Published:Updated:

மகான் ஸ்ரீஅரவிந்தர்

தெய்வம் மனுஷ்ய ரூபேண!ஓவியம்: பாரதிராஜா

மகான் ஸ்ரீஅரவிந்தர்

தெய்வம் மனுஷ்ய ரூபேண!ஓவியம்: பாரதிராஜா

Published:Updated:

ர்மம் மனிதனை பாதிக்கத்தான்வேண்டும் என்ற கட்டாயமே இல்லை. விதி என்றும், கர்மம் என்றும் நாம் குறிப்பிடுபவை அடிப்படையில் ஒன்றுதான். விதியோ அல்லது கர்மவினையோ அது இறைவனால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மனிதன் தன் செயல்களால் தானே ஏற்படுத்திக் கொள்வதுதான்.

தன் சுபாவத்தின் பிடியில் உள்ள மனிதன் கர்மவினைக்கும் விதிக்கும் கட்டுப்பட்டே ஆகவேண்டும். தான் இயற்கையின் ஒரு சிறு பகுதி அல்ல, பரமபுருஷனான ஆத்மாவின் அம்சமே என்பதை உணரும்போது, அதன்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது, தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட கர்மவினைகளைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்ளமுடியும்.

மகான் ஸ்ரீஅரவிந்தர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கர்மவினைகளின் தாக்கத்தில் இருந்து ஒவ்வொரு மனிதனாலும் விடுபடமுடியும். தான் பரமபுருஷனான ஆத்மாவின் அம்சம் என்பதை உணர்ந்துகொள்ள தியானம் உதவி புரியும்.

தியானம் செய்வதற்குத் தனிமையைத் தேடிச் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டின் பூஜை அறையே போதுமானது. தொடக்கத்தில் மனம் கட்டுப்பட மறுத்தாலும், தொடர்ந்த முயற்சியினால் சாத்தியம்தான்.

- 'ஸ்ரீ அரவிந்தரின் அமுதமொழிகள்’ என்ற நூலில் இருந்து.                            

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism