அது -அம்பிகை அருளாட்சி புரியும் சக்தி பீடம்!

அந்த சக்தி பீடத்தில் -

அம்பிகையின் சந்நிதியில் -

நள்ளிரவைக் கடந்துவிட்ட நிலையிலும்கூட, அம்பிகையின் சந்நிதியில் அமர்ந்திருந்த அந்த மகான், தம்மை மறந்த நிலையில் பூஜையில் லயித்திருந்தார். அவருடைய கண்களில் கருணையும், கனிவும் நிரம்பி இருந்தாலும்கூட, மெல்லியதாக ஒரு கலக்கமும் இழையோடி இருந்தது.

அவர் தவத்திலும், யோகத்திலும் எல்லையற்ற சாதனைகளைப் புரிந்தவர். தவவலிமையும், யோக ஸித்தியும் ஒருசேரப் பெற்றிருந்த அந்த மகான், நாளின் பெரும் பகுதி அம்பிகையின் பூஜையிலும், தியானத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். மிகத் தீவிரமான வைராக்கிய புருஷர். தமது நாற்பதாவது வயதில் இருந்து, ஒரு பிடி வேக வைத்த பாகற்காயை மட்டுமே அன்றாட உணவாகக் கொண்டவர் என்பதில் இருந்தே அவருடைய வைராக்கியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனாலேயே 'பாகற்காய் சாமியார்’ என்று பக்தர்களால் அழைக்கப் பெற்றவர்.

மகான் என்றால் மகிமைகள் அனைத்தும் பொருந்தியவர் என்று பொருள். பொருளுக்குப் பொருத்தமான மகான் அவர். அவரின் யோக ஸித்தியினாலும், அவர் கைவரப் பெற்றிருந்த மந்திர சக்தியினாலும் எண்ணற்ற பல அதிசயங்களை நிகழ்த்தியவர். அவர் நிகழ்த்திய பல அதிசயங்களைப் பின்னர் தொடர்ந்து பார்ப்பதற்கு முன், இங்கே ஓர் அதிசயத்தை மட்டும் காண்போம்.

நம்முடைய மகான் அவர்கள் தம்முடைய வாழ்நாளில் பலமுறை விஜய யாத்திரை செய்திருக்கிறார். அப்படி ஒரு விஜய யாத்திரையின்போது, கிராமம் ஒன்றுக்கு விஜயம் செய்ய இருப்பதாக ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது.

கிராமத் தலைவர் பரபரப்பாகச் செயல்பட்டார். மகான் தங்குவதற்காகவும், பூஜை வழிபாடுகள் செய்யவும் விசாலமான ஒரு வீடு தேவைப்பட்டது.

அந்தக் கிராமத்தில் ஒரு பணக் காரர், தான் வசிப்பதற்காக சொகுசாக ஒரு பங்களா கட்டியி ருந்தார். கிரகப் பிரவேசம் செய்து, குடிபோகப் போகும் நேரத்தில், அந்த பங்களாவில் ஒரு பிரம்ம ராட்சஸ் புகுந்து விட்டது. அதன் அட்டகாசத்தைப் பொறுக்க மாட்டாத அந்தச் செல்வந்தர், பங்களாவைப் பூட்டிவிட்டு, வேறு இடத்துக்குப் போய்விட்டார்.

நம்முடைய மகான் அந்த கிராமத்துக்கு வர இருப்பதைத் தெரிந்துகொண்ட செல்வந்தர், 'மந்திர சக்தி கொண்ட அந்த மகான் தன் பங்களாவில் தங்கி னால், அவர் பிரம்ம ராட்சஸை விரட்டி விடுவார்’ என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் விஷயத்தை நேரடியாகச் சொன்னால் ஒப்புக் கொள்வார்களோ, மாட்டார்களோ என்ற தயக்கமும் இருந்தது.

அந்த நேரம் பார்த்து, அந்த மகான் தங்குவதற்கு வசதியான இடத்தை ஊர்ப் பெரியவர் தேடிக்கொண்டிருப்பதாக அறிந்துகொண்ட செல்வந்தர், அவரிடம் சென்று, பூட்டிக் கிடக்கும் தன் பங்களாவை சுத்தப்படுத்தித் தருவதாகக் கூறினார். ஊர்ப்பெரியவரும் சம்மதித்தார்.

அதையடுத்து அந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்து, பரிவாரங்களுடன் அந்த பங்களாவில் தங்கினார் மகான்.

பூஜை புனஸ்காரங்களை முடித்துக்கொண்டு, வந்திருந்த பக்தர்களை ஆசிர்வதித்து அனுப்பிய மகான், வழக்கம்போல் தம்முடைய ஏகாந்த பூஜையில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு வேளையில் அவருடைய பரிவாரத்தைச் சேர்ந்த ஒரு வித்வானுடைய ஆடைகளை உடுத்திக்கொண்டு, சால்வையை தோளில் போர்த்திக்கொண்டு யாரோ ஒருவர் நடந்து செல்வதைப் பார்த்தார். அவர் மடத்து வித்வான்தான் என்று நினைத்து, உட்காரும்படியாக சைகை செய்தார். அந்த உருவம் உட்காருவதாகத் தெரியவில்லை.

சந்தேகப்பட்டு உற்றுப் பார்த்ததில், விஷயத்தை விளங்கிக்கொண்ட நம்முடைய மகான், தம் வலது கரத்தில் சிறிதளவு தீர்த்தத்தை எடுத்து நரஸிம்ஹ மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்து, அந்த உருவத்தின் மேல் தெளித்தார். அதன் சக்தியைத் தாங்கமாட்டாமல், 'எரிகிறதே, எரிகிறதே’ என்று சத்தம் போட்டபடி, ஓடிப்போய் அந்த வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் விழுந்தது அந்த உருவம். இந்த சத்தத்தைக் கேட்டு, உறங்கிக் கொண்டிருந்த பரிவாரங்கள் அச்சத்துடன் வந்து பார்க்கையில் அங்கு யாரும் தென்படாததையும், கிணற்றில் ஆடையும் சால்வையும் மிதப்பதையும் கண்டார்கள். மறுநாள் காலையில், கிராமத்தில் செய்தி பரவியது. அதைக் கேள்விப்பட்ட செல்வந்தர். ஓடோடி வந்து மகானைப் பணிந்து வணங்கி, பிரம்மராட்சஸ் பற்றிய விவரத்தைக் கூறினார். அவரை அன்புடனும் கனிவுடனும் பார்த்த மகான், ''இன்றோடு உங்களுக்கு இருந்த தொல்லைகள் எல்லாம் நீங்கிவிட்டன. இனி நீங்கள் பயப்படாமல் இங்கேயே வாசம் செய்யலாம்’ என்று அருள் புரிந்தார்.

இதைப்போல பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய சக்தியைத் தம் மந்திரசக்தியினாலும் யோகசித்தியினாலும் கைவரப் பெற்றிருந்த மகானின் கண்களில் அப்படியொரு கலக்கம் இழையோட என்ன காரணம்?

பற்றையும் பந்தபாசங்களையும் துறந்து சந்நியாசம் ஏற்றிருந்த அந்த மகானின் கலக்கத்துக்கு, அவருடைய சொந்த நலன் காரணம் அல்ல! தமக்குப் பின் அந்தப் பீடத்தை நிர்வகிக்கத் தகுதியான ஒரு சீடர் கிடைக்கவில்லையே என்ற கலக்கம்தான்!

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவுக்கு வந்திருந்த மகான், பல இடங்களில் இருந்தும் ஜாதகங்களை வரவழைத்துப் பார்த்துவிட்டார். ஒன்றுமே சரியாக அமையவில்லை. இப்படியே போனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஏற்பட்ட கலக்கம்தான் அவரை அப்படி நிலைகொள்ள விடாமல் தவிக்க வைத்தது.

அறுபது வயதை நெருங்கிய நிலையில், இனி தம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்று நினைத்தவர்போல், அம்பிகையிடம் சரணடைந்துவிட்டார் அவர்.

அவர் அப்படித் தவிப்பதற்கு காரணம் இருக்கவே செய்தது. அவர் உன்னதமான அந்தப் பீடத்தின் அதிபதியாக வந்த நேரம் அப்படி.

அந்தப் பீடம் எது? அந்த மகான் யார்? அவர் பீடாதிபதியானதுதான் எப்படி?

சகல வித்யைகளுக்கும், ஞானத்துக்கும் ஆதாரமாக விளங்குவதும், ஜகத்குரு ஆதிசங்கரரால், பாரதத்தின் தென் திசையில் அமைந்துள்ள சிருங்கேரியில் நிறுவப்பட்டதுமான ஸ்ரீசாரதா பீடமே அது!

அந்த மகான் - ஸ்ரீசாரதா பீடத்தின் 32-வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஸ்ரீநரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள்தான்.

அவர் அந்த மடத்தின் பீடாதிபதியானது ஸ்ரீசாரதையின் அருளினாலேயே நிறைவேறியது.

என்னதான் அவர் பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தாலும், ஸ்ரீ சாரதா தேவி, அவரை அந்தப் பொறுப்பை ஏற்கச் செய்துவிட்டாள்.

உண்மைதான். வேண்டாம் வேண்டாம் என்று விலகிப் போனாலும், அவர் பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக் கொள்ளத்தான் நேரிட்டது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அற்புதச் சம்பவம் அது!

அப்போது நம்முடைய மகானுக்கு இளம்வயது. அவருடைய பூர்வாஸ்ரமப் பெயர் தெரியவில்லை. எனவே, அவர் பீடாதி பதியாகப் பொறுப்பேற்று பட்டப் பெயர் பெறும்வரை அவரை நம்முடைய மகான் என்றே அழைப்போம். ஸ்ரீ சாரதா பீடத்தின் அப்போதைய பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த பாரதி ஸ்வாமிகள், நம்முடைய மகானையே தமக்குப் பின் பீடாதிபதியாக நியமிக்கவேண்டும் என விரும்பினார்.

தன் விருப்பத்தை நம்முடைய மகானிடம் தெரிவித்தபோது, அதை மறுத்ததுடன், தாம் காசிக்குச் சென்று அனைத்து சாஸ்திரங்களையும் கற்க விரும்புவதாகக் கூறி, தன்னந்தனியராகவே காசிக்குச் சென்று, அஹோபில பண்டிதரின் சீடரான

வாஞ்சேசுவர சாஸ்திரிகள் என்பவரிடம் சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்தார்.

காசிக்குச் சென்ற நம்முடைய மகான் எப்போது வருவார் என்பது தெரியாததாலும், தம்முடைய தேக ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாலும், அருகிலேயே இருந்த ஒருவரைத் தேர்வு செய்து அவருக்கு, ஸ்ரீ அபிநவ ஸச்சிதானந்த பாரதி என்ற தீட்சா நாமமும் அளித்து பீடாதிபதியாக நியமித்ததுடன், நம்முடைய மகானை பீடாதிபதியாக நியமிக்க இருந்த தன் விருப்பத்தையும் தெரிவித்தார் ஸ்ரீசச்சிதானந்த பாரதி ஸ்வாமிகள். மறுநாளே அவர் ஸித்தியடைந்துவிட்டார்.

சில வருடங்கள் சென்றன. காசிக்குச் சென்றிருந்த நம்முடைய மகான் சிருங்கேரிக்குத் திரும்பியதைத் தெரிந்துகொண்ட ஸ்ரீ அபிநவ ஸச்சிதானந்த பாரதி ஸ்வாமிகள், அவரை அழைத்துவரச் செய்தார். அவரிடம் தம்முடைய குருநாதரின் விருப்பத்தைத் தெரிவித்து, அவரை பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படியாகக் கூறினார்.

ஆனால், நம்முடைய மகான், தம்முடைய பற்றுகளையும் பந்தபாசங்களையும் நிவர்த்தித் தால் மட்டுமே தம்மால் பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார். அதற்கு ஸ்ரீ அபிநவ ஸச்சிதானந்த பாரதி ஸ்வாமிகள், பீடாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்வதே பற்றுகளை நிவர்த்தித்துக் கொள்வதற்கான வழிதான் என்று கூறவே, நம்முடைய மகான் வேறுவழி இல்லாமல் சந்நியாச தீட்சை பெற்று, ஸ்ரீநரசிம்ம பாரதி என்ற பட்டப் பெயருடன் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அடுத்த ஆறாவது நாள், ஸ்ரீஅபிநவ ஸச்சிதானந்த பாரதி ஸித்தியடைந்துவிட்டார்.

21-வது வயதிலேயே பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டாலும், தக்கவர்களின் ஆலோசனையுடன் ஸ்ரீ சாரதா பீடத்தின் நிர்வாகத்தைச் சிறப்புடன் மேற்கொண்டார் ஸ்ரீநரசிம்ம பாரதி.

தாம் 60 வயதை நெருங்கிய நிலையில், பீடத்துக்கு தக்கதொரு நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியமும் முக்கியத்துவமும் அவருக்கு வந்தது.

அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டும் சரிவர அமையவில்லை. எனவேதான், அந்த நள்ளிரவு வேளையில் தமது ஏகாந்த பூஜையின்போது ஸ்ரீ சாரதையிடமே பரிபூரணமாகச் சரணடைந் தார். அப்போது, பூஜாமண்டபத்தின் ஒருபக்கமாக, பட்டாடை உடுத்திய ஒரு பெண் கால்சலங்கை ஒலிக்க நடந்துசெல்வது போல இருந்தது. 'ஸ்தலத்தை விட்டுச் செல்’ என்று சொல்வதுபோல ஒரு குரலும் கேட்டது.

'ஸ்தலத்தை விட்டுச் செல் என்றால் என்ன பொருள் என்று அவருக்கு விளங்கவில்லை. சற்றுநேரம் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார்.

அடடா..! அதன் பொருள்..?

தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்