Published:Updated:

உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் இஃப்தார் நோன்பு... கர்நாடகாவில் நெகிழ்ச்சி!

உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் இஃப்தார் நோன்பு... கர்நாடகாவில் நெகிழ்ச்சி!
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் இஃப்தார் நோன்பு... கர்நாடகாவில் நெகிழ்ச்சி!

கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணர் கோயிலில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். 

உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் இஃப்தார் நோன்பு... கர்நாடகாவில் நெகிழ்ச்சி!

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது, உடுப்பி கிருஷ்ணர் கோயில். இந்திய அளவில் இந்தக் கோயில் மிகவும் பிரபலமாகும். இந்தக் கோயிலில் முதல்முறையாக நேற்று மாலை, இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் விழா நடைபெற்றது. விழாவை, கோயிலின் மூத்த சுவாமி விஸ்வேஷ தீர்த்த சுவாமி ஏற்பாடுசெய்திருந்தார். அந்த விழாவில் 150-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணர் கோயிலின் அன்னதான மடத்தில் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு வாழைப்பழம், ஆப்பிள், தர்பூசணி, பேரீச்சை, முந்திரிப் பருப்பு மற்றும் கஷாயம் ஆகியவை வழங்கப்பட்டன. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் சகிப்புத் தன்மையுடன் இருப்பதற்காக இந்த விழாவை ஏற்பாடு செய்ததாக விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, சமூக வலைதளங்களில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.