Published:Updated:

'பண்பாடு சொல்லித் தர்றது பாக்கியம்!’

நெகிழ்கிறார் சொற்பொழிவாளர் கீரனூர் ராமமூர்த்தி

'பண்பாடு சொல்லித் தர்றது பாக்கியம்!’

நெகிழ்கிறார் சொற்பொழிவாளர் கீரனூர் ராமமூர்த்தி

Published:Updated:
##~##

ராமாயணம், மகாபாரதம் பற்றிய சொற்பொழிவு என்றதும் சட்டென்று நினைவுக்கு வருபவர், கீரனூர் ராமமூர்த்தி. 75 வயதுப் பெரியவர்தான் என்றாலும், மேடையேறிவிட்டால் ஒரு சின்ன தடுமாற்றமும் இன்றி மடை திறந்த வெள்ளமெனப் பிரவாகமெடுத்து வருகிறது பேச்சு. இத்தனைக்கும், இவர் முதன்முதல் மேடை ஏறியதே 65-வது வயதில்தான் என்பது வியப்புக்குரிய ஒன்று!  

''காஞ்சி சங்கர மடத்தோட 59-வது மடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் கும்பகோணம் பக்கத் துல கோவிந்தபுரத்துல இருக்கு. 2004-ம் வருஷம் அங்கே போய் தரிசிக்கிற பாக்கியம் எனக்குக் கிடைச்சுது. தரிசனம் முடிஞ்சு வெளியே வரும்போது, 90 வயசுப் பாட்டி ஒருத்தங்க எங்கிட்ட வந்து, 'இந்தா, வைச்சுக்கோ’ன்னு சொல்லி ஸ்ரீஆஞ்சநேயர் படத்தைக் கொடுத்தாங்க. அந்தப் படம் முழுவதும் 'ராமா... ராமா...’ன்னு எழுதப்பட்டிருந்துது. சிலிர்த்துப் போயிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் 1200 முறை ஸ்ரீராமஜெயம் எழுதறவன் நான். தவிர, ராம நாமம் ஜபிக்கறதையும் விடாமப்

'பண்பாடு சொல்லித் தர்றது பாக்கியம்!’

பண்ணிட்டிருக்கேன். ஒருநாள், யாரோ என்னை 'வெளியே போ’னு அதட்டுற மாதிரி கனவு. எனது ஆசான் பத்மநாப ஐயங்கார்கிட்ட கேட்டப்ப, 'நீ ராம பக்தன்னு எனக்குத் தெரியும். உன்னை ராமாயணம் செய்யச் சொல்றார் பகவான்’னு சொன்னார். அப்படி ஆரம்பிச்சதுதான் சொற்பொழிவு, உபன்யாசம் எல்லாமே! இதுக்காகவே ராமா யணம் சம்பந்தமா பிஹெச்.டி பண்ற அளவுக்குப் புத்தகங்கள் வாங்கிப் படிச்சேன்னா பாருங்களேன்'' என்று சின்னக் குழந்தைபோல விவரிக்கிறார்.

''முதல்ல 'திண்ணை ராமாயணம்’னு தலைப்பு வைச்சு, பாமரர்களுக்கும் புரியும்படி சொற்பொழிவு செய்ய ஆரம்பிச் சேன். அதன் பிறகு கோயில்கள் மட்டுமில்லாம, ஆதரவற்றோர் இல்லங்கள்லேயும் முதியோர் இல்லங்கள்லேயும் சேவை மனப்பான்மையோட உரையாற்றிக்கிட்டிருக்கேன்.  

'பரதனை நினைத்துப் பாருங்கள்; உங்களுக்குப் பதவி வெறி வராது. லட்சுமணனை நினைச்சுக்கோங்க; சேவை செய்யும் மனம் வாய்க்கும். ஸ்ரீராமனை நினையுங்கள்; சாதி, மதம் கடந்து எல்லோரிடமும் சகோதரப் பாசம் உண்டாகும்’னு விவரிச்சா, கூட்டம் மொத்தமும் சொக்கிப் போகும்'' என்று விவரித்தார்.

ராமாயணம் மட்டுமின்றி மகாபாரதம், ஸ்ரீநிவாச கல்யாணம், ஸ்ரீராமானுஜர் பெருமை, மத்வரும் ராகவேந்திரரும், மகா பெரியவா மகிமை என்ற தலைப்புகளில் சொற்பொழிவு செய்து வரும் இவர், சமூக நிகழ்வுகளையும் புராணச் சம்பவங்களையும் ஒப்பிட்டுச் சொல்லும் அழகே அழகு!

''இதிகாசங்களை விளக்கிச் சொல்றதன் மூலமா இன்றைய இளைஞர்களுக்குப் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் கத்துக் கொடுக்க முடியும். அதைச் செய்வதற்கான தெம்பு என் உடம்புலயும் புத்திலயும் இருக்கு. அது எனக்குக் கொடுப்பினை!'' என்று நெகிழ்ந்து சொல்கிறார் கீரனூர் ராமமூர்த்தி.

- இ.லோகேஷ்வரி

படங்கள்: பா.ஓவியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism