நாடே மதிக்கும் துறவி ஒருவர், அந்த நகரில் முகாமிட்டிருந்தார். நகரின் பெரிய செல்வந்தர் அந்தத் துறவியைத் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தார். துறவிக்கு, அவரின் இல்லத்தரசி அறுசுவை விருந்து பரிமாறினார்.

கசப்புச் சுவைக்காக இலையில் சிறிதளவு பாகற்காய் கூட்டு வைக்கப் பட்டிருந்தது. துறவிக்கு பாகற்காய் பிடிக்காது! ஆனால், இலையில் வைத்ததை 'வேண்டாம்!’ என்று ஒதுக்கினால், விருந்து கொடுத்தவரின் மனம் புண்படும் என்பதால், இறைவனுக்கு நைவேத்தியம் செய்து விட்டு முதலில் பாகற்காயைக் காலி செய்தார். அருகிலேயே நின்று துறவிக்குப் பரிமாறிய செல்வந்தரின் இல்லத்தரசி இதை வேறுவிதமாக நினைத்துவிட்டார்.

'ஓகோ... இந்தத் துறவிக்குப் பாகற்காய் ரொம்ப விருப்பம் போலிருக் கிறது!’ என்று நினைத்து ஒரு கரண்டி நிறைய பாகற்காயை அவர் இலையில் வைத்தார். துறவி திகைத்தார். 'எனக்கு இன்று நல்ல நாள் இல்லை போலிருக்கிறதே!’ என்று நினைத்தவராகச் சிரமப்பட்டு அதை உடனே வாய்க்குள் திணித்தார்.

இல்லத்தரசி வியந்து போனார். 'அவர் இன்னும் கேட்கக் கூச்சப் படுவார். நாமாக வைத்து விடுவோம்’ என நினைத்து இன்னும் இரண்டு கரண்டி பாகற்காயை வைத்தார்.

துறவியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? நொந்து போன அவர், 'இதோடு சரி... இனிமேல் இந்த வீட்டுக்கே வரக்கூடாது’ என நினைத்தபடி எப்படியோ சாப்பிட்டு முடித்தார்.

ஆனால், விதி யாரை விட்டது? மறுநாள், அவரை வேறொரு வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அந்த வீட்டுக்காரரின் மனைவியும் இந்தச் செல்வந்தரின் இல்லத்தரசியும் தோழிகள். துறவிக்கு எப்படி விருந்தளிப்பது என்பது குறித்து யோசனை கேட்டார் தோழி. ''அக்கா! அவருக்குப் பாகற்காய் ரொம்பப் பிடிக்கும். நான் கூட்டு செய்து பரிமாறினேன். நீங்கள் பாகற்காயில் வேறு ஏதாவது செய்து பரிமாறுங்கள்'' என்றார். மறுநாள், அந்த வீட்டு விருந்துக்குப் போன துறவியை இலை நிறைய பாகற்காய் பொரியலோடு வரவேற்றார்கள்.

இந்த விஷயம் அந்த நகரம் முழுக்கப் பரவிவிட, எல்லா வீடுகளிலும் பாகற்காய், துறவியைத் துரத்திக்கொண்டே இருந்தது. கடைசி யில் அவருக்கு 'பாகற்காய் சாமியார்’ என்று பெயர்கூட வைத்து விட்டார்கள். விருப்பமில்லாமல் பாகற்காயைச் சாப்பிட்டு வந்த துறவி சீக்கிரமே அதன் நற்பயனை உணர்ந்தார். நாளடைவில் அது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகிவிட்டது.

மனத்தைக் கட்டுப்படுத்துவது என்பது பாகற்காயைச் சாப்பிடுவது போல் நமக்கு விருப்பமில்லாத ஒன்றாகவுள்ளது. மனத்தை அதன் இஷ்டப்படி அலைபாய விட்டு நிறையப் பேர் பழகிவிட்டனர். மனம் நல்லது என்றோ, சிறந்தது என்றோ நினைக்கும் பொருட்கள் மீது மதிப்பு காட்டுகிறார்கள். இவற்றுக்கு மாறானவை மீது வெறுப்பைப் படர விடுகிறார்கள். விருப்பு வெறுப்புகளின் சுழலிலிருந்து மனத்தை விடுவிக்க வேண்டும்.

தீபாவளி நன்னாளில் ரோட்டில் நடக்கும் ஒருவர் எச்சரிக்கையாக இருப்பார். காரணம்... எல்லா தெருக்களிலும் ஏதாவது ஓர் இடத்தில் பட்டாசு வெடித்தபடி இருக்கும் என்பதை அவர் அறிவார். அதனால் பெரும் சத்தத்தோடு பட்டாசு திடீரென வெடித்தாலும் அவர் திடுக்கிட மாட்டார். அதே நேரம் சாதாரணமான ஒரு நாளில் ரோட்டில் சின்னதாக ஒரு பட்டாசுச் சத்தம் கேட்டாலும் அவருக்கு தூக்கிவாரிப் போடும். அது அவர் எதிர்பார்க்காதது!

பிரச்னைகளும் பட்டாசு மாதிரிதான். எதுவும் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்போடு இருப்பவர்கள், அவற்றைப் பக்குவத்தோடு எதிர்கொள்கிறார்கள். சின்னப் பிரச்னையைக்கூட, பெரிய தடை யாக நினைப்பவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள்.

நடக்கும் எல்லா விஷயங்களும் தாங்கள் விரும்புவது மாதிரி, சந்தோஷம் தருவதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒருவேளை அப்படி நடக்காமல் போனால், பாகற்காயின் கசப்பு துறவியின் நாக்கில் நிலைத்ததுபோல கசப்பு உணர்வு அவர்கள் மனதில் வேரூன்றி விடுகிறது. விளைவு - இறைவனும் தங்களைக் கைவிட்டுவிட்டதாகச் சொல்லிப் புலம்புகிறார்கள். மட்டுமின்றி, இந்தக் கசப்பு உணர்வு உறவுகளிலும் பிரதிபலிக்கிறது. உலகியல் வாழ்க்கையில் பிரதிபலன் பார்க்காமல் ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்துவதும் குறைகிறது.

எல்லா உயிர்களின் மீதும் உண்மையான நட்பு உணர்வுடன் இருப்பதை மைத்ரி என்கிறோம். இறைவன் மீது உண்மையான பக்தி கொண்ட ஒவ்வொரு பக்தரிடமும் இருக்க வேண்டிய பண்புகளில் இது ஒன்றாகும். மைத்ரி என்பது ஆக்கபூர்வமான, செறிவு மிக்க, கனிவான நட்பு உணர்வைக் குறிக்கிறது. உண்மையான பக்தர்கள் உலகிலுள்ள எந்த உயிரையும் வெறுக்க மாட்டார்கள். எல்லா உயிர்களிடத்திலும் இறைவன் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

உன்னத நிலையை எய்திய உண்மையான பக்தன், அனைத்து உயிர்களிலும் இறைவன் நிறைந்திருப்பதை உணர்ந்து, அவற்றுக்குத் தன்னலமற்ற சேவை செய்வதன் வாயிலாக இறைவனை வழிபடுகிறான். உண்மையான அன்பின் வெளிப்பாடு இதுதான்!

இந்த உலகத்தில் குழந்தையாகப் பிறந்து வாழ விதிக்கப்படும் எல்லோரும் தனியாகத்தான் வருகிறார்கள். போகும்போதும் தனியாகவே போகிறார்கள். எங்கு பிறப்பது, பெற்றோராக யார் இருப்பது என எதையும் யாரும் தேர்ந்தெடுப்பது இல்லை. எல்லாம் தெய்வாதீனமாக அமைகின்றன.

நதி கடலைத் தேர்ந்தெடுக்க முடியுமா? எந்த நதியாவது, 'எனக்கு இந்தக் கடலில் கலப்பது பிடிக்கவில்லை. நான் வேறொரு கடலில் பாய்ந்து என் ஓட்டத்தை முடித்துக் கொள்ளப் போகிறேன்’ என்று சொல்ல முடியுமா? அதன் பாதை அதற்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. நதிகளுக்கு இதுதான் நியதி.

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள், வசதி, வாய்ப்புகள் என எல்லாமே இறைவனால் அருளப்பட்டவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இறைவன் அருளிய செல்வத்தை நேசிப்பது போல இறைவன் படைத்த எல்லாவற்றையும் நேசிக்க வேண்டும். எல்லா வற்றையும் என்றால் உறவு, நட்பு இவற்றையும் தாண்டி அந்த இறைவன் படைத்த எல்லா உயிர்களும் அடங்கும்!

ஏராளமான பணமும் புகழும் சேர்த்து வெற்றிகரமாக வாழ்ந்த ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர்களும் அதிகம். எதிரிகளும் அநேகம். ஒருநாள் அவர் வாக்கிங் போன போது பக்கத்து வீட்டுக்காரரின் செல்ல நாய் அவரைக் கடித்துவிட்டது.

வசதியானவரின் வீட்டில் வளரும் நாய் என்பதால், வெறிநாய்க் கடி ஏற்படாது என அவர் நம்பினார். இதனால் டாக்டரிடம் போகவில்லை. ஆனால், சில நாட்களில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனைக்காக டாக்டரிடம் போனார்.

பரிசோதித்த டாக்டர், ''ஐயா! உங்களைக் கடித்தது வெறிநாயாக இருந்திருக்கிறது. இதனால் உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தாமதம் செய்துவிட்டீர் களே'' என்றார் கவலையுடன்.

இதைக் கேட்ட அந்தப் பணக்காரர் உடனே தனது சூட்கேஸைத் திறந்து ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து அவசரமாக எதையோ எழுத ஆரம்பித்தார்.இதைப் பார்த்த டாக்டருக்கு வருத்தம் ஏற்பட்டது. 'அடடா! நான் இவரிடம் உண்மையைச் சொல்லி இருக்கக்கூடாது. ஆறுதலாக இருக்கிற மாதிரி விஷயத்தைச் சொல்லியிருக்க வேண்டும். இப்போது அவர் உயில் எழுதுகிறார் போலிருக்கிறது’ என நினைத்தார். எனவே, அந்தப் பணக் காரருக்கு மனத் தெம்பை ஏற்படுத்த எண்ணி, ''ஐயா... கவலைப்பட வேண்டாம். இப்போது சில புதிய மருந்துகள் வந்துள்ளன. உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும். நம்பிக்கை இழக்க வேண்டாம். இவ்வளவு விரைவாக உயில் எழுதத் தேவையில்லை'' என்றார்.

அந்தப் பணக்காரர் நிதானமாகச் சொன்னார்: ''டாக்டர், நீங்கள் சொன்னதைக் கேட் டதும் உயிலை எழுதுகிற அளவுக்கு நான் முட்டாள் இல்லை. வெறிநாயால் நான் கடிபட்டிருக்கிறேன் என்றால், என்னிடமும் அந்த ஆட்கொல்லி நோயின் கிருமிகள் இருக்கும்தானே?''

''ஆமாம். அதனால் என்ன?''

''நான் யாரையாவது எதிர்பாராத விதமாகக் கடித்துவிட்டால், அவர்களுக்கும் இந்தக் கிருமி பரவும்தானே?''

''ஆமாம்.''

''அதனால்தான் நான் யாரை எல்லாம் கடிக்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன்.''

முற்றிலும் மனத்துய்மை பெற்றவர்களுக்கு இப்படித் தோன்றாது. ஆனால், பலருக்கு இது போலவே நினைப்பு வருகிறது. அவர்கள் எல்லோருக்கும் ஆன்மிகத்தின் உதவி தேவைப்படுகிறது.

படங்கள்: சு.குமரேசன்