Published:Updated:

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

தெய்வம் மனுஷ்ய ரூபேண! ஓவியம்: பாரதிராஜா

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

தெய்வம் மனுஷ்ய ரூபேண! ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் நான்கு வயதுக் குழந்தையாக இருந்த போது, அவருடைய தாயார் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பெருமாள்கோயில் திருவிழா காணச் சென்றார். கோயில் அருகில் ஒரு வியாபாரி, பஞ்சலோகத்தினால் ஆன நவநீதகிருஷ்ணன் விக்கிரகங் களை விற்பனைக்கு குவித்துவைத்திருந்தார்.

கிருஷ்ண விக்கிரகங்களைப் பார்த்த குழந்தை, தன் தாயின் இடுப்பில் இருந்து கீழே இறங்கி, அந்த வியாபாரியைப் பார்த்து, 'தனக்கு ஒரு விக்கிரகம் வேண்டும்’ என்று கேட்டதுடன், தானே அந்த விக்கிரகக் குவியலில் கையைவிட்டுத் துழாவி, அழகான ஒரு கிருஷ்ண விக்கிரகத்தை எடுத்துக்கொண்டது. தாயார் அதன் விலை குறித்து விசாரித்தபோது, 'வேண்டாம்மா! குழந்தை ஆசையோடு எடுத்துக்கிட்டிருக்கு. இதற்குக் காசு வேண்டாம். குழந்தைக்கு என் பரிசா இருக்கட்டும்!’ என்று காசு வாங்க மறுத்துவிட்டார்.

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மறுநாள் அந்தத் தாய், வழக்கம்போல் கோயிலுக்குச் சென்றபோது, அந்த வியாபாரி ஓடிவந்து அவரின் கால்களில் விழுந்து வணங்கினார். ''அம்மா, தங்கள் குழந்தை தெய்வக் குழந்தை! ஒரு நாளைக்கு சொற்ப பொம்மைகளே விற்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த என்னால், நேற்று ஒரே நாளில் ஆயிரம் பொம்மைகளை விற்க முடிந்தது. எல்லாம் தங்கள் குழந்தையின் தங்கக் கை பட்ட அதிர்ஷ்டம்தான்!'' என்று சொல்லி, குழந்தையின் பிஞ்சுக் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

- குருமணி ஸ்ரீநாராயண சாஸ்திரிகள் எழுதிய, 'ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்க்கை சரிதம்’ என்ற நூலிலிருந்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism