சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

உறங்காப் புளி!

ஆலயம்... அபூர்வம்!

உறங்காப் புளி!

பாண்டிய நாட்டு திவ்யதேசங்களில் ஒன்று திருக்குருகூர் எனப் புராணங்கள் போற்றும் ஆழ்வார்திருநகரி. திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. பெருமாள் ஸ்ரீஆதிநாதனாக அருளும் இந்தத் தலத்துக்குச் சிறப்பு சேர்க்கிறது உறங்காப் புளி. இந்த மரத்தை ஸ்ரீலட்சுமண அம்சம் எனப் போற்றுகிறது தலபுராணம்.

ஒருமுறை, பெற்றோருடன் ஆலயத்துக்கு வந்த குழந்தை ஒன்று தவழ்ந்தபடியே வந்து இந்த மரத்தின் பொந்துக்குள் நுழைந்து உட்கார்ந்து கொண்டது. குழந்தையைத் தேடிய பெற்றோர், கிடைக்காது திரும்பினார்கள். சுமார் 32 வருடங்கள், இந்த மரத்தின் அரவணைப்பில் வாழ்ந்து வளர்ந்த அந்தக் குழந்தையே நம்மாழ்வார்.

ஸ்ரீராமனை இரவும் பகலும் உறங்காமல் பார்த்துக்கொண்ட இளவலைப் போன்று, ஆழ்வாரை புளியமரம் பார்த்துக்கொண்டதால், இந்த மரத்துக்கு உறங்காப்புளி என்று திருப் பெயர். இதன் இலைகள், இரவில்கூட மூடிக் கொள்ளாமல், விரிந்த நிலையிலேயே அதாவது விழித்த நிலையிலேயே இருக்குமாம்! 5,000 வருடங்கள் பழைமையானது என்றும் கூறுவர். மருத்துவ குணம் மிகுந்தது இந்த விருட்சம். இதன் பட்டையை வீட்டுப் பூஜையறையில் வைத்து, தினமும் வழிபட்டு வந்தால், தீய சக்திகள் வீட்டுக்குள் அண்டாது எனச் சிலிர்ப்புடன் கூறுகிறார்கள், இப்பகுதி மக்கள்.

உறங்காப் புளி!

கட்டுரை, படங்கள்: தி.ஹரிஹரன்