Published:Updated:

ஸ்ரீஹயக்ரீவ ஹோமம்

மாணவர்கள் கல்வியில் சிறப்புற்று    விளங்க... தேர்வில் வெற்றி பெற...

ஸ்ரீஹயக்ரீவ ஹோமம்

க்திவிகடனுக்கும் வாசகர்களுக்குமான நெருங்கிய பந்தம் எப்போதுமே உண்டு. சக்திவிகடன் பத்திரிகை தொடங்கிய காலத்தி லிருந்தே, ஒவ்வொரு ஊரிலும் மிகச் சிறந்த உபன்யாசகர்களைக் கொண்டும் பேச்சாளர்களைக் கொண்டும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தியது சக்திவிகடன். அதேபோல், வாசகர்களின் நலனுக்காக ஹோமங்களும் பூஜைகளும் செய்யப்பட்டன.

கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக, பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பங்கள் சிறப்புறவேண்டும் என்பதற்காகவும் திருவிளக்கு பூஜைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது சக்திவிகடன்.

ஆன்ம பலமும், தேக பலமும் நமது வாழ்க்கையின் இரண்டு கண்கள். எனவே, ஆரோக்கியத்துடனும் மனோபலத்துடனும் வாசகர்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதற்காக, மனவளக் கலை யோகா பயிற்சி முகாம்களை கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வந்ததையும் அறிவீர்கள்.

குருப்பெயர்ச்சியின்போது திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஹோமமும் பூஜையும் நடத்தி விபூதிப் பிரசாதம், சென்னை ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலில் விசேஷ பூஜை செய்து குங்குமப் பிரசாதம், புரட்டாசி மகாளய அமாவாசை நன்னாளில், 51 தம்பதியரை வரச் செய்து, புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் முன்னோர் ஆராதனை என, வாசகர்களுடன் எப்போதும் இரண்டறக் கலந்திருக்கிறது சக்திவிகடன்.

ஸ்ரீஹயக்ரீவ ஹோமம்

இதோ... இப்போது மாணவர்களுக்கான தேர்வுகள் நெருங்கிவிட்ட இந்த வேளையில், அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் செய்வதெனத் தீர்மானித்துள்ளோம்.

ஸ்ரீஹயக்ரீவ ஹோமம்

ஸ்ரீஹயக்ரீவர் கல்விக் கடவுள். ஞானத்துக்கு அதிபதி. வேதங்களைத் திருடிச் சென்ற மதுகைடபர்களை அழித்து, வேதச் சுவடிகளை பிரம்மாவிடம் கொண்டு வந்து சேர்த்தவர். திருமால்,  பத்து அவதாரங்களைத் தவிர்த்து எடுத்த மற்றுமொரு அவதாரமே ஸ்ரீஹயக்ரீவர் என்று போற்றுவார்கள் பக்தர்கள். சக்தியின் திறனை குதிரைச் சக்தி (Horse Power) எனக் குறிப்பார்கள் அறிவியலாளர்கள். காரணம், குதிரையின் சக்தியும் வேகமும் அளப்பரியது. அதை உணர்த்துவது போன்று குதிரை முகமும் மனித உடலும் கொண்டுள்ளார் ஸ்ரீஹயக்ரீவர்.

திருவோண நட்சத்திர நாளிலும், புதன்கிழமைகளிலும் ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி, அவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபட்டால், கல்வியில் மந்தமான குழந்தைகளும் தெளிவாகி விடுவார்கள். ஞாபக சக்தியும் மனத்தில் திடமும் அதிகரிக்கும். கல்வியும் ஞானமும் கைகூடி வரும்.

இதோ... வாசகர்களாகிய உங்களின் நலனுக்காக, உங்களின் பிள்ளைச் செல்வங்கள் கல்வியில் சிறந்து விளங்க, தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற... சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில், வருகிற 9.2.14 அன்று ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் நடத்துகிறது உங்கள் சக்திவிகடன். இந்த ஹோமத்தில் மாணவர்களின் பெயர் மற்றும் நட்சத்திரம் சொல்லி, சங்கல்பம் செய்யப்படும்.

மாணவர்களின் நலன் கருதிச் செய்யும் இந்த ஹோமத்துக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

ஸ்ரீஹயக்ரீவ ஹோமம்
பின் செல்ல