சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

நவகிரக தரிசனம்!

நவகிரக தரிசனம்!

நவகிரக தரிசனம்!

திருக்கண்ணபுரம்- திருவாரூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது, இந்த திவ்யதேசம். மூலவராக நீலமேக பெருமாளும், உற்ஸவராக ஸ்ரீசௌரிராஜ பெருமாளும் அருளும் இந்தத் திருத்தலம் அரண்யம், புரம், விமானம், புஷ்கரணி, நதி, கடல் என ஸப்த புண்ணியங்கள் நிறைந்தது. இந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு, நவகிரக தரிசனம்!

இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, ஒன்பது நதிகள் சங்கமிக்கும் இங்குள்ள நித்ய புஷ்கரணியில் 48 நாட்கள் நீராடி, நவகிரகங்களை வழிபட தோஷம் நீங்கும் என்று பிரம்மன் அறிவுறுத்தினாராம். அதன்படி இந்திரன் இங்குள்ள நவகிரகங்களை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றான் என்கிறது தலபுராணம்.திருக்கோயிலின் வெளிப்பிராகார சுவரில் புடைப்புச் சிற்பமாக நவகிரக மூர்த்திகள் அருள்கிறார்கள். இது, வைணவ திருக்கோயில்களில் காண்பதற்கரிய தரிசனம்!

நித்ய புஷ்கரணியின் தீர்த்தத்தைப் பருக, மறுபிறவி கிடையாது. சங்கராந்தியை ஒட்டிய மூன்று தினங்களில் இதன் 9 படித்துறைகளிலும் நீராடி ஸ்ரீசௌரிராஜரை வழிபட, மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும், நீத்தாருக்கான திதிகளை இங்கு செய்தால் 'கயை’ க்ஷேத்திரத்தில் செய்ததற்கான பலன் கிடைக்கும்.

நவகிரக தரிசனம்!

கட்டுரை, படங்கள்:    கு.கார்முகில்வண்ணன்