும், அதன் பீடாதிபதிகள் மீதும் பக்தர்கள் வைத்திருக்கும் மரியாதையே காரணம்!'' என்று சொல்லி நெகிழ்கிறார் கிருஷ்ணகுமார்.

எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் கோயிலுக்கு வந்த ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் ஸ்ரீதெய்வநாயகியையும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரையும் வணங்கிவிட்டு, அப்படியே குரு தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சி சங்கரமடத்தின் 54-வது பீடாதிபதி ஸ்ரீவியாஸாசல சுவாமிகளின் அதிஷ்டானத்துக்கு வந்து வேண்டினர். கண்கள் மூடி, மனமுருகி நின்றனர். பிறகு, வெளியே வந்ததும், 'இப்படியரு கோயில் இருக்குன்னும், இங்கே 54-வது பீடாதிபதிக்கு அதிஷ்டானம் இருக்குன்னும் தெரியாம போச்சே!’ என்று அருகில் உள்ளவர்களிடம் ஆதங்கத்துடன் தெரிவித்தார்கள். பின்பு, 'கோயில் திருப்பணிக்கு எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார். தயங்காமல் மடத்துக்கு வரலாம்’ என்று சொல்லப்பட்டது. 'அதையடுத்து, திருப்பணிகள் மளமளவென்று நடக்க நடக்க, சங்கர மடத்தின்மீது எதிர்பாராமல் விழுந்த கறைகள் மெள்ள மெள்ள நீங்கின’ என்கிறார்கள் எழுச்சூர் கிராம மக்கள்.

''விரக்தியால் துவண்டுபோன தருணங்கள்ல, நேரா எழுச்சூர் வந்து ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் சந்நிதில என் மொத்த பாரத்தையும் இறக்கி வெச்சுடுவேன். ஒரு அரைமணி நேரம் உக்கார்ந்துட்டு, கிளம்பிப் போவேன். அடுத்தடுத்த நாட்கள்ல, என் சோகம் மொத்தமும் காணாம போய், மனசு பழையபடி உற்சாகமாகி, தொழில்ல இன்னும் சிரத்தையா உழைக்கறதுக்கான தெம்பும் உத்வேகமும் வந்துடும். இதைப் பலமுறை உணர்ந்திருக்கேன்'' என்கிறார் வாசகர் சந்திரசேகர்.

இங்கே உள்ள பெண் பனை மரம் விசேஷமானது என்கின்றனர். இந்தப் பனைமரத்தடியில் சித்தர் ஒருவர் தவம் இருந்து வந்ததாகவும், பிறகு அவர் இந்த பனைமரத்திலேயே ஐக்கியமாகி இரண்டறக் கலந்து விட்டார் என்றும் சொல்வார்கள். அன்று முதல் இன்றளவும் அவர் அந்த மரத்தில் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலித்து வருவதாகச் சிலிர்ப்புடன் தெரி விக்கின்றனர் பக்தர்கள்.

அதேபோல், வியாழக்கிழமைகளில் இங்கு வந்து, காஞ்சி மடத்தின் 54-வது பீடாதிபதி ஸ்ரீவியாஸாசல சுவாமிகள் சந்நிதியில் சிறிது நேரம் நின்று பிரார்த்திப்பது மிகுந்த பலத்தையும் பலனையும் தரும் என்பது நம்பிக்கை. அந்த நாளில், சுவாமிகளின் அதிஷ்டானத்துக்குப் பூக்களையும் காய்கனிகளையும் சமர்ப்பித்து, குருவெனத் திகழும் சுவாமிகளை மனதாரப் பிரார்த்தித்தால், வேண்டியது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என உறுதிபடத் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

''என் மனைவி அடிக்கடி வயித்து வலி வந்து அவதிப்பட்டுக்கிட்டே இருந்தா. மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்தும் ஒரு பலனும் இல்லை. அப்பதான் நண்பர் ஒருத்தர், எழுச்சூர் கோயிலைப் பத்திச் சொல்லி, 'உடனே போயிட்டு வாங்க; நல்லது நடக்கும்’னு சொன்னார். ஒருநாள் சாயந்திரம், மனைவி குழந்தைகளை அழைச்சுக்கிட்டு கோயிலுக்குப் போனேன். அன்னிக்கு பிரதோஷம் வேற! அதனால நந்திதேவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்துச்சு. கண் குளிரப் பார்த்தோம். அதன் பிறகு, அம்பாளுக்கும் சிவனாருக்கும் அபிஷேகம்! ஸ்ரீதெய்வநாயகி அம்பாளுக்கும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரருக்கும் பெரிய செவ்வந்தி மாலைகள் வாங்கிட்டுப் போயிருந்தோம். அபிஷேகம் முடிஞ்சு, அலங்காரம் பண்ணி, மாலையெல்லாம் போட்ட பிறகு, ஸ்வாமியிடமும் அம்பாளிடமும், 'என் மனைவியின் வயித்து வலியை நீங்கதான் குணப்படுத்தணும்’னு கண்ணீரோட வேண்டிக்கிட்டேன். அப்புறம் திரும்பும்போது, பக்கத்துல இருந்தவங்க, 'அங்கே பார்த்தீங்களா... ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அந்த ரெண்டு செவ்வந்தி மாலையும் எத்தனை அம்சமா, அழகா அமைஞ்சிருக்கு!’ன்னு அவங்களுக்குள்ளே பேசிக்கிட்டுப் போனாங்க. அப்படியே நெகிழ்ந்து போயிட்டேன்.

அப்புறம், கோயில்ல தந்த விபூதிப் பிரசாதத்தை தினமும் கொஞ்சம் தண்ணில கலந்து சாப்பிட்டுக்கிட்டே வந்தாங்க மனைவி. அடுத்த பிரதோஷத்துக்குள்ள மனைவியின் வயித்து வலி பூரணமா குணமாகிடுச்சு. அன்னிலேருந்து எங்களுக்குக் கண்கண்ட தெய்வம், இஷ்ட தெய்வம் எல்லாமே எழுச்சூர் நல்லிணக்கேஸ்வரரும் தெய்வநாயகி அம்பாளும்தான்!'' என்று கண்ணீருடன் சொல்கிறார் முத்துவிநாயகம். இவர் செங்கல்பட்டில் வசிக்கிறார்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் ஒவ்வொரு விதமான பிரச்னை, கவலை, ஏக்கம், துக்கம்! பிரச்னைகளைக் களைந்து, கவலைகளைப் போக்கி, ஏக்கங்களைத் தொலைத்து, துக்கங்களை ஒழித்து, நம்மை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழச் செய்யவே ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரும் ஸ்ரீதெய்வநாயகி அம்பாளும் கருணையே உருவெனக் கொண்டு, எழுச்சூரில் கோலோச்சுகின்றனர்.

வாருங்கள்... இறைவனின் அருளிலும் இறைவியின் கருணையிலும் சொக்கிப் போவீர்கள்!

- அருள் சுரக்கும்

படங்கள்: ரா.மூகாம்பிகை